நக்கசேலம் (ஆங்கிலம்:Nakkasalem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமாகும். பெரம்பலூரில் இருந்து துறையூர் செல்லும் பிரதான சாலையில் பச்சை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.( பெரம்பலூரில் இருந்து சுமார் 22 கி. மீ தொலைவிலும், துறையூரில் இருந்து 13 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ) நக்கசேலம் கிராமத்தில் சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளன. இவ்வூரை சுற்றி புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, சிறுவயலூர், மங்கூன், விராலிப்பட்டி ஆகிய சிறிய கிராமங்கள் உள்ளன.[1]

விவசாய தொழில்

தொகு

இக்கிராமத்தில் நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், மிளகாய், எள், உளுந்து, பருத்தி முதலிய புஞ்சை வெள்ளாமையும் செய்கின்றனர். ஆடி பட்டங்களில், மானாவரி பயிர்களான பச்சைபயிறு, தட்டைபயிறு, மொச்சை போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கியமாக சின்ன வெங்காயம் இந்த ஊரில் பணப்பயிராக பயரிடப்படுகிறது.

அஞ்சல் நிலையம்

தொகு

இக்கிராமத்தில் முழு நேர அஞ்சல் நிலையம் அமையக்கப் பெற்றுள்ளது. அஞ்சல் குறியீடு எண் : 621118 .

வங்கி

தொகு

இங்கே கனரா வங்கி ஒன்று உள்ளது.

ஊரின் வடக்கே மலை அடிவாரத்தில் சின்ன ஏரியும், ஊரின் தெற்கே பெரிய ஏரியும் உள்ளன. ஊரின் வடக்கே உள்ள மலையில் இருந்து ஆற்று வழியாக ஊரை கடந்து, தெற்கே உள்ள பெரிய ஏரியில் கலக்கின்றது.ஊரின் தெற்கே உள்ளே ஏரி தான் பாசன பயன்ப்பாட்டுக்கு உள்ளது. இது நக்கசேலம் கிராமத்துக்கு மட்டும் அல்லாமல் அருகில் உள்ள புது அம்மாபாளையம் ஊருக்கும் பெரிதும் பயன்பெறுகிறது. மேலும் தெற்கே உள்ள ஏரியில் தான் ஸ்ரீ செல்லி அம்மனும், அய்யனாரும் உள்ளன.

குளங்கள்

தொகு

ஊரை ஒட்டி இரண்டு பெரிய குளங்கள் உள்ளன.

1. இரட்டைக்குளம்(இன்டு குளங்கள் ஒன்றாக அமைய பெற்றதால்)

2. ஒற்ற குளம்(ஓர் குளம் )

சந்தை

தொகு

ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை ஒற்றை குளத்து மேட்டில் வாரச்சந்தை நடைபெறுகிறது.

நீர் ஊற்று

தொகு

நக்கசேலம் கிராமத்தில் ஊரின் வட புறமுள்ள மலையில் பாறையின் மீது சுனை நீர் உள்ளது. எப்போதும் நீர் வற்றாமல் பாறையின் மீது அமையபெற்றுள்ளது.

திருவிழா

தொகு

கல்வி நிலையம்

தொகு

1.அரசு மேனிலைப்பள்ளி (2013–2014)

2.அறிவாலயம் மெற்றிகுலேசன் மேனிலைப்பள்ளி

3.ஹயகிரிவா மெற்றிகுலேசன் மேனிலைப்பள்ளி

4.ஸ்ரீ ராம் ஐ.டி.ஐ

5.ஸ்ரீ ராம் செவிலியர் கல்லூரி

பெட்ரோல் நிலையம்

தொகு

1.பாரத் பெட்ரோல் நிலையம்

2.எஸ்ஸார் பெட்ரோல் நிலையம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu – List of Habitations". indiawater.gov.in. Ministry of Drinking Water and Sanitation. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்கசேலம்&oldid=4099786" இலிருந்து மீள்விக்கப்பட்டது