திவேர் மாகாணம்

(துவெர் மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திவேர் மாகாணம் (Tver Oblast, உருசியம்: Тверска́я о́бласть, துவெர்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் துவெர் நகரம். 2010 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 1,353,392 (2010 கணக்கெடுப்பு)[9]. 1935 முதல் 1990 வரை, இது கலினின் ஒப்லாஸ்து (Калининская область) என அறியப்பட்டுவந்தது. திவேர் மாகாணம் உருசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய வட்டாரங்களில் ஒன்று ஆகும். இங்கு பல வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் உள்ளன.

திவேர் மாகாணம்
Tver Oblast
Тверская область
திவேர் மாகாணம் Tver Oblast-இன் கொடி
கொடி
திவேர் மாகாணம் Tver Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லைஉ[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[1]
பொருளாதாரப் பகுதிமத்திய][2]
நிர்வாக மையம்திவேர்[4]
அரசு
 • நிர்வாகம்திவேர் சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[7]அந்திரே செவெலியோவ்[6]
பரப்பளவு
 • மொத்தம்84,100 km2 (32,500 sq mi)
 • பரப்பளவு தரவரிசை39வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்13,53,392
 • மதிப்பீடு 
(2018)[10]
12,83,873 (−5.1%)
 • தரவரிசை33வது
 • அடர்த்தி16/km2 (42/sq mi)
 • நகர்ப்புறம்
74.7%
 • நாட்டுப்புறம்
25.3%
நேர வலயம்ஒசநே+3 ([11])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-TVE
அனுமதி இலக்கத்தகடு69
OKTMO ஐடி28000000
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.region.tver.ru

புவியியல் தொகு

திவேர் மாகாணம் கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் மத்திய பகுதியின் மேற்கில் அமைந்துள்ளது. இது வடக்கில் இருந்து தெற்காக 260 கிலோ மீட்டரும், மேற்கிலும் இருந்து கிழக்காக 450 கி.மீ நீண்டுள்ளது. இதன் எல்லைகளாக யாரோசிலாவ் மாகாணம், வோல்க்தா ஒப்லாசுது, நாவ்கராட் ஓப்லாஸ்து ஆகியவை வடக்கிலும், மாஸ்கோ ஓப்லஸ்து மற்றும் ஸ்மோலென்ஸ்க் ஓப்லாஸ்து ஆகியவை தெற்கிலும், பிஸ்கோவ் ஒப்லாஸ்து மேற்கிலும் அமைந்துள்ளன.

இயற்கை வளங்கள் தொகு

இந்த ஒப்லாசுதுவில் கனிமவளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை முதன்மையாக பண்டைய கடல்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றில் உள்ளன. தொழில்துறைக்கு முதன்மையாகத் தேவைப்படும் கனிமங்களான பழுப்பு நிலக்கரி மாஸ்கோ நிலக்கரி படுகையில் உள்ளன. 1948 இல் இருந்து 1996 வரை சுமார் 21 மில்லியன் டன் நிலக்கரி அகழப்பட்டது. மிகப் பரந்த அளவில் ஆற்றல்வாய்ந்த நிலக்கரி 15.4 பில்லியன் மீ³ கன அளவு நிலக்கரி இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை தொகு

ஒப்லாசுதுவின் சராசரி சனவரி வெப்பநிலை மேற்குப் பகுதியில் -8 (18 °பாரங்கீட்), வடகிழக்கில் −13 °செல்சியஸ் (9 °பாரங்கீட்) சூலை மாத வெப்பநிலை +17 °செல்சியஸ் (63 °பாரங்கீட்) முதல் +19 °செல்சியஸ் (66 °பாரங்கீட்) வரை நிலவுகிறது. ஆண்டு சராசரி மழையளவு 560 முதல் 720 மிமீ வரை பொழிகிறது. நவம்பர் மாதத்தின் நடுவில் பனிப் பொழிவு துவங்குகி 130 முதல் 150 நாட்கள் வரை பொழிகிறது. 40-60 செ.மீ. வரை பனி பொழியும். அதிகபட்ச பனிப்பொழிவு 80 செ.மீ ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

ஒப்லாசுது மக்கள் தொகை: 1,353,392 ( 2010 கணக்கெடுப்பு ); 1,471,459 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,670,117 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • 2012 ஆண்டின் முதன்மைப் புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 15 476 (1000 ஒன்றுக்கு 11.6)
  • இறப்பு: 24 325 (1000 ஒன்றுக்கு 18.2) [14]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்: 1.65
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]

2009 - 1.55 | 2010 - 1.52 | 2011 - 1.54 | 2012 - 1.65 | 2013 - 1.64 | 2014 - 1.66 (எதிர்பார்ப்பு)

  • இனக்குழுக்களின் விகிதாச்சாரம் (2010):[9]
  • உருசியர்கள் - 93.4%
  • உக்ரைனியர்கள் - 1.2%
  • ஆர்மேனியர்கள் - 0.7%
  • கரிலியர்கள் - 0.6%
  • தடார்களுக்கும் - 0.5%
  • பெலாரஷ்யர்கள் - 0.4%
  • அசீரியர்கள் - 0.4%
  • ரோமா மக்கள் - 0.4%
  • உச்பெக்குகள் - 0.3%
  • மற்றவர்கள் - 2.1%

உருசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 99.260 மக்கள் தங்களது இனம் குறித்து தெரிவிக்கவில்லை. [16]

சமயம் தொகு



 

கலினின் ஓப்லஸ்தில் சமயம் (2012)[17][18]

  பொதுவான கிறித்துவர் (9%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (34%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (6%)

2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 30% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். , 9% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 1% முஸ்லீம்கள், 34% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 20% நாத்திகர்கள், 6% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]

மேற்கோள்கள் தொகு

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Article 42 of the Charter of Tver Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2015, no such law is in place.
  4. Charter of Tver Oblast, Article 8
  5. Charter of Tver Oblast, Article 82
  6. Official website of Tver Oblast. Andrei Vladimirovich Shevelyov, Governor of Tver Oblast பரணிடப்பட்டது 2015-11-14 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  7. Charter of Tver Oblast, Article 105
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  11. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Resolution of January 29, 1935
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  17. 17.0 17.1 17.2 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  18. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவேர்_மாகாணம்&oldid=3558606" இலிருந்து மீள்விக்கப்பட்டது