தைக்கா ஷுஐபு

தைக்கா ஷுஐபு (பி. சூலை 29, 1930) தென்னிந்தியாவை சார்ந்த இஸ்லாமிய மார்க்க‌ அறிஞரும், சூஃபி ஞானியும், எழுத்தாளரும் ஆவார். இவர் 1994-ஆம் வருடம் "சிறந்த அரபு மொழி அறிஞர்" என்ற‌ தேசிய விருதை பெற்றார். உலகளவில் "500 மிகவும் செல்வாக்குள்ள முஸ்லிம்கள்" எனும் பட்டியலில் இவர் இருமுறை இடம் பெற்றிருக்கிறார்.

சங்கைக் குரிய
தைக்கா ஷுஐபு
تايكا شعيب
Thaika Shuaib
பட்டம்கலாநிதி, அஃப்ழ‌லுல் உலமா, அல்ஹாஜ், ஆலிம், ஸித்தீக்கீ
பிறப்பு(1930-07-29)சூலை 29, 1930
இந்தியாகீழக்கரை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு14 சூன் 2021(2021-06-14) (அகவை 90)
கேரளா,இந்தியா
சமாதிகீழக்கரை
வேறு பெயர்கள்ஷெய்கு நாயகம்
தேசியம்இந்தியன்
இனம்அரபியர்-தமிழர்
காலம்20-ஆம் நூற்றாண்டு, நவீன காலம்
பிராந்தியம்தென்னிந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், தூர கிழக்கு
பணிஅறிஞர், புத்தக ஆசிரியர், தொழிலதிபர்
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபி மத்ஹப்
சமய நம்பிக்கைமாத்துரீதீ அகீதா
முதன்மை ஆர்வம்அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம், வரலாறு
ஆக்கங்கள்Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu, அல்முன்ஜியாத்
சூபித்துவம் order]]அரூஸிய்யா-காதிரிய்யா
குருதைக்கா அஹ்மது அப்துல் காதிர் ஸித்தீக்கீ, அப்துல் கரீம் கஸ்னஸானீ
செல்வாக்கு செலுத்தியோர்
 • முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, மாப்பில்லை லெப்பை ஆலிம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
 • தைக்கா அஹ்மது நாஸிர் ஸித்தீக்கீ, முஃப்தி வ. ஸலாஹுத்தீன்
விருதுகள்தேசிய விருது (National Award for Outstanding Arabic Scholar)
இணையதளம்www.thaikashuaib.com

ஆரம்ப வாழ்க்கை தொகு

தைக்கா சுஐப் இந்தியாவின் கீழக்கரை நகரில் பிறந்தார். இவர் பலநூற்றாண்டுகளாக இஸ்லாமிய கல்விகளை போதித்துவரும் குடும்பத்தில் தோண்றியவர்.இவரின் தந்தை தைக்கா அஹ்மத் அப்துல் காதிர்(இறப்பு :1976) ஆன்மிக வழிகாட்டியாகவும், அறிஞராகவும் திகழ்ந்தார். இவரின் பாட்டனார்,சாஹூல் ஹமீத்(இறப்பு:1921) ஓர் அறிஞர்.இவரின் முப்பாட்டனார் சைய்யித்முஹம்மத்(இறப்பு: ஹி.1316), "இமாமுல் அரூஸ்" மற்றும் "மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என அறியப்பெற்ற இஸ்லாமிய அறிஞர்.தைக்கா சுஐப் இஸ்லாத்தின் முதலாவது கலீபா அபூபக்கர்(றழி) அவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்.

கல்வி தொகு

தைக்கா சுஐப் தனது ஆரம்பக் கல்வியை தனது தந்தையிடம் கற்றார்.அவரது தந்தை தைக்கா சுஐபின் ஆன்மீக வழிகாட்டியாகவும் விளங்கினார்.அவரது தந்தை இஸ்லாமியக் கல்விகளை கற்பிப்பதற்கான இஜாஸாவை அல்லது இஸ்லாமிய சட்டவியல் கல்வியை கற்பிப்பதற்கு வழங்கும் அனுமதிச் சான்றிதழை சுஐப் அவர்களுக்கு வழங்கினார். பாரம்பரிய கல்விகளைக் கற்றதன் பின்னர்,தென்னிந்தியாவின் பாகிய்யாதுஸ் ஸாலிஹாத், ஜமாலிய்யா அரபுக்கல்லூரி மற்றும் வட இந்தியாவின் தாருல்உலூம் தேவ்பந்த்,ஜாமிய்யா மில்லியா இஸ்லாமியா ஆகிய இடங்களில் கல்வி கற்றார்.

தைக்கா சுஐப் அரபு மற்றும் பாரீசகத்தில் தனது இளமானிப்பட்டத்தை இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பிராந்தியதத்தில் அரபுத் தமிழ் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட அவர்கள், இத்துறையில் தனது முதுமாணிப் பட்டத்தையும், கலாநிதிப் பட்டத்தையும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.அவர்கள் தனது கலாநிதி ஆய்வுக்காக "இலங்கை மற்றும் தமிழ் நாட்டில் அரபு,அரபுத்தமிழ் மற்றும் பாரசீகம்" என்ற நூலை எழுதினார்.அவர்களிடம் இயற்கையிலேயே மொழியைக் கையாள்வதில் காணப்பட்ட திறனின் காரணமாக அரபு, ஆங்கிலம்,தமிழ்,மலையாளம்,உர்து,பராசீகம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.

