தேவ தீபாவளி (வாரணாசி)

இந்துக்களின் திருவிழா

தேவ தீபாவளி (Dev Deepawali) ("கடவுளின் தீபாவளி" அல்லது "கடவுளின் விளக்குகளின் திருவிழா" [2] ) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் கொண்டாடப்படும் கார்த்திகை பூர்ணிமா பண்டிகையாகும். இது இந்து மாதமான கார்த்திகையின் (நவம்பர் - டிசம்பர்) முழு நிலவு நாளில் வருகிறது. மேலும், தீபாவளிக்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு நடைபெறுகிறது. கங்கை ஆற்றங்கரையோரத்தில் உள்ள அனைத்து மலைகளின் படித்துறைகளிலும், தெற்கு முனையில் உள்ள ரவிதாசர் படித்துறை முதல் ராஜ் படித்துறை வரை, கங்கை, அதன் தலைமை தேவியின் நினைவாகவும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மண் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. புராணங்களின்படி, இந்த நாளில் கடவுள்கள் கங்கையில் நீராட பூமிக்கு வந்ததாக நம்பப்படுகிறது.[3][4] இந்த விழா திரிபுரா பூர்ணிமா நீராட்டம் என்றும் கொண்டாடப்படுகிறது.[2][5] பஞ்சகங்கை படித்துறையில் தேவ தீபாவளி நாளில் அகல் விளக்கு ஏற்றும் வழக்கம் 1985இல் முதன்முதலில் தொடங்கப்பட்டது.[4]

தேவ தீபாவளி
கடைபிடிப்போர்இந்துக்கள்
வகைவாரணாசி
முக்கியத்துவம்திரிபுர பூர்ணிமா அல்லது சிவனை வணங்குதல்
கொண்டாட்டங்கள்ஆற்றங்கரையோரத்தில் உள்ள அனைத்து மலைகளின் படித்துறைகளிலும் கங்கை ஆற்றுக்கு ஆரத்திக் காட்டப்படுகிறது.
நாள்இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தின் முழுநிலவு நாள்
2022 இல் நாள்9 நவம்பர் [1]

தேவ தீபாவளியின் போது, வீடுகள் முன் கதவுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு வண்ண வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்படுகின்றன. இரவில் வாண வெடிகள் எரிக்கப்படுகின்றன. அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களின் ஊர்வலங்கள் வாரணாசியின் தெருக்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் ஆற்றில் எண்ணெய் விளக்குகளும் மிதக்க வைக்கப்படுகின்றன. இந்த விழாவின் சமூக-கலாச்சார புகழ் அதிகரித்து வருவதால், இது இப்போது மிர்சாபூர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது.

சடங்குகள் தொகு

 
ஆற்றங்கரை விழாக்களைக் காண மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
 
2011 திருவிழாவின் போது கங்கையின் ஒரு படித்துறை

பக்தர்கள் செய்யும் முக்கிய சடங்குகளாக "கார்த்திகை நீராட்டம்" (கங்கையில் புனித நீராடுதல்), மாலையில் கங்கைக்கு எண்ணெய் ஏற்றிய விளக்குகளை வழங்குதல் ஆகியவையும் அடங்கும். மாலையில் கங்கை ஆரத்தியும் செய்யப்படுகிறது.

 
தீபம்

5 நாள் திருவிழாக்கள் பிரபோதினி ஏகாதசியில் (கார்த்திகை 11 வது சந்திர நாள்) தொடங்கி கார்த்திகை பூர்ணிமா அன்று முடிவடைகிறது. சமயப் பாத்திரம் மட்டுமின்றி, கங்கையை வழிபட்டும், விளக்கு ஏற்றி ஆரத்தி எடுத்தும் தியாகிகளை நினைவு கூறும் விழாவாக இது இருக்கிறது. தசாசுவமேத படித்துறையிலுள்ள அமர் ஜவான் ஜோதியிலும், அதை ஒட்டிய இராசேந்திர பிரசாத் படித்துறைப் பகுதியிலும் வாரணாசி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரிகளாலும், 39 கூர்க்கா பயிற்சி மையம், 95 மத்திய சேமக் காவல் படை, 4 விமானப்படை தேர்வு வாரியம், தேசிய மாணவர் படையின் 7 உத்தரப் பிரதேசப் படை, பனாரசு இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கங்கா சேவா நிதியால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியமான மூன்று ஆயுதப் படைகளாலும் ( இந்தியத் தரைப்படை, இந்தியக் கடற்படை , இந்திய வான்படை ) கடைசி நாளன்று நிகழ்த்தப்படுகிறது, அதைத் தொடர்ந்து ஒரு நிறைவு விழாவும், அதில் வான் விளக்குகள் எரிய விடுவதும், தேசபக்தி பாடல்கள், கீர்த்தனைகள், பஜனைகள் பாடப்பட்டு பகீரத சௌர்ய சம்மான் விருதுகளும் வழங்கப்படுகின்றன.[3][6]

