தீ (பாடகி)
தீட்சிதா வெங்கடேசன் (26 சூன் 1998) என்பவர் தீ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டு தமிழ் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படத்துறையில் பல பாடல்கள் பாடுகிறார். 2014ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் 'நான் நீ' என்ற பாடலை பாடியதற்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ் மற்றும் விஜய் விருதுகள் சிறந்த பெண் பின்னணிப் பாடகி போன்ற விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
தீ | |
---|---|
இயற்பெயர் | தீட்சிதா வெங்கடேசன் |
பிறப்பு | 26 சூன் 1998 சிட்னி, ஆஸ்திரேலியா |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகி |
இசைத்துறையில் | 2013–இன்று வரை |
தொழில்
தொகுதீட்சிதா 1998 சூன் 27 இல் ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் இலங்கைத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவரது தாயார் மீனாட்சி ஐயர் சந்தோஷ் நாராயணனை மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு சுதீக்ஷன் என்ற மூத்த சகோதரர் உண்டு. இவர் தனது கல்வியின் இடைவேளையின் போது சந்தோஷ் நாராயணன் ஆல்பங்களான பீட்சா II: வில்லா (2013) மற்றும் குக்கூ (2014) ஆகிய திரைப்படங்களில் இரண்டு பாடல்களைப் பாடி தன்னை ஒரு பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
சிறிய இடைவேளைக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நான் நீ என்ற பாடலை பாடகி சக்திஸ்ரீ கோபாலன் உடன் இணைத்து பாடியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த பாடலுக்காக சிறந்த பாடகிக்கான பிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருதுகள் போன்ற விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[1]
2016 இல் சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று என்ற குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் என் சண்டைக்காரா மற்றும் உசுரு நாரம்பேலி போன்ற பாடல்கள் பாடியுள்ளார். 'என் சண்டைக்காரா' என்ற பாடலுக்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[2][3][4][5] அதை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்த திரைப்படங்களான இறைவி (2016), குரு (2017), மேயாத மான் (2017), காலா (2018), வட சென்னை (2018), போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
2017ஆம் ஆண்டில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் தெலுங்கு மொழி மறுதயாரிப்பான குரு என்ற திரைப்படத்திலும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இதுவே இவரின் முதல் தெலுங்கு பாடலாகும். அதை தொடர்ந்து 2018 இல் நடித்த காலா என்ற திரைப்படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா' என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் மிகவும் பிரபலாமானது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த மாரி 2 திரைப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடலை நடிகர் தனுஷால் எழுதப்பட்டு மற்றும் அவருடன் இணைத்து பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானது மற்றும் யூடியூப்பில் அதிகஅளவு மக்களால் பார்க்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.[6][7] அதை தொடர்ந்து 2019 இல் மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் 'வானில் இருள்' என்ற பாடலை பாடியுளளார். மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் சூரரைப் போற்று என்ற படத்திலும் பாடல் ஒன்று பாடியுள்ளார்.
பாடல்கள்
தொகுஆண்டு | பாடல் தலைப்பு | படம் | இசையமைப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2013 | "டிஸ்கோ வுமன்" | பீட்சா II: வில்லா | சந்தோஷ் நாராயணன் | |
2014 | "ஏன்டா மாப்பிளை" | குக்கூ | சந்தோஷ் நாராயணன் | |
2014 | "நான் நீ" | மெட்ராஸ் | சந்தோஷ் நாராயணன் | பரிந்துரை—சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது பரிந்துரை—விஜய் விருதுகள் சிறந்த பெண் பின்னணிப் பாடகி |
2016 | "ஏ சண்டகாரா" "உசுரு நரம்புலே" |
இறுதிச்சுற்று | சந்தோஷ் நாராயணன் | பரிந்துரை—தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் |
2016 | "துஷ்டா" | இறைவி | சந்தோஷ் நாராயணன் | |
2017 | "ஓ சக்கனோடா" "குண்டலத்துளாலோ" |
குரு | சந்தோஷ் நாராயணன் | தெலுங்கு மொழி |
"ரத்தினா கட்டி" | மேயாத மான் | சந்தோஷ் நாராயணன் | ||
2018 | "கண்ணம்மா கண்ணம்மா" | காலா | சந்தோஷ் நாராயணன் | |
"மாடிலா நிக்குரா மான்குட்டி" | வட சென்னை | சந்தோஷ் நாராயணன் | ||
"ரவுடி பேபி" | மாரி 2 | யுவன் சங்கர் ராஜா | ||
2019 | "வானில் இருள்" | நேர்கொண்ட பார்வை | யுவன் சங்கர் ராஜா | |
2019 | "மனமெங்கும் மாய ஊஞ்சல்" | ஜிப்சி | சந்தோஷ் நாராயணன் | |
2020 | "காட்டுபயலே" | சூரரைப் போற்று | ஜி. வி. பிரகாஷ் குமார் | |
2021 | "எஞ்சாயி எஞ்சாமி" | எஞ்சாயி எஞ்சாமி | சந்தோஷ் நாராயணன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nominations for the 62nd Britannia Filmfare Awards (South)". Filmfare.com. 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- ↑ "Irudhi Suttru Songs Review". Only Kollywood. 2016-01-05. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- ↑ "Irudhi Suttru (aka) Iruthi Suttru songs review". Behindwoods.com. 2016-01-04. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- ↑ "Irudhi Suttru- A sparkling album!". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- ↑ "Irudhi Suttru Music Review". Top10 Cinema. 2016-01-04. Archived from the original on 2021-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- ↑ "Straight outta Madras: Tamil songs from 2018 that will teleport you to the city instantly!". www.newindianexpress.com.
- ↑ "Dhanush-Sai Pallavi's peppy song 'Rowdy Baby' from 'Maari 2' out—Watch". zeenews.india.com.