தேஜி பச்சன்

சமூக ஆர்வலர்

தேஜி ஹரிவன்ஷ் ராய் ஸ்ரீவஸ்தவா பச்சன் ( தேஜி சூரி ; 12 ஆகஸ்ட் 1914 – 21 டிசம்பர் 2007) ஓர் சமூக ஆர்வலரும், சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர் ஹரிவன்சராய் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தாயாரும் ஆவார்.

தேஜி பச்சன்
பிறப்புதேஜி சூரி
(1914-08-12)12 ஆகத்து 1914
லயால்பூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு21 திசம்பர் 2007(2007-12-21) (அகவை 93)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிசமூக ஆர்வலர்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்(அமிதாப் பச்சன் உட்பட இருவர்)

சுயசரிதை

தொகு

தேஜி பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள லயால்பூரில் பஞ்சாபி சீக்கிய காத்ரி குடும்பத்தில் பிறந்தார் (இன்றைய பைசலாபாத், பஞ்சாப், பாக்கித்தான் ). [1] [2] தனது கல்வியை முடித்த பிறகு, இலாகூரில் உள்ள கூப் சந்த் டிகிரி கல்லூரியில் உளவியல் கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். அப்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக இருந்த ஹரிவன்ஷ் ஸ்ரீவஸ்தவாவை ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் சந்தித்தார். இவர்கள் 1941 இல் பிரயாக்ராஜ் நகரத்தில் திருமணம் செய்துகொண்டனர். தனது திருமணத்திற்குப் பிறகு, தேஜி ஒரு இல்லத்தரசி ஆனார்.[3] இவர்களுக்கு அமிதாப் பச்சன் மற்றும் அஜிதாப் பச்சன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

இவர்கள் இந்தியாவின் இலக்கியச் சுற்று மற்றும் உயர் சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். [4] இவர்கள் நிகழ்வுகளில் பாடி வந்தனர். [5]

தேஜி தனது கணவரின் இந்தி தழுவலான மக்பெத் நாடகத்தில் லேடி மக்பத் வேடத்தில் நடித்தார். இவர்கள் யஷ் சோப்ராவின் கபி கபி (1976) என்ற திரைப்படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தனர்.

1973 இல் திரைப்பட நிதிக் கழகத்தின் (இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஒரு அங்கம்]] )இயக்குநர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். இதன் முக்கிய நோக்கம், ஊடகத்தின் பொதுவான தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் நல்ல தரமான நோக்கமுள்ள திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு நிதியளிப்பதாகும். [6]

இறப்பு

தொகு

உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மும்பை, லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், [7] தனது 93வது வயதில் 21 டிசம்பர் 2007 அன்று இறந்தார். [8]

சான்றுகள்

தொகு
  1. India, Frontier (13 January 2011). "Amitabh Bachchan reminisenses his mothers lohri festival stories". in.com. p. 1. Archived from the original on 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 10 February 2011.
  2. "Teji Bachchan: अमिताभ की मां के बारे में जानें रोचक बातें, पति और बेटे से अलग तेजी बच्चन ने बनाई अपनी पहचान". 21 December 2021. https://www.amarujala.com/shakti/teji-bachchan-biography-in-hindi-amitabh-bachchan-mother-life-story. 
  3. "Teji Bachchan: Indira's friend". Archived from the original on 2 November 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2011.
  4. "'The poet's poem'". Express India இம் மூலத்தில் இருந்து 21 November 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101121144959/http://www.expressindia.com/latest-news/the-poets-poem/253088/. பார்த்த நாள்: 21 July 2011. 
  5. "Nation". The Tribune. http://www.tribuneindia.com/2003/20030120/nation.htm. பார்த்த நாள்: 21 July 2011. 
  6. Brief encounters with Mrs Teji Bachchan பரணிடப்பட்டது 26 செப்டெம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம்
  7. "Amitabh's mother Teji Bachchan hospitalised". Express India. http://www.expressindia.com/fullstory.php?newsid=70254. பார்த்த நாள்: 21 July 2011. 
  8. "Teji Bachchan passes away". Indiatimes. http://timesofindia.indiatimes.com/articleshow/2640410.cms. பார்த்த நாள்: 21 July 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜி_பச்சன்&oldid=3807241" இலிருந்து மீள்விக்கப்பட்டது