தெலூரியம் அறுபுளோரைடு

வேதிச் சேர்மம்

தெலூரியம் அறுபுளோரைடு (Tellurium hexafluoride) தெலூரியமும் புளோரினும் சேர்ந்து உருவாகக்கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு TeF6. நிறமற்று விரும்பத்தகாத மணத்துடன் உயர் நச்சாக தெலூரியம் அறுபுளோரைடு காணப்படுகிறது.

தெலூரியம் அறுபுளோரைடு
Tellurium hexafluoride
Structure and dimensions of the molecule
Structure and dimensions of the molecule
Ball-and-stick model of the molelcule
Ball-and-stick model of the molelcule
இனங்காட்டிகள்
7783-80-4 Y
EC number 232-027-0
InChI
  • InChI=1S/F6Te/c1-7(2,3,4,5)6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24559
  • F[Te](F)(F)(F)(F)F
பண்புகள்
TeF6
வாய்ப்பாட்டு எடை 241.590 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் விரும்பத்தகாத மணம்
அடர்த்தி 0.0106 கி/செ.மீ3 (-10 °செ)
4.006 கி/செ.மீ3 (-191 °செ)
உருகுநிலை −38.9 °C (−38.0 °F; 234.2 K)[2]
கொதிநிலை −37.6 °C (−35.7 °F; 235.6 K)[2]
சிதைவடையும்
ஆவியமுக்கம் >1 வளிமண்டல அழுத்தம் (20°செ)[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.0009
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP28
புறவெளித் தொகுதி Pnma, No. 62
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Oh)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1318 கியூ/மோல்
வெப்பக் கொண்மை, C 117.6 யூ/(மோல் கெ)
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
5 பகுதி/மில்லியன் (எலி, 4 மணி)
5 பகுதி/மில்லியன் (சுண்டெலி, 1 மணி)
5 பகுதி/மில்லியன் (முயல், 4 மணி)
5 பகுதி/மில்லியன் (கினியா பன்றி, 4 மணி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.02 பகுதி/மில்லியன் (0.2 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.02 பகுதி/மில்லியன் (0.2 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
1 பகுதி/மில்லியன்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பொதுவாக புளோரின் வாயுவை 150 பாகை செல்சியசு வெப்பநிலையில் தெலூரியத்தின் மீது செலுத்தி தெலூரியம் அறுபுளோரைடு தயாரிக்கப்படுகிறது. இவ்வெப்பநிலைக்கு குறைவாக இருந்தால் தெலூரியம் நான்குபுளோரைடு, இருதெலூரியம் பதின்புளோரைடு உள்ளிட்ட கீழ்நிலை புளோரைடுகளின் கலவை உருவாகிறது.

புளோரின் வாயுவை தெலூரியம் மூவாக்சைடு மீது செலுத்துவதாலும் தெலூரியம் அறுபுளோரைடைத் தயாரிக்க முடியும்.

தெலூரியம் ஈராக்சைடுடன் செலீனியம் நான்குபுளோரைடு சேர்த்து முதலில் தெலூரியம் நான்கு புளோரைடு தயாரிக்கப்படுகிறது. பின்னர் இதை 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு அதிகமாக சூடுபடுத்தியும் தெலூரியம் அறுபுளோரைடு தயாரிக்கலாம். இதனுடன் தெலூரியமும் உடன் விளைபொருளாக உருவாகிறது.

பண்புகள்

தொகு

தெலூரியம் அறுபுளோரைடு, உயர் சீரொழுங்கிலுள்ள எண்முக மூலக்கூற்று அமைப்பை கொண்டுள்ளது. கந்தகம், செலீனியம் தனிமங்களின் இயற்பியல் பண்புகளுடன் இதன்பண்புகளும் ஒன்றுபடுகிறது. மூலக்கூற்று எடை அதிகரிப்பு காரணமாக இது எளிதில் ஆவியாவதில்லை. −38 °செ வெப்பநிலையில் தெலூரியம் அறுபுளோரைடு குறுக்கமடைந்து ஒரு ஆவியாகக்கூடிய வெண்மைநிற திண்மமாக மாறுகிறது.

வினைத்திறன்

தொகு

கந்தகத்துடன் ஒப்பிடுகையில் தெலூரியம் அறுபுளோரைடு அந்தளவுக்கு மந்தமான வேதிப்பொருளன்று. கந்தகம், செலீனியத்தைப் போல ஆறு அணுக்களை ஒருங்கிணைக்காமல் எட்டு அணுக்களை ஒருங்கிணைக்கும் தன்மையை கொண்டுள்ளது

தண்ணிரில் TeF6 நீராற்பகுப்பு அடைந்து தெலூரிக் அமிலமாக (Te(OH)6) மாறுகிறது. இது 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் தெலூரியத்துடன் வினைபுரிகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0588". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 CRC Handbook of Chemistry and Physics, 90. Auflage, CRC Press, Boca Raton, Florida, 2009, ISBN 978-1-4200-9084-0, Section 4, Physical Constants of Inorganic Compounds, p. 4-95.
  3. "தெலூரியம் அறுபுளோரைடு(Te ஆக)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).

உசாத்துணை

தொகு
  • W.C. Cooper; Tellurium, Van Nostrand Reinhold Company, New York, USA, 1971.
  • K.W. Bagnall; The Chemistry of Selenium, Tellurium and Polonium, Elsevier Publishing, New York, 1966.
  • R.T. Sanderson; Chemical Periodicity, Reinhold, New York, USA, 1960.
  • N.N. Greenwood and A. Earnshaw; Chemistry of the Elements, 2nd edition, Butterworth, UK, 1997.
  • F. A. Cotton, G. Wilkinson, C.A. Murillo, and M. Bochmann; Advanced Inorganic Chemistry, John Wiley & Sons, 1999.
  • G.J. Hathaway, N.H. Proctor; Chemical Hazards of the Workplace, 5th edition, Wiley-Interscience, New Jersey, 2004.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரியம்_அறுபுளோரைடு&oldid=4135214" இலிருந்து மீள்விக்கப்பட்டது