தேவிகா வைத்யா
தேவிகா பூர்னெந்து வைத்யா (Devika Purnendu Vaidya பிறப்பு: ஆகஸ்ட் 13, 1997 மகாராஷ்டிரா, புனே ) ஓர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார்.[1] இவர் உள்நாட்டு போட்டிகளில் மகாராட்டிர மாநில அணிக்காக விளையாடுகிறார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | தேவிகா பூர்னெந்து வைத்யா | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 13 ஆகத்து 1997 புனே, மகாராட்டிரம் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | Legbreak googly | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 118) | 16 நவம்பர் 2016 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 9 ஏப்ரல் 2018 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே இ20ப (தொப்பி 49) | 30 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2010–தற்போதுவரை | மகாராட்டிரம் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 23 January 2020 |
இவர் 2014 இல் தென்னாப்பிரிக்கப் பெண்கள் துடுப்பாட்ட அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்த தொடரில் , நவம்பர் 30, 2014 அன்று பெங்களூரில் நடந்த பெண்கள் பன்னாட்டு இருபது20 தொடரில் அறிமுகமானார்.[2] சிறந்த பெண் இளைய துடுப்பாட்டளருக்கான எம்.ஏ.சிதம்பரம் விருதுக்கு இவர் தேர்வானார்.[3]
நவம்பர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபதுக்கு -20 போட்டிக்கான இந்திய அணியில் , காயம் காரணமாக பூஜா வஸ்திரகருக்கு பதிலாக இவர் சேர்க்கப்பட்டார்.[4]
விருதுகள்
தொகு- சிறந்த இளைய பெண் துடுப்பாட்டளருக்கான எம்.ஏ.சிதம்பரம் விருது (2014-15)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Devika Vaidya". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ India v South Africa
- ↑ "BCCI’s top award for Kohli". The Hindu. http://www.thehindu.com/sport/cricket/bccis-top-award-for-virat-kohli/article8051042.ece. பார்த்த நாள்: 19 May 2018.
- ↑ "Devika Vaidya replaces injured Pooja Vastrakar". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.