துருசேவர் சுல்தான்

உதுமானிய இளவரசி

அத்தீசு அய்ரியே அய்சே துருசேவர் சுல்தான் (Hatice Hayriye Ayşe Dürrüşehvar Sultan) (26 ஜனவரி 1914 - 7 பிப்ரவரி 2006) ஒரு உதுமானிய இளவரசியாவார். திருமணத்திற்குப் பிறகு துருசேவர் துர்தானா பேகம் சாகிபா, பேரர் இளவரசி எனப் பெயர் பெற்றார்.[1] [2] [3] இவர், உதுமானிய கலீபகத்தின் கடைசி கலீபா இரண்டாம் அப்துல்மசித்தின் ஒரே மகளாவார்.

துருசேவர் சுல்தான்
பெராரின் இளவரசியும் உதுமானியப் பேரரசின் இளவரசியும்
செசில் பேட்டன் எடுத்து புகைப்படம்
பிறப்பு(1914-01-26)26 சனவரி 1914
காம்லிகா அரண்மனை, உஸ்குதர், உதுமானியப் பேரரசு
(இன்றைய இசுதான்புல், துருக்கி)
இறப்பு7 பெப்ரவரி 2006(2006-02-07) (அகவை 92)
இலண்டன், இங்கிலாந்து
புதைத்த இடம்
புரூக்வுட் கல்லறை
துணைவர்
ஆசம் ஜா]]
(தி. 1931; ம.மு. 1954)
குழந்தைகளின்
பெயர்கள்
  • முக்ரம் ஜா
  • முபாகம் ஜா
பெயர்கள்
அத்தீசு அய்ரியே அய்சே துருசேவர் சுல்தான்
Hatice Hayriye Ayşe Dürrüşehvar Sultan
தந்தைஇரண்டாம் அப்துல்மஜித்
தாய்மெஹிஸ்டி ஹனாம்
மதம்சுன்னி இசுலாம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு
 
ஏப்ரல் 1920 இல் சபிகா சுல்தானின் திருமணத்தில் துருசேவர் சுல்தான் (இடமிருந்து இரண்டாவது)
 
தனது ஒன்பதாவது வயதில் துருசேவர் சுல்தான் , 1923

துர்சேவர் சுல்தான் 26 ஜனவரி 1914 அன்று இசுதான்புல்லின் ஒரு பகுதியாக இருந்த உசுகுதர் என்னுமிடத்தில் அப்துல்மசித் மற்றும் மெஹிஸ்டி ஹனாம் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தார்.[4] அப்போது உதுமானிய கலீபகம் கலிபா அதன் கடைசி கட்டத்திலிருந்தது.[5] இவரது தந்தையின் முதல் மனைவியின் மூலம் பிறந்த செக்தே இமெர் பாரூக் என்ற ஒரு சகோதரன் இருந்தார்.[6]

மார்ச் 1924 இல் ஏகாதிபத்திய குடும்பம் நாடுகடத்தப்பட்டபோது, துருசேவர் மற்றும் இவரது குடும்பத்தினர் பிரான்சின் நீஸ் நகரில் குடியேறினர். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆட்சியாளருடன் நட்புறவு கொண்ட பிரிட்டிஷ் செம்பிறை சங்கம், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் இவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தது. சௌகத் அலி மற்றும் அவரது சகோதரர் முகம்மது அலி ஜவகர் ஆகியோரின் வேண்டுகோளின்படி ஐதராபாத் நிசாமான ஓசுமான் அலி கான் கலீபகத்துக்கு மூன்னூறு பவுண்டுகள் வாழ்நாள் மாத ஓய்வூதியத்தையும், குடும்பத்தில் உள்ள பல நபர்களுக்கு கொடுப்பனவுகளையும் அனுப்ப முடிவு செய்தார்.[7]

திருமணம்

தொகு

நவம்பர் 12,1931 அன்று, பதினேழு வயதில், துருசேவர் ஐதராபாத்தின் நிசாம் ஓசுமான் அலி கானின் கடைசி மகன் ஆசம் சா என்பவரை மணந்தார்.[8][9][10] [11] திருமணத்திற்கு பல்வேறு இந்திய இளவரசர்ளும் வந்திருந்தனர்.[8] [11] [12]

நீஸில் நடந்த கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, இளவரசியும் அவரது கணவரும் 1931 டிசம்பர் 12 ஐதராபாத்துக்கு கப்பலில் திரும்பினர்.[7][11] [8] 1931இல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் மாநாட்டில் கலந்து கொண்டு கப்பலில் திரும்பிய காந்தி, இவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது [13][14][15]

