தோரியா பச்சைப் பாம்பு

தோரியா பச்சைப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
தையாசு
இனம்:
தை. தோரியே
இருசொற் பெயரீடு
தையாசு தோரியே
பொளஞ்சர், 1888
வேறு பெயர்கள் [2]
  • சைக்கோபியாப்சு தோரியே
    பொளஞ்சர், 1888
  • அப்லேப்சு தோரியே
    — பொளஞ்சர், 1890
  • லையோபெல்டிசு தோரியே
    —வால்]], 1924
  • யூரிபோலிசு தோரியே
    — போப், 1935
  • எண்டிகைனசு தோரியே
    — சுந்தால், 1981
  • சைக்கோபியாப்சு தோரியே
    — சோகோ & அட்லர், 1993
  • ஒபியோடிரைசு தோரியே
    —தாசு, 1996
  • ஒபியோடிரைசு தோரியே
    — சர்மா, 2004
  • தையாசு தோரியே
    — பிகுரோ மற்றும் பலர், 2016

தோரியா பச்சைப் பாம்பு (Doria 's Green Snake) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இந்தச் சிற்றினம் ஆசியாவில் காணப்படும் அகணிய உயிரி.[2]

சொற்பிறப்பியல்

தொகு

இத்தாலிய இயற்கை ஆர்வலர் கியாக்கோமோ தோரியா நினைவாகத் தோரியா என்ற சிற்றினப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3]

புவியியல் வரம்பு

தொகு

தை. தோரியா தென்மேற்கு சீனா (யுன்னான்) வடகிழக்கு இந்தியா (அசாம்) மற்றும் வடக்கு மியான்மர் (கச்சின் மலை) ஆகியவற்றில் காணப்படுகிறது.[2]

வாழிடம்

தொகு

பை. தோரியாவின் விருப்பமான இயற்கை வாழிடங்கள் காடுகள், புதர் நிலங்கள் மற்றும் புல்வெளிகளில் சுமார் 600 முதல் 1,780 மீட்டர் உயரத்தில் வாழ்கின்றன.[1]

விளக்கம்

தொகு

பை. தோரியா பாம்பின் மொத்த உடல் நீளம் 91 செமீ (36 அங்குலம்) வரையும், இதில் வால் 21 செமீ (8.3 அங்குலம் நீளம்) நீளம் வரையும் வளரக்கூடியது. முதுகுப்புறம் பச்சை நிறத்திலும் வயிற்றுப்பகுதியில் வெண்மை நிறத்திலும் காணப்படும் இந்தப் பாம்பின் மேல் உதடு வெண்மையாக இருக்கும். முதுகெலும்பு செதில்கள் மென்மையாகவும், உச்சிக் குழிகள் இல்லாமல், உடலின் நீளம் முழுவதும் 15 வரிசைகளாக அமைக்கப்பட்டுள்ளன.[4]

நடத்தை

தொகு

பை. தோரியா பகலாடி[1] வகையினமாகவும் மரங்களில் வாழக்கூடியதாகவும் இருக்கும்.[2]

இனப்பெருக்கம்

தொகு

பை. தோரியா முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]

மெற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Wogan G, Vogel G (2021). "Ptyas doriae". The IUCN Red List of Threatened Species 2021: https://dx.doi.org/10.2305/IUCN.UK.2021-3.RLTS.T192213A2056524.en. Accessed on 12 September 2021.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Ptyas doriae at the Reptarium.cz Reptile Database
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Cyclophiops doriae, p. 75).
  4. Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Opheodrys doriae, p. 181).

மேலும் வாசிக்க

தொகு
  • Boulenger GA (1888). "An Account of the Reptilia obtained in Burma, north of Tenasserim, by M[onsieur]. L. Fea, of the Genova Civic Museum". Annali del Museo Civico di Storia Naturale di Genova, Serie Seconda 6 (26): 593-604 + Plates V-VII. (Cyclophiops doriae, new species, p. 599 + Plate VI, figures 1, 1a, 1b).
  • Boulenger GA (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Ablabes doriæ, new combination, pp. 306–307).
  • Boulenger GA (1894). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume II., Containing the Conclusion of the Colubridæ Aglyphæ. London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xi + 382 pp. + Plates I-XX. (Ablabes doriæ, pp. 279–280).
  • Sharma RC (2003). Handbook: Indian Snakes. Kolkata: Zoological Survey of India. 292 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8181711694. (Opheodrys doriae).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியா_பச்சைப்_பாம்பு&oldid=4126921" இலிருந்து மீள்விக்கப்பட்டது