துரோங்

லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமப்புற நகரம்

துரோங் (ஆங்கிலம்: Terong; மலாய்: Terong; சீனம்: 特隆) என்பது மலேசியா, பேராக் மாநிலம், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut, Matang and Selama District) அமைந்துள்ள ஒரு சிறிய கிராமப்புற நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். [1]

துரோங்
Terong
பேராக்
Map
துரோங் is located in மலேசியா
துரோங்
      துரோங்
ஆள்கூறுகள்: 4°43′N 100°44′E / 4.717°N 100.733°E / 4.717; 100.733
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்லாருட், மாத்தாங், செலாமா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
34800
மலேசிய தொலைபேசி எண்+60-05-952000
போக்குவரத்துப் பதிவெண்கள்P

சங்காட் ஜெரிங்; பந்தாய் ரெமிஸ் ஆகிய இரு நகரங்களுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நகரம், அதன் நீரின் தரம் மற்றும் அதன் நீர்வீழ்ச்சிக்கும் மிகவும் பிரபலமானது.[2] அத்துடன் இந்தக் கிராமப்புற நகரம் ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் இயற்கையான சூழலைக் கொண்ட அழகிய கிராமமாக அறியப்படுகிறது. இயற்கைச் சூழலை விரும்பும் பலர் இந்தக் கிராம நகரத்திற்கு வருவது வழக்கம். [3]

பொது

தொகு

இங்குள்ள துரோங் வெப்ப நீரூற்றுகள் (Trong Hot Springs) மிகவும் பழைமையானவை; மிகவும் புகழ்பெற்றவை. நீர்வீழ்ச்சிக்கு செல்ல அணுக அனுமதி தேவை. நீர்வீழ்ச்சி இரண்டு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல இரண்டாம் நிலை நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.[4]

1900-ஆம் ஆண்டுகளில் இங்கு அதிகமான ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அந்தத் தோட்டங்களில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் வேலை செய்தனர். ஏறக்குறைய ஏழு தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இப்போது மூன்று தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. முன்பு ரப்பர் தோட்டங்கள் இருந்த இடங்களில் தற்சமயம் செம்பனை பயரிடப்படுகிறது.

துரோங் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

பேராக்; லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தின் (Larut, Matang and Selama District) துரோங் பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 108 மாணவர்கள் பயில்கிறார்கள். 24 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு, 2022-ஆம் ஆண்டு சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD6116 துரோங்
Trong
SJK(T) Ladang Getah Taiping தைப்பிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) 34800 துரோங் 73 10
ABD6117 அழகர் தோட்டம்
Ladang Allagar
SJK(T) Ladang Allagar அழகர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) 34800 துரோங் 14 7
ABD6118 தெமர்லோ தோட்டம்
Ladang Temerloh
SJK(T) Ladang Temerloh தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) 34800 துரோங் 21 7

மேற்கோள்கள்

தொகு
  1. "Trong is a village in Perak, Malaysia. The city is located between Changkat Jering and Pantai Remis. It is famous for its water quality and the discovery of waterfalls". ptg.perak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.
  2. "Trong Falls". AllTrails.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.
  3. "Trong Leisure Farm & Resort, Trong, PERAK". GoKelah (in ஆங்கிலம்). 18 December 2019. பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.
  4. "Trong Hot Springs, Taiping (Malaysia) - Holidify". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.
  5. "Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022". Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022. Kementerian Pendidikan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 3 December 2023. {{cite web}}: |first1= missing |last1= (help)

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோங்&oldid=3890978" இலிருந்து மீள்விக்கப்பட்டது