பொது வாழ்க்கை

தொகு

மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நன்கு படித்த பெண்மணியான இவர் பிரெஞ்சு, துருக்கி, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் சரளமாக இருந்தார்.[16] இவர் ஒரு ஓவியராகவும் கவிஞராகவும் இருந்தார் .[17] இவர் தனது பெயரில் சிறுமிகளுக்காக ஐதராபாத்தில் உசுமானியா பொது மருத்துவமனை என்ற பெயரில் கல்லூரியை நிறுவினார்.[7] நவம்பர் 4,1936 அன்று, ஐதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தின் முதல் முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.[18][16] 1939 ஆம் ஆண்டில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற அஜ்மல் கான் திபியா கல்லூரி மருத்துவமனையையும் இவர் திறந்து வைத்தார்.[7][19]

தனது உறவினர் நிலோபருடன் சேர்ந்து, துருசேவர் பெண்கள் கல்வி மற்றும் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். நிசாம் தனது மருமகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. டென்னிசு மற்றும் குதிரை சவாரி போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க இருவரையும் அவர் ஊக்குவித்தார். இவர்கள் அருங்காட்சியகங்களுக்கு கலைப் படைப்புகளைச் சேர்க்கவும் நிசாம் இவர்களை ஐரோப்பியச் சுற்றுப்பயணங்களுக்கு அனுப்பினார்.[16]

துருசேவ் சுல்தான், பிப்ரவரி 7,2006 அன்று இலண்டனில் காலமானார்.[7][20] இவர் இறக்கும் போது அவரது இரண்டு மகன்களும் இவருடன் இருந்தனர்.[16] புரூக்வுட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[21][22] [23]

நினைவு

தொகு

‘மௌனத்தின் சக்தி’யை கற்பித்ததற்காகவும், ஐதராபாத்தில் பல மகப்பேறு அலகுகள், பள்ளிகள், கல்லூரிகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை நிறுவியதற்காகவும் துருசேவர் நினைவுகூரப்படுகிறார்.[24]

மேற்கோள்கள்

தொகு
  1. The Prescriber. 1946. p. 62.
  2. The Feudatory and zemindari India. 1946. p. 241.
  3. Truffle Hunt with Sacheverell Sitwell. 1953. p. 86.
  4. Uçan, Lâle (2019). Son Halife Abdülmecid Efendi'nin Hayatı - Şehzâlik, Veliahtlık ve Halifelik Yılları (PDF) (PhD Thesis). Istanbul University Institute of Social Sciences. p. 258.
  5. Adra, Jamil (2005). Genealogy of the Imperial Ottoman Family 2005. pp. 37-38.
  6. Adra, Jamil (2005). Genealogy of the Imperial Ottoman Family 2005. pp. 37-38.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Seshan, K S S (2018-10-30). "The progressive princess of Hyderabad". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  8. 8.0 8.1 8.2 Bardakçı 2017, ப. 123.
  9. Bardakçı 2017, ப. 124.
  10. Bardakçı 2017, ப. 125.
  11. 11.0 11.1 11.2 Bardakçı 2017, ப. 126.
  12. Bardakçı 2017, ப. 126–127.
  13. Garari, Kaniza (2019-09-30). "Did Mahatma Gandhi meet Princess Niloufer on ship? Panel looks for clues". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  14. Garari, Kaniza (2019-10-01). "Hyderabad: Mahatma Gandhi did meet Niloufer, Durrushehvar on ship". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  15. Acharya, Arvind (2016-01-17). "Revealed: Mahatma Gandhi had big impact on Princess Niloufer". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  16. 16.0 16.1 16.2 16.3 Khan, Elisabeth (2020-04-16). "Ottoman Princesses in India (3). Princess Durru Shehvar, daughter of the…". Medium. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  17. "Princess Dürrühsehvar, Princess of Berar; Caliph Abdulmecid Khan II of Turkey; Nawab Azam Jah, Prince of Berar". Portrait. பார்க்கப்பட்ட நாள் 2021-03-10.
  18. "Display of Asaf Jahi dynasty priceless objects reveals its contributions to Hyderabad". India Today. 2013-01-10. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  19. Ashraf, Md Umar (2018-12-21). "Princess Durru Shehvar :- A Turkish princes married to an Indian prince". Heritage Times. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  20. Bardakçı 2017, ப. xiv.
  21. Peter Clark (2010). Istanbul: A Cultural and Literary History. Signal Books. p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-904955-76-4.
  22. Yunus Ayata (2007). Dergi semasında bir yıldız: Utarid. Salkımsöğüt Yayınları. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-975-6122-54-9.
  23. Doğan, İbrahim (13–19 February 2006). "Türkiye'de gömülmek istemedi (She didn't want to be buried in Turkey.)". Aksiyon. Dosyalar ( Files ) (584). (Mainly in Turkish)
  24. Poddar, Abhishek; Gaskell, Nathaniel; Pramod Kumar, K. G; Museum of Art & Photography (Bangalore, India) (2015). "Palanpur". Maharanis: women of royal India (in English). Ahmedabad. pp. 42–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-85360-06-0. இணையக் கணினி நூலக மைய எண் 932267190.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: unrecognized language (link)

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருசேவர்_சுல்தான்&oldid=4170904" இலிருந்து மீள்விக்கப்பட்டது