நடனக் கோயில்கள்

நடனக் கோயில்கள் (Nachna Hindu temples, also referred to as Nachana temples or Hindu temples at Nachna-Kuthara),[2][3] இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் கஞ்ச் எனுமிடத்தில் உள்ள கிபி 5 அல்லது 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்கோயில்கள் ஆகும். இக்கோயில்கள் சிவன், பார்வதி, துர்கை, விஷ்ணு மற்றும் பிற தெய்வங்களுக்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயில்கள் குப்தப் பேரரசு காலத்தில் நகரா கட்டிடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. நான்கு கோண வடிவ கோயில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[4][5][6]

நடனக் கோயில்கள்
கிபி 5- அல்லது 6ஆம் நூற்றாண்டின் பார்வதி தேவியின் கற்கோயில்
பார்வதி கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கஞ்ச்
புவியியல் ஆள்கூறுகள்24°23′57.3″N 80°26′51.2″E / 24.399250°N 80.447556°E / 24.399250; 80.447556
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பன்னா[1]

நடனக் கோயில்களில் பெரும்பான்மையானது அழிந்த நிலையில் உள்ளது. பார்வதி கற்கோயில் மட்டும் நல்ல நிலையில் உள்ளது. பார்வதி கோயிலின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனை தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. கோயில் சுவர்களில் நடனமாடும் இரண்டு மங்கைகளின் சிற்றின்பச் சிற்பங்கள் அதிகம் உள்ளதால், இதனை நடனக் கோயில் என்று அழைக்கப்பட்டது.[6][4] இக்கோயில் சுவர்களில் இராமாயண காட்சிகளை எடுத்துக் கூறும் சிற்பங்கள் கொண்டுள்ளது.[7][8][9]பன்னா தேசியப் பூங்கா அருகில் இக்கோயில் உள்ளது. இதனை சௌமுக்நாத் கோயில் என்றும் அழைப்பர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nachna Kuthara Parvati Temple". Archaeological Survey of India, Bhopal Circle.
  2. Hardy, Adam (2014). "Nagara Temple Forms: Reconstructing Lost Origins". Journal of History and Social Sciences 5. பன்னாட்டுத் தர தொடர் எண்:2229-5798. http://jhss.org/articleview.php?artid=238. பார்த்த நாள்: 2021-02-11. 
  3. Paul Nietupski; Joan O'Mara (2011). Reading Asian Art and Artifacts: Windows to Asia on American College Campuses. Lehigh University Press. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61146-072-8.
  4. 4.0 4.1 Ulrich Wiesner (1978). Nepalese Temple Architecture: Its Characteristics and Its Relations to Indian Development. Brill. pp. 45–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05666-1.
  5. Radhakumud Mookerji (1959). The Gupta Empire. Motilal Banarsidass. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0440-1.
  6. 6.0 6.1 George Michell (1977). The Hindu Temple: An Introduction to Its Meaning and Forms. University of Chicago Press. pp. 95–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-53230-1.
  7. B.C. Shukla (1990), The Earliest Inscription of Rama-Worship, Proceedings of the Indian History Congress, Vol. 51, pp. 838-841
  8. Kodaganallur Ramaswami Srinivasa Iyengar (2005). Asian Variations in Ramayana. Sahitya Akademi. pp. 126–127, 9 with Photograph Plate 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1809-3.
  9. Mandakranta Bose (2004). The Ramayana Revisited. Oxford University Press. pp. 337, 355. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-516832-7.

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடனக்_கோயில்கள்&oldid=3704769" இலிருந்து மீள்விக்கப்பட்டது