தொலைக்காட்சி உரிமம் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு தொலைக்காட்சி உரிமம் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட இந்திய மாநிலங்களின் பட்டியல் ஆகும். 13 மார்ச் 2012 அன்று இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் "வீட்டுவசதி மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு" இன் கீழ் விரிவான புள்ளிவிபரங்களை வெளியிட்டது. 2011 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டது. [1] 2011 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளின்படி இந்தியாவில் யூனியன் பிரதேசங்களில் தில்லி 88% மாநிலங்களில் தமிழ்நாடு 87% அதிக தொலைக்காட்சி உரிமையைக் கொண்டுள்ளது. பீகார் மாநிலங்களில் மிகக் குறைந்த தொலைக்காட்சி உரிமையை 14.5% கொண்டுள்ளது.

2001 மற்றும் 2011 க்கு இடையில் தொலைக்காட்சிகள் வைத்திருக்கும் இந்திய குடும்பங்களின் சதவீதம் 31.6% 2001 இருந்து 47.2% ஆக 2011 ஆக அதிகரித்துள்ளது.

எண் மாநிலம் தொலைக்காட்சி உரிமம் (%)

(மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011)
மக்கள் தொகை கணக்கெடுப்பு (2001)
1 தில்லி 88.0 74.5
2 தமிழ்நாடு 87.0 39.5
3 பஞ்சாப் 82.6 67.7
4 சண்டினர் 82.5 73.9
5 கேரளம் 76.8 38.8
6 இமாச்சலப் பிரதேசம் 74.4 53.3
7 அந்தாமன் நிக்கோபார் தீவுகள் 68.5 52.4
8 அரியானா 67.9 53.0
9 இலட்சத்தீவுகள் 64.1 33.4
10 உத்திராகண்டம் 62.0 42.9
11 தமனும் தியூவும் 61.0 49.3
12 கருநாடகம் 60.0 37.0
13 ஆந்திரப் பிரதேசம் (சேர்த்து தெலங்காணா) 58.8 31.5
14 மகாராட்டிரம் 56.6 44.1
15 மிசோரம் 55.1 48.3
16 சிக்கிம் 54.7 30.9
17 குசராத்து 53.8 38.7
18 சம்மு காசுமீர் 51.0 40.7
19 மணிப்பூர் 47.4 24.2
Overall இந்தியா 47.2 31.6
20 தாத்ரா - நகர் அவேலி 47.2 27.8
21 திரிபுரா 44.9 23.7
22 அருணாசலப் பிரதேசம் 41.1 25.7
23 நாகாலாந்து 37.9 18.1
24 ராசத்தான் 37.6 28.1
25 மேற்கு வங்காளம் 35.3 26.6
26 மேகாலாயா 33.7 20.9
27 உத்திரப் பிரதேசம் 33.2 25.0
28 மத்தியப் பிரதேசம் 32.1 29.6
29 சத்தீசுகர் 31.3 21.5
30 அசாம் 27.5 18.3
31 சார்க்கண்ட் 26.8 17.2
32 ஒடிசா 26.7 15.5
33 பீகார் 14.5 9.1

மேற்கோள்கள்

தொகு