தோரியம் ஈரயோடைடு
தோரியம் ஈரயோடைடு (Thorium diiodide) என்பது ThI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். தோரியத்தின் அயோடைடு உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. Th4+(I-)2e-2 என்ற அயனி வாய்பாட்டால் குறிக்கப்படும் ஓர் எலக்ட்ரைடும் காற்று உணரியுமாகும்..[3]
இனங்காட்டிகள் | |
---|---|
13779-95-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21115822 |
| |
பண்புகள் | |
ThI2 | |
வாய்ப்பாட்டு எடை | 612.75 |
தோற்றம் | தங்கம் பளபளப்பு |
அடர்த்தி | 7.21 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 850 °C[2] |
கரையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறு கோணகம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கதிரியக்கப்பண்பு கொண்டது. |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம் ஈரயோடைடு பிரசியோடைமியம் ஈரயோடைடு கடோலினியம் ஈரயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதோரியம்(IV) அயோடைடுடன் விகிதவியல் அளவில் தோரியத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் தோரியம் ஈரயோடைடு உருவாகும்:[3][4]
- ThI4 + Th -> 2ThI2
தோரியம் மற்றும் அயோடின் தனிமங்களை நேரடியாக வினைபுரியச் செய்தும் தோரியம் ஈரயோடைடு தயாரிக்கலாம்:[4]
- Th + I2 -> ThI2
தோரியம் மூவயோடைடை 550 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தி சிதைவு வினைக்கு உட்படுத்தினாலும் கூட தோரியம் ஈரயோடைடு உருவாகும்:[4]
- 2ThI3 -> ThI4 + ThI2
பண்புகள்
தொகுசீரியம், பிரசியோடைமியம் மற்றும் கடோலினியம் ஆகியவற்றின் ஈரயோடைடுகளைப் போலவே இதுவும் உலோகத் தங்கப் பளபளப்பு மற்றும் அதிக மின் கடத்துத்திறன் கொண்டதாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Guggenberger, Lloyd J.; Jacobson, R. A. (November 1968). "Crystal structure of thorium diiodide" (in en). Inorganic Chemistry 7 (11): 2257–2260. doi:10.1021/ic50069a017. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50069a017.
- ↑ Edelstein, Norman M.; Fuger, J.; Morss, Lester R. (2010). The chemistry of the actinide and transactinide elements (4th ed.). Dordrecht: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0.
- ↑ 3.0 3.1 3.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. p. 1272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 4.0 4.1 4.2 Handbuch der präparativen anorganischen Chemie. 1 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-02328-1.