தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயில்

தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தென்மலை ஊராட்சியில் அமைந்த தென்மலை எனும் ஊரில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், மேற்கு நோக்கி அமைந்த ஒரு சிவன் கோயில் மற்றும் பகைவர் பயம் நீக்கும் பரிகாரத் தலமும் ஆகும். மூலவர் பெயர் திரிபுரநாதேஸ்வரர், அம்மன் பெயர் சிவபரிபூரணியம்மாள். இக்கோயில் பஞ்சபூத தலங்களில் நான்காம் தலமான காற்று தலம் என்று அழைக்கப்படுகிறது. சங்கரன்கோவில் மண் தலமாகவும், தருகாபுரம் நீர் தலமாகவும், தேவதானம் ஆகாய தலமாகவும், கரிவலம்வந்தநல்லூர் அக்னி தலமாகவும் போற்றப்படுகிறது. இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டு வர வாய்ப்பு உள்ளது.[1]

தென்மலை திரிபுரநாதேசுவரர் கோயில்
தென்மலை திரிபுரநாதேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
தென்மலை திரிபுரநாதேசுவரர் கோயில்
தென்மலை திரிபுரநாதேசுவரர் கோயில்
திரிபுரநாதேசுவரர் கோயில், தென்மலை, தென்காசி, தமிழ்நாடு 
ஆள்கூறுகள்:9°19′09″N 77°29′22″E / 9.3191°N 77.4895°E / 9.3191; 77.4895
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி மாவட்டம்
அமைவிடம்:தென்மலை
சட்டமன்றத் தொகுதி:வாசுதேவநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
ஏற்றம்:200 m (656 அடி)
கோயில் தகவல்
மூலவர்:திரிபுரநாதேசுவரர்
தாயார்:சிவபரிபூரணி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 

பலன் தொகு

இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். காளகஸ்தியைப் போலவே சர்ப்ப தோஷம் நீங்கும். எதிரிகளின் பலம் குறையும் என்கிறார்கள்.

அமைவிடம் தொகு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் - இராஜபாளையம் சாலையில் கரிவலம்வந்தநல்லூரிலிருந்து இடது புறம் திரும்பினால் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயிலை அடையலாம். கரிவலம்வந்தநல்லூரிலிருந்தும், இராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள சிவகிரியிலிருந்தும் தென்மலைக்கு ஆட்டோ வசதி உண்டு. காலை 7 முதல் 10 மணி வரையிலும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் கோயில் திறந்து இருக்கும்.

விழாக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "சிவபரிபூரணியம்மாள் போக்கும் தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில்". Archived from the original on 2021-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.

வெளி இணைப்புகள் தொகு