திருவிழா ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும். மேலும் ஒரு மில்லியன் விளக்குகள், படித்துறையையும், ஆற்றையும் தெளிவான வண்ணங்களில் ஒளிரச் செய்யும் காட்சி பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. திருவிழா நாளின் இரவில், புனித நகரமான வாரணாசியிலிருந்தும், சுற்றியுள்ள கிராமங்களிருந்தும், நாடு முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கையில் ஆரத்தியைக் காண கூடுகிறார்கள். திருவிழாவின் போது ஒழுங்கை உறுதிப்படுத்த உள்ளூர் அரசாங்கம் பல தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறது.[3]

தசமேசுவர் படித்துறை ஆரத்தியைத் தவிர, அனைத்து கட்டிடங்களிலும், வீடுகளிலும் மண் விளக்குகள் ஏற்றி வைக்கப்படுகின்றன. சுமார் 100,000 யாத்ரீகர்கள் ஆற்றங்கரையில் விளக்குகள் ஒளிர்வதைக் காண வருகிறார்கள்.[7] சடங்குகளில் கீர்த்தனைகள், தாள மேளம் அடித்தல், சங்கு ஊதுதல், தழல்தட்டு எரித்தல் ஆகியவையும் அடங்கும்.

மாலை நேரத்தில் ஆற்றங்கரையில் படகு சவாரிகளும் (எல்லா அளவிலான படகுகளிலும்) சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளன. மேலும் அனைத்து படித்துறைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி செய்யப்படுகிறது.[4]

கங்கை மகோத்சவம் தொகு

கங்கை மகோத்சவம் என்பது வாரணாசியில் சுற்றுலா மையமான திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பிரபோதினி ஏகாதசி தொடங்கி கார்த்திகை பூர்ணிமா வரை ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. வாரணாசியின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை இது காட்டுகிறது. நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் செய்தியுடன், திருவிழாவில் பிரபலமான கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை, நாட்டுப்புற படகுப் போட்டி, தினசரி கலை மற்றும் கைவினை கண்காட்சி, சிற்பக் காட்சிகள், தற்காப்புக் கலைகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பாரம்பரியமான தேவ தீபாவளியுடன் இணைந்த இறுதி நாளில், கங்கை ஆற்றின் படித்துறைகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எரியும் மண் விளக்குகளால் ஒளிர்கின்றன.[2][8]

சான்றுகள் தொகு

  1. "Dev Diwali 2022". 9 November 2022. https://www.varanasiguru.com/dev-diwali/. 
  2. 2.0 2.1 2.2 "Fairs and festivals". National Informatics Center இம் மூலத்தில் இருந்து 13 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121113184204/http://varanasi.nic.in/culture/fair.html. 
  3. 3.0 3.1 3.2 "Varanasi gearing up to celebrate Dev Deepawali". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 November 2010 இம் மூலத்தில் இருந்து 7 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110907113247/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-10/varanasi/28224935_1_dev-deepawali-ghats-holy-dip. பார்த்த நாள்: 7 November 2012. 
  4. 4.0 4.1 4.2 "Ghats dazzle on Dev Deepawali". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 November 2010 இம் மூலத்தில் இருந்து 19 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131019051821/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-21/varanasi/28235087_1_ghats-diyas-kendriya-dev-deepawali-mahasamiti. பார்த்த நாள்: 7 November 2012. 
  5. Dwivedi, Dr. Bhojraj (2006). Religious Basis of Hindu Beliefs. Diamond Pocket Books (P) Ltd.. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788128812392. https://books.google.com/books?id=7wmqKuHFWWgC&q=Dev+Deepavali&pg=PA171. பார்த்த நாள்: 7 November 2012. 
  6. "Events finalised for Dev Deepawali". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 3 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103030056/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-09/varanasi/30377495_1_dev-deepawali-deep-daan-martyrs. பார்த்த நாள்: 12 November 2012. 
  7. Bruyn, Pippa de (2010). Frommer's India. John Wiley & Sons. பக். 469. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470556108. https://books.google.com/books?id=qG-9cwHOcCIC&q=Ganga+Aarti+on+Dev+Deepavali+at+Varanasi&pg=PA469. பார்த்த நாள்: 7 November 2012. 
  8. "Fair and Festivals". Official website of UP Tourism இம் மூலத்தில் இருந்து 29 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120629052417/http://www.up-tourism.com/destination/varanasi/fair_festival.htm. பார்த்த நாள்: 12 November 2012. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ_தீபாவளி_(வாரணாசி)&oldid=3742371" இருந்து மீள்விக்கப்பட்டது