தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குவகாத்தி
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குவகாத்தி (National Institute of Pharmaceutical Education and Research, Guwahati) என்பது இந்தியாவின் இரசாயன மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு மருந்தியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இது அசாம் மாநிலம் காமரூப் மாவட்டத்தில் சிலா கடமூர், சாங்சாரியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் மருந்து அறிவியலில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்குகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான, இது வளர்ந்து வரும் இந்திய மருந்துத் துறைக்கான மனித வள மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இந்தியாவின் அறிவியல் சார்ந்த தொழில்களில் முன்னணியில் முக்கியமான மருந்து உற்பத்தித் துறையில் பரந்த திறன்களைக் கொண்டுள்ளது.[1][2]
வகை | பொது, தேசிய முக்கிய நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 2008 |
பணிப்பாளர் | மருத்துவர் யு. எஸ். என். மூர்த்தி |
அமைவிடம் | சிலா கட்டாமுர், சாங்சாரி, காமரூப் , , இந்தியா |
சுருக்கப் பெயர் | NIPER-G |
இணையதளம் | niperguwahati |
வரலாறு
தொகுதேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குவகாத்தி 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இந்த நிறுவனம் செப்டம்பர் 16, 2008 அன்று மாண்புமிகு மத்திய உரங்கள் மற்றும் இரசாயனங்கள் மற்றும் எஃகு அமைச்சர் இராம் விலாசு பாசுவானால் துவக்கி வைக்கப்பட்டது.[3] குவகாத்தியில் உள்ள சாங்சாரியில் நிரந்தர வளாகத்திற்கான அடிக்கல் 30 மே 2015 அன்று மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் அனந்த் குமார், அசாம் முதல்வர் தருண் கோகய் மற்றும் மாநில இளைஞர் விவகார அமைச்சர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் நாட்டப்பட்டது.
கல்வி
தொகுகல்வி திட்டங்கள்
தொகுஇந்த நிறுவனம் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை வழங்குகிறது. எம். எஸ். (மருந்தகம்), எம். பார்ம். மற்றும் முதுநிலை தொழில்நுட்பம் ஆகிய பட்டங்களை 8 துறைகளில் (மருந்தியல் & நச்சுயியல், மருந்தியல் பயிற்சி, மருந்தியல் பகுப்பாய்வு, மருந்தியல், உயிர்த்தொழில்நுட்பம், மருத்துவ வேதியியல், மருந்துத் தொழில்நுட்பம் (வடிவமைப்புகள்) மற்றும் மருத்துவ சாதனங்கள்) வழங்குகிறது.[4] மேலும் 5 வருட முனைவர் பட்ட படிப்புகளையும் வழங்குகிறது. [5]
இந்தியத் தொழில்நுட்பக் கழகம், குகவுகாத்தியுடன் இணைந்து மருத்துவ சாதனங்களில் முதுநிலை தொழில்நுட்ப படிப்பை இந்த நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.[6]
மாணவர் சேர்க்கை
தொகுதேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குவகாத்தியில் உள்ள எந்தவொரு பாடத்திற்கும் மாணவர் சேர்க்கை மருந்தியல் பட்டதாரி திறனறிதல் தேர்வு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் நடத்தப்படும் கூட்டு நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடைபெறும்.
தரவரிசை
தொகுதேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குவகாத்தி 2021ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் மருந்தக தரவரிசையில் இந்தியாவில் 19வது இடத்தைப் பிடித்தது.[7]
கல்வித் துறைகள்
தொகு- மருந்தியல் மற்றும் நச்சுயியல்
- உயிரி தொழில்நுட்பவியல்
- மருந்தியல் பயிற்சி
- மருந்தாக்க வேதியியல்
- மருந்தியல்
- மருந்தியல் பகுப்பாய்வு
- மருத்துவ சாதனங்கள்
- மருந்து தொழில்நுட்பம் (வடிவமைப்புகள்)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Hindu : Education Plus Bangalore : NIPER sets the benchmark
- ↑ All-India level rank in NIPER for SC boy - The Hindu
- ↑ "NIPER paves pharma path - Paswan inaugurates the fifth centre of the higher education & research institute". telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.
- ↑ http://www.niperguwahati.ac.in/
- ↑ NIPER conducts convocation - The Hindu
- ↑ "NIPER GUWAHATI". www.niperguwahati.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
- ↑ https://www.nirfindia.org/2021/PharmacyRanking.html