துருவ் ராட்டி
துருவ் ராட்டி (Dhruv Rathee, பிறப்பு 8 அக்டோபர் 1994) என்பவர் ஒரு இந்திய வலையொளியாளர், வோல்கர், சமூக ஊடக செயற்பாட்டாளர். இவர் சமூக, அரசியல், சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்த தனது யூடியூப் காணொளிகளுக்காக அறியப்படுகிறார். 2024 சூன் நிலவரப்படி, இவர் அனைத்து வலையோடைகளிலும் சுமார் 28.7 மில்லியன் சந்தாதாரர்களையும் மொத்தம் 4.86 பில்லியன் காணொளி பார்வைகளையும் கொண்டுள்ளார்.
துருவ் ராட்டி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2019 இல் துருவ் ராட்டி | |||||||||||||
தனிப்பட்ட தகவல் | |||||||||||||
பிறப்பு | 8 அக்டோபர் 1994 | ||||||||||||
நாடு | இந்தியர்[1][2] | ||||||||||||
கல்வி | கார்ல்ஸ்ருஹே பொறியியல் கல்லூரி | ||||||||||||
தொழில் |
| ||||||||||||
Spouse(s) | Juli Lbr (தி. 2021) | ||||||||||||
வலைதளம் | dhruvrathee | ||||||||||||
யூடியூப் தகவல் | |||||||||||||
ஒளிவழித்தடங்கள் | |||||||||||||
Location | பெர்லின் | ||||||||||||
செயலில் இருந்த ஆண்டுகள் | 2014–தற்போது | ||||||||||||
காணொளி வகை(கள்) |
| ||||||||||||
சந்தாதாரர்கள் | 22.2 மில்லியன் (main channel) வார்ப்புரு:Rounddown மில்லியன் (combined)[a] | ||||||||||||
மொத்தப் பார்வைகள் | 2.89 பில்லியன் (main channel) வார்ப்புரு:Rounddown billion (combined)[b] | ||||||||||||
Contents are in | ஹிங்கிலிசு | ||||||||||||
| |||||||||||||
12 சூன் 2024 அன்று தகவமைக்கப்பட்டது |
துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்
தொகுராட்டி இந்தியாவின் அரியானா மாநிலத்தில் ஒரு இந்து ஜாட் குடும்பத்தில் பிறந்தார். அரியானாவில் தனது பள்ளிக் கல்வியை முடித்த இவர் ஜெர்மனியில் உயர் கல்வியைப் பயிலச் சென்றார். ஜெர்மனியின் ராட்டி கார்ல்ஸ்ரூஹே பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் தனது இளநிலைப் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து அதே கல்லூரியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றார்.[4][5]
தொழில்
தொகுராட்டி முதன்மையாக அவரது அரசியல் காணொளிகளுக்காக அறியப்படுகிறார். அதில் முக்கியமாக உண்மைச் சரிபார்ப்பு மற்றும் விளக்கமளிக்கும் உள்ளடக்கம் கொண்டதாக உள்ளது.[6] திபிரிண்ட் இன் கூற்றின்படி, யூடியூப்பை ஒரு அரசியல் தளமாகப் பயன்படுத்திய முதல் இந்திய பயனர்களில் இவர் ஒருவர். 2013 இல் பயண காணொளிகளை பதிவேற்றத் தொடங்கினார் ஆனால் 2013 ஆம் ஆண்டின் இறுதியில் இவர் அரசியல் மற்றும் சமூக தலைப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.[1]
இவரது தீவிர உள்ளடக்கத்துடன், ராட்டி பீ நியூஸ் என்ற நையாண்டியான "போலி செய்தி" பிரிவைத் தொடங்கினார்.[7] கூடுதலாக, 2017 முதல் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, ராட்டி திபிரிண்ட் இற்காக கருத்துப் பத்திகளை எழுதினார்.[8] 2018 பாஜக-ஆம் ஆத்மி மோதல் பற்றிய ராட்டியின் விவரிப்பு ஒருதலைப்பட்சமாகவும் பாதி கதையாகவும் கருதப்பட்டது.
