நஜ்மா சாதிக்
நஜ்மா சாதிக் (Najma Sadeque) (1943 - 8 சனவரி 2015 [1] ) பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் முன்னணி பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், மனித உரிமைகள் குறிப்பாக பெண்கள் உரிமை) ஆர்வலரும், கலைஞரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஓவியரும் ஆவார். இவர் சமூக பொருளாதார சிக்கல்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். மேலும் பல புத்தகங்களையும் கட்டுரைகளை யும் எழுதினார். இவர் 1975ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்த ஷிர்கத் காஹ் என்ற பெண்களின் அரசு சார்பற்ற அமைப்பை நிறுவினார். இவர் பாக்கித்தானின் மகளிர் செயல் மன்றத்தையும் இணைந்து நிறுவினார். [2] [1]
நஜ்மா சாதிக் | |
---|---|
பிறப்பு | 1943 வங்காளம், பிரித்தானிய இந்தியா (தற்போது வங்காளதேசம்) |
இறப்பு | 8 சனவரி 2015 கராச்சி |
தேசியம் | பாக்கித்தானியர் |
பணி | ஊடகவியலாளர், எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர் |
அறியப்படுவது | ஷிர்கத் காஹ் அமைப்பின் நிறுவனர் (1975) பாக்கித்தானின் மகளிர் செயல் மன்றம் (1986) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஹவ் தே ரன் பாகித்தான், ஹவ் தே ரன் தி வோர்ல்டு', மேலும் பல |
சுயசரிதை
தொகுசாதேக் 1943இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் பிறந்தார். பின்னர், கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது வங்காளதேசம் ) நில விவசாயத்தின் சூழலில் வளர்க்கப்பட்டார். இது இவரது எதிர்கால சிந்தனையை விதையிட்டது. டாக்காவில் உள்ள விகருன்னிசா நூன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த இவர் ஆங்கிலத்தில் எழுதுவதில் சிறப்பான திறமைக்கு பெயர் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு இவர் கராச்சிக்குச் சென்றார். அங்கு அவர் ஆரம்பத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தில் நகல் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். 19 வயதில் கராச்சியில் தனது முதல் ஓவியக் கண்காட்சியை நடத்தினார்.
இவர் பல செய்தித்தாள்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் டான் உடனும், பின்னர் தி நியூஸ் மற்றும் தி நியூஸ் இன்டர்நேஷனலில் பணியாற்றினார்.[1]
1975ஆம் ஆண்டில், தனது நாட்டில் மனித உரிமை மீறல்களால் கவலையடைந்த சாதிக், மேலும் ஏழு பேருடன் சேர்ந்து, ஷிர்கத் காஹ் என்ற ஒரு அரசு சார்பற்ற அமைப்பை நிறுவினார்.[1] இவர் 1981இல் பாக்கித்தானில் பெண்கள் செயல் மன்றத்தையும் நிறுவினார். இது முக்கியமாக பாக்கித்தானின் அரசுத் தலைவராக இருந்த சியா-உல்-ஹக் அறிவித்த சட்டங்களின் கீழ் பெண்களின் உரிமை மீறல்களால் கட்டளையிடப்பட்டது. தி நியூஸ் இதழுக்காக இவர் "WE" - என்ற ஒரு வார இதழைத் தயாரித்தார். இது பின்னர் "தி நியூஸ் ஆன் பிரைடே" என மறுபெயரிடப்பட்டது. பின்னர், "தி நியூஸ் ஆன் சண்டே" என்று மாற்றப்பட்டது. இது பரந்த தலைப்புகளை உள்ளடக்கியது. தி நியூஸை விட்டு வெளியேறிய பிறகு, மனித உரிமைகள், பாலின பிரச்சினைகள், சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களில் தி நியூஸ் உட்பட பல செய்தித்தாள்களுக்கு சுயாதீனப் பத்திரிகையாளராக பணியாற்றினார். [3] இவர் செய்தித்தாள்களில் வேலை செய்வதை நிறுத்திய பிறகு, ஷிர்கத் காஹ், பாக்கித்தானில் பெண்கள் செயல் மன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக இவர் பெரும்பாலும் தனது நேரத்தை அர்ப்பணித்தார்.
இறப்பு
தொகுசிறுநீரகம் செயலிழப்பும் மாரடைப்ப்புக் காரணமாகவும் நஜ்மா சாதிக் 8 சனவரி 2015 அன்று தனது 72 வயதில் இறந்தார். ஆவணப்படங்களின் தயாரிப்பாளரான இவரது மகள் தெனீப் சம்புல் தனது தாய்க்கு ஒரு இரங்கல் செய்தியில் கூறினார்:
எனது அற்புதமான அடங்காத அம்மாவை நான் எத்தனை வழிகளில் விவரிக்க முடியும் - அவள் பல தொப்பிகளை அணிந்தாள் - கடைசி வரை ஒரு ஆர்வலர், 35 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளர், பாக்கித்தானில் பெண்கள் செயல் மன்றத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் மற்றும் பல ஆர்வங்களைக் கொண்டவர் மற்றும் அற்புதமான புதிய முன்னோக்குகளையும் யோசனைகளையும் கொண்டவர் ". [1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Hasan, Shazia. "Rights activist, journalist Najma Sadeque is dead".
- ↑ Havel 2007.
- ↑ "Veteran journalist Najma Sadeque passes away". The News. 9 January 2015. http://www.thenews.com.pk/print/17256-veteran-journalist-najma-sadeque-passes-away. பார்த்த நாள்: 17 March 2016.
உசாத்துணை
- Havel, Václav l (2007). The View from Prague: The Expectations of World Leaders at the Dawn of the 21st Century. Central European University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-963-7326-95-0.