தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (இந்தியா)

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour & Employment) இந்திய அரசின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்த அமைச்சகமானது தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் மற்றும் கடைநிலையில் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பாகும். [1]

9 நவம்பர் 2014 அன்று தொழில்துறை பயிற்சிகள் மற்றும் பயிற்சிப் பொறுப்புகள் போன்ற திறன் மேம்பாட்டுப் பொறுப்புகளை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. [2]

இதன் தற்போதைய மூத்த அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் இணை அமைச்சர் இராமேஷ்வர் தெலி ஆவார்.

பணிகள்

தொகு

செயல்பாடுகள்

தொகு

அமைச்சகத்தின் மிக முக்கியமான பணிகள்: [3]

  • தொழிலாளர் கொள்கை மற்றும் சட்டம்
  • பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உழைப்பின் நலன்
  • சமூக பாதுகாப்பு
  • தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில்துறையில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துதல்
  • தொழில்துறை சார்ந்த பிரச்சனைகளை தொழில்துறை தீர்ப்பாயங்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்கள் வழியாக தீர்வுகாண்பது
  • தொழிலாளர் மேம்பாட்டுக் கல்வி
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள்

தன்னாட்சி நிறுவனங்கள்

தொகு
  • ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
  • தொழில்சார் சேவைகளுக்கான தேசிய நிறுவனம் (முந்தைய CIRTES)
  • வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம்
  • தொழிலாளர் கல்விக்கான மத்திய வாரியம்

இந்திய தொழிலாளர் அமைச்சர்கள்

தொகு
எண் பெயர் பொறுப்பு வகித்த வருடம் கட்சி பிரதமர்கள்
1 ஜெகசீவன்ராம் 15 ஆகத்து 1947 13 மே 1952 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
2 வி. வி. கிரி 13 மே 1952 07 செப்டம்பர் 1954
3 கண்டஞ்சி தேசாய் 10 செப்டம்பர் 1954 16 ஏப்ரல் 1957
4 குல்சாரிலால் நந்தா 17 ஏப்ரல் 1957 10 ஏப்ரல் 1962
5 ஜெய்சுக் லால் கைத்தி
(தொழிலாளர் அமைச்சர்)
16 ஏப்ரல் 1962 15 நவம்பர் 1962
6 குல்சாரிலால் நந்தா 01 செப்டம்பர் 1963 24 சனவரி 1964
7 தாமோதரம் சஞ்சீவய்யா 24 சனவரி 1964 24 சனவரி 1966 ஜவகர்லால் நேரு
லால் பகதூர் சாஸ்திரி
8 ஜெகசீவன்ராம் 24 சனவரி 1966 13 March 1967 இந்திரா காந்தி
9 ஜெய்சுக் லால் கைத்தி 13 மார்ச் 1967 15 நவம்பர் 1969
10 ஜெகசீவன்ராம் 15 நவம்பர் 1969 18 பெப்ரவரி 1970
11 தாமோதரம் சஞ்சீவய்யா 18 பெப்ரவரி 1970 18 மார்ச் 1971
12 ரவீந்திர வர்மா 26 மார்ச் 1977 28 சூலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
13 ஃபஸ்லூர் ரஹ்மான் 28 சூலை 1979 14 சனவரி 1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி சரண் சிங்
14 ஜனகி பல்லப் பட்நாயக் 14 சனவரி 1980 07 சூன் 1980 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
15 நா. த. திவாரி 19 அக்டோபர் 1980 08 ஆகத்து 1981
16 பகவத் ஜா ஆசாத்
(தனி அதிகாரம்)
15 சனவரி 1982 02 நவம்பர் 1982
17 வீரேந்திர பட்டீல் 02 நவம்பர் 1982 31 திசம்பர் 1984 இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
18 டங்குத்துரி அஞ்சா
(தனி அதிகாரம்)
31 திசம்பர் 1984 20 சனவரி 1986 ராஜீவ் காந்தி
19 பி. ஏ. சங்மா
(தனி அதிகாரம்)
20 செப்டம்பர் 1986 06 பெப்ரவரி 1988
20 மஹான் லால் போட்டர் 06 பெப்ரவரி 1988 14 பெப்ரவரி 1988
21 ஜக்திஷ் டைட்லெர்
(தனி அதிகாரம்)
14 பெப்ரவரி 1988 26 சூன் 1988
22 பிந்டேஸ்வரி துபாய் 26 சூன் 1988 02 திசம்பர் 1989

மேற்கோள்கள்

தொகு
  1. "Ministry of Labour and Employment Annual Report for Year 2011–2012" (PDF). Ministry of Labour and Employment. பார்க்கப்பட்ட நாள் 6 June 2012.
  2. "National Skill Development Mission". www.pmindia.gov.in.
  3. "Thrust Areas of Ministry of Labour & Employment, Govt. of India".

வெளி இணைப்புகள்

தொகு