2020 சூலையில், ராட்டி துருவ் ரதீ வ்லோக்ஸ் என்ற மற்றொரு யூடியூப் வலையோடையைத் தொடங்கினார். அதில் இவர் தனது சர்வதேசப் பயணப் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டார். ராட்டி தனது பயண காணொளிகளுக்கு மேலதிகமாக, டிடபிள்யூ டிராவல் ஆஃப் டாய்ச் வெல்லே மற்றும் டிகேட் வித் துருவ் ஆப் நெட்ஃபிக்ஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.[9] இவர் மகாபாரத் வித் துருவ் ராட்டி எனப்படும் ஒரு நிகழ்ச்சியை சுபாட்டிபையில் தொகுத்து வழங்குகிறார்.[10]
2022 பெப்ரவரி நிலவரப்படி, ராட்டி 30-வினாடிகள் கால நீளம் கொண்ட உண்மை காணொளிகளைப் பகிர ஒரு ஷாட்ஸ் என்னும் குறும்பட ஓடையைத் தொடங்கினார்.[11] 2022 செப்டம்பரில், பாக்கித்தானின் அரசியல் நெருக்கடி குறித்து இவர் வெளியிட்ட காணொளியை இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தடுத்ததால் இவர் சர்ச்சையை எதிர்கொண்டார். அந்த காணொளியில் இந்தியாவின் சிதைந்த வரைபடம் இருப்பதாகவும், அதில் காசுமீரின் சில பகுதிகள் பாக்கித்தானின் பகுதியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அல்லது சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும் அமைச்சகம் கூறியது.[12] 2023 மார்ச்சில், இவர் "குளிர் பானங்களின் இருண்ட பக்கம்" என்ற தலைப்பிலான காணொளிக்காக டாபரிடமிருந்து பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஒரு உத்தரவில், கல்கத்தா உயர் நீதிமன்றம் காணொளியை நீக்க சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவிட்டது.[13] இவர் இந்தியாவில் இருந்திருந்தால் பாஜக அரசால் கைது செய்யபட்டிருப்பார் என்று சில பார்வையாளர்கள் பின்னூட்டம் இடுகின்றனர்.[14]
2024, ஏப்ரல், 18 அன்று, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, கன்னடம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் ஒலிச்சேர்கை காணொளிகளை வெளியிடுவதில் கவனம் செலுத்தும் ஐந்து புதிய யூடியூப் வலையோடைகளை ராட்டி அறிவித்தார்.[15]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுராட்டி ஜெர்மனியில் வசிப்பவர். 2024 நவம்பரில், ராட்டி ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள பெல்வெடெரே அரண்மனையில் தன் நீண்டகால காதலியான ஜூலி எல். பி. ஆரை மணந்தார் .[2]
ஊடகங்களில்
தொகு2023 இல், இவர் டைம் இதழின் அடுத்த தலைமுறை தலைவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.[16][6]
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Who Is YouTuber Dhruv Rathee? Indian Creator's Net Worth Is Rs 27 crore, Takes Home Rs 48 Lakh Every Month". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-23.
- ↑ 2.0 2.1 "Love Across Borders: Indian YouTuber Dhruv Rathee Marries German Girlfriend Juli at Vienna". News18. 28 November 2021. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 1 January 2022.
- ↑ "The Year Indian Comedians Took Politics Seriously". The Wire. Archived from the original on 8 July 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2020.
- ↑ "'Persistence and patience are the hallmarks of success': YouTuber Dhruv Rathee". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 12 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
- ↑ "From 'practising Hindu atheist' to 'All Lives Matter': Who exactly is Dhruv Rathee?". Free Press Journal (in ஆங்கிலம்). Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 9 June 2020.
- ↑ 6.0 6.1 Rajvanshi, Astha (5 October 2023). "Fact-Checking Indian Media Is Tough. Dhruv Rathee Uses Youtube to Do It". டைம் (இதழ்) (in ஆங்கிலம்). Archived from the original on 5 October 2023. பார்க்கப்பட்ட நாள் 6 October 2023.
- ↑ Ghosh, Devarsi (16 May 2018). "Meet Dhruv Rathee, the 23-year-old YouTuber whose videos are infuriating Modi's admirers". Scroll.in. Archived from the original on 8 June 2020. பார்க்கப்பட்ட நாள் 9 June 2020.
- ↑ "Dhruv Rathee, Author at ThePrint". ThePrint. 11 February 2020. Archived from the original on 23 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 June 2020.
- ↑ "Money Heist: Dhruv Rathee decodes Netflix's 'Spanish Masala Blockbuster'". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 31 October 2020. Archived from the original on 27 October 2021. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
- ↑ "YouTuber Dhruv Rathee Talks About Entering Into Audio Space, Says 'Podcasts Have Small But Dedicated Audience' - Exclusive". News18. 9 November 2022. Archived from the original on 19 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
- ↑ "Dhruv Rathee Shorts". Social Blade. Archived from the original on 4 January 2023. பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
- ↑ Quint, The (2022-09-26). "Govt Removes 45 YouTube Videos, Including Dhruv Rathee's, For Spreading 'Lies'". TheQuint (in ஆங்கிலம்). Archived from the original on 29 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
- ↑ "Calcutta HC orders social media platforms to take down video of Dhruv Rathee mocking Real fruit juice". DNA India (in ஆங்கிலம்). Archived from the original on 31 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
- ↑ "இடைவிடாத சிவில் சமூகக் குரல்கள்". 2024-06-12.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help); Text "மக்களவை மகா யுத்தம்" ignored (help) - ↑ Staff, T. N. M. (2024-04-04). "Dhruv Rathee starts YouTube channels in five languages including Tamil, Telugu and Kannada". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-21.
- ↑ Anand, Nisha (6 October 2023). "Dhruv Rathee among TIME Magazine's 'next generation leaders 2023'; YouTuber reacts". Hindustan Times (in ஆங்கிலம்). Archived from the original on 7 October 2023. பார்க்கப்பட்ட நாள் 6 October 2023.