ஆய்வு தொகு

இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் தொடர்பாக தனது ஆய்வை மேற்கொண்டார். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் "அரபு, அரபுத்தமிழ், பாரசீகம், உர்து" ஆகிய மொழிகள் மற்றும் கல்வி, இலக்கியத் துறைகளுக்கு வழங்கிய பங்கிளிப்புக்கள்" என்ற தலைப்பில் 30 வருட ஆராய்ச்சியின் பின்னர் 880 பக்கங்களைக் கொண்ட ஆய்வுநூலை வௌயிட்டார். இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய மூன்று சார்க் நாடுகளின் அரச தலைவர்களால் இந்த ஆய்வுநுால் வெளியிட்டு வைக்கப்பட்டது.[1]

வெளியீடுகள் தொகு

தைக்கா சுஐப் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 4 பெரிய ஆக்கங்களும், 7 சிறிய ஆக்கங்களும் அடங்கும். அரூஸிய்யதுல் காதிரிய்யா ஆன்மீக வழியமைப்பின் "ஜலாலிய்யா ராதீப்" புத்தகத்தின் 500,000 இற்கும் அதிகமான பிரதிகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவர்களால் எழுதப்பட்ட "அல்-முன்ஜியாத்" எனும் புத்தகத்தின் 37,000 இற்கும் அதிகமான பிரதிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.[2]

பெரிய ஆக்கங்கள் தொகு

 • Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu: A Study of the Contributions of Sri Lanka and Tamil Nadu to Arabic, Arwi, Persian, and Urdu Languages, Literature, and Education, Madras:1993[3]
 • அல் முன்ஜியாத்|: A Panacea for the Body and Soul, Chennai:2014[4]
 • ahsanu-l mawa'iz wa azyanu-l malafiz, Kilakkarai:1954[2]
 • ராத்தீப் ஜலாலிய்யா, சென்னை, கொழும்பு, பினாங்கு[5]

சிறிய ஆக்கங்கள் தொகு

 • If not for the Prophet ﷺ (English), Kilakkarai:1956[2]
 • Sacred Hajj and Pious Ziyara (English), Chennai:2007[2]
 • நித்திய கடன் (Tamil), Kilakkarai:1948[2]
 • மான்பு மிக்க றமளான் (Tamil), Kilakkarai:1955[2]
 • நபி ﷺ தோன்றியிரா விட்டால் (Tamil), Kilakkarai:1955[2]
 • அதான் இகாமத்தின் சிறப்பு (Tamil), Madras:1995[2]
 • புனித ஹஜ்ஜு : அழகிய வழிமுறை (Tamil), Chennai:2007[2]

அங்கீகாரம் தொகு

 • 1994 மே மாதம் 7ஆம் திகதி, இந்தியாவின் 9ஆவது ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்களால், தைக்கா சுஐப் அவர்களுக்கு "சிறந்த அரபு அறிஞருக்கான தேசிய விருது" வழங்கப்பட்டது.[6]
 • 2013ஆம் ஆண்டு, ஜோர்தானின் அரச இஸ்லாமிய மூலோபாய கற்கைநெறிகள் நிலையத்தின் மூலம் தரப்படுத்தப்படும் "செல்வாக்கு 500 முஸ்லிம்கள்" பட்டியலில் முதன்முறையாக தைக்கா சுஐப் அவர்களின் பெயர் இடம்பெற்றது.[7]
 • 2016 ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி, இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவதற்காக கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் மேற்கொண்ட பணிகளை கௌரவிக்கும் வகையில் இலங்கையின் 7ஆவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.[8]

மரணம் தொகு

தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் 2021 ஜூன் மாதம் 15ஆம் திகதி இந்தியாவின் கேரளாவில் காலமானார். அவர்கள் கீழக்கரை அரூஸிய்யா தைக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.[9][10]

மேற்கோள்கள் தொகு

 1. "Ark of Guidance – Research and Thesis". Thaika Shuaib. Archived from the original on 4 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Ark of Guidance – Writings and Works". Thaika Shuaib. Archived from the original on 17 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. ʻālim, Tayka Shuʻayb (1993). "Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu". பார்க்கப்பட்ட நாள் 15 July 2019 – via Google Books.
 4. "Al Munjiyath – அல் முன்ஜியாத்". Salamath Book House. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.
 5. "Rathibu Jalaliyya – ராத்தீப் ஜலாலிய்யா". Salamath Book House. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.
 6. "Ark of Guidance – Awards and Felicitations". Thaika Shuaib. Archived from the original on 4 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
 7. "Sheikh Dr Thaika Shuaib". The Muslim 500. November 2013. பார்க்கப்பட்ட நாள் 1 October 2019.
 8. "Event to Felicitate Dr Taika Shuaib Alim". Daily Mirror (Sri Lanka). April 2016. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
 9. "டாக்டர் தைக்கா சுஐப் ஆலிம் காலமானார்". Thinakaran (The Associated Newspapers of Ceylon Ltd). 17 June 2021. 
 10. "புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் காலமானார்". YazhNews (Sri Lanka). April 2016. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைக்கா_ஷுஐபு&oldid=3588401" இலிருந்து மீள்விக்கப்பட்டது