தேவேந்திர பிரசாத் யாதவ்

இந்திய அரசியல்வாதி

தேவேந்திர பிரசாத் யாதவ் (Devendra Prasad Yadav)(பிறப்பு 26 நவம்பர் 1953) இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் பீகாரின் ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இராச்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஜனதா தளம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

தேவேந்திர பிரசாத் யாதவ்
Devendra Prasad Yadav
சமாஜ்வாதி ஜனதா தளம் (ச), தலைவர்
பதவியில்
2010–2022
இந்திய மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம்
ஜஞ்சார்பூர்
பதவியில்
2004-2009
முன்னையவர்சுரேந்திர பிரசாத் யாதவ்
பின்னவர்மங்கனி இலால் மண்டல்
தொகுதிஜஞ்சார்பூர்
பதவியில்
1989-1998
முன்னையவர்ஜி. எசு. ராஜ் அன்சு
பின்னவர்சுரேந்திர பிரசாத் யாதவ்
தொகுதிஜஞ்சார்பூர்
பீகார் சட்டப் பேரவை
புல்பாரசு
பதவியில்
1977–1980
முன்னையவர்யுத்தம் லால் யாதவ்
பின்னவர்சுரேந்திர யாதவ்
தொகுதிபுல்பாரசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 நவம்பர் 1953 (1953-11-26) (அகவை 71)
மதுபானி, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்
சீதா தேவி (தி. 1972)
பிள்ளைகள்2 மகன்கள் & 2 மகள்கள்
பெற்றோர்
  • சந்தன் பிரசாத் யாதவ் (தந்தை)
  • ஆப்ரன் தேவி (தாய்)
வாழிடம்மதுபானி
முன்னாள் கல்லூரிஇராமகிருட்டிணா கல்லூரி, மதுபானி-இளம் அறிவியல்
தொழில்விவசாயம், சமூகப்பணி
As of 25 செப்டம்பர், 2006
மூலம்: [1]

யாதவ் 1977 முதல் 1979 வரை பீகார் ஜனதா கட்சியின் செயலாளராக இருந்தார். சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பீகார் முதல்வராக ஆன கர்ப்பூரி தாக்கூருக்காகப் பதவி விலகினார். யாதவ் யுவ லோக் தளத்தின் தேசியத் தலைவராகவும் இருந்தார்.

1989 முதல் 1998 வரை மற்றும் 1999 முதல் 2009 வரை ஜஞ்சர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஜூன் 1996-ல் தேவகவுடா அமைச்சகம் மற்றும் குஜ்ரால் அமைச்சகத்தில் வர்த்தகத்தின் கூடுதல் பொறுப்புடன் உணவு, குடிமைப்பொருட்கள் வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான மத்திய அமைச்சரவையின் அமைச்சராக இருந்தார். இந்த பதவிக் காலத்தில், விவசாயிகளுக்கான உணவு மசோதாவை நிறைவேற்றினார். இது பாராட்டத்தக்கது.

யாதவ் மக்களவையில் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக இருந்தார். ஆனால் இராச்டிரிய ஜனதா தளத்தில் இணைவதற்காகப் பதவியிலிருந்து விலகினார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தை விட்டு வெளியேறிய பிறகு சமாஜ்வாதி ஜனதா தளம் ஜனநாயகக் கட்சியை உருவாக்கினார். ஆனால் விரைவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் தனது கட்சியை இணைத்து மீண்டும் சேர்ந்தார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Devendra Prasad Yadav(Samajwadi Janata Dal Democratic):Constituency- JHANJHARPUR(BIHAR) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
  2. "Devendra Prasad Yadav-led Samajwadi Janata Dal merges with JD(U)". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/devendra-prasad-yadav-led-samajwadi-janata-dal-merges-with-jdu/articleshow/31741278.cms?from=mdr. 
  3. "Smaller Bihar parties flock to Nitish" (in ஆங்கிலம்). 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_பிரசாத்_யாதவ்&oldid=3926449" இலிருந்து மீள்விக்கப்பட்டது