தென்-மத்திய மண்டல கலாச்சார மையம்
தென்-மத்திய மண்டல கலாச்சார மையம் (South-Central Zone Cultural Centre) என்பது நாக்பூரில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஏழு மண்டல கலாச்சார மையங்களில் ஒன்று. 1986-ல் நாக்பூரில் இம்மையம் நிறுவப்பட்டது.இது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் நாட்டுப்புற, பழங்குடியினர், நுண்கலைகள் மற்றும் கைவினைகளின் வளமான மரபுகளைக் கொண்டுள்ளது. இந்த மரபுகளைச் செழுமைப்படுத்தவும், மேம்படுத்தவும் மற்றும் வலுப்படுத்தவும் இந்த மையம் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த மையம் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இந்த மையத்தின் தலைவராக மகாராஷ்டிரா ஆளுஞர் உள்ளார்.[1]
இந்தியாவின் பிற பிராந்திய கலாச்சார மையங்கள் தொகு
- கிழக்கு மண்டல கலாச்சார மையம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- வடகிழக்கு மண்டல கலாச்சார மையம், திமாபூர், நாகாலாந்து
- மேற்கு மண்டல கலாச்சார மையம், உதய்பூர், ராஜஸ்தான்
- தென்னக பண்பாட்டு தஞ்சாவூர், தமிழ்நாடு
- வட மத்திய மண்டல கலாச்சார மையம், அலகாபாத், உத்தரபிரதேசம்
- வடக்கு மண்டல பண்பாட்டு மையம் மையம், பாட்டியாலா, பஞ்சாப்
இந்தியாவின் கலாச்சார மண்டலங்கள் என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்ட ஏழு பகுதிகளாகும். இவை ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றன.[2]