November 28 நட்பு நாள் (Friendship Day) என்பது பல நாள் நட்பிற்காக கொண்டாடப்படும் தினம் ஆகும். (அரபு : اليوم الدولي للصداقة‎, சீன மொழி: 国际友谊日, பிரஞ்சு: Journée internationale de l’amitié, செருமானிய மொழி: Internationaler Tag der Freundschaft, போர்த்துகேய மொழி: Dia do Amigo, உருசிய மொழி: Международный день дружбы, கன்னடம்: ಸ್ನೇಹಿತರ ದಿನಾಚರಣೆ.., எசுப்பானியம்: Día del Amigo, உருது: عالمی یوم دوستی‎, இந்தி: मित्रता दिवस, வங்காள மொழி: বন্ধুত্ব দিবস, தெலுங்கு : స్నేహితుల దినోత్సవం, கொங்கனி: मित्रताचो दिस)

நட்பு நாள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு நட்பு நாள் கொண்டாடப்பட முன்மொழியப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை சூலை 30 ஆம் திகதியை சர்வதேச நட்பு நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. [1]இருப்பினும் இந்தியா உட்பட சில நாடுகள் ஆகத்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையை நட்பு நாளாக கொண்டாடுகின்றன.[2] நேபாளத்தில் சூலை 30 ஆம் திகதியும், ஒகையோவின் ஒபர்லனில் ஏப்ரல் 9  ஆம் திகதியும் நட்பு நாள் கொண்டாடப்படுகின்றது.[3]

வரலாறு

தொகு

1998 ஆம் ஆண்டு நட்பு நாளை முன்னிட்டு, ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னனின் மனைவி நானே அன்னன், வின்னி தி பூஹை ஐக்கிய நாடுகள் சபையின் உலக நட்பு தூதராக நியமித்தார். இந்த நிகழ்வை ஐ. நா பொது தகவல் மற்றும் டிஸ்னி எண்டர்பிரைசஸ் இணைந்து வழங்கியது. மேலும் கேத்தி லீ கிஃபோர்டு  தொகுத்து வழங்கினார்.

இந்த தினத்தில் நண்பர்கள் தங்களுக்கு இடையே பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்கின்றனர். இந்தியா, நேபாளம், வங்காளதேசம், தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் நட்புக் கயிறுகளை பரிசளித்து கொள்ளுதல் பிரபலமானதொன்றாகும்.[4] தகவல் தொழினுட்பத்தின் வளர்ச்சிக்கு பிறகு நட்பு நாள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படுகின்றது. [5]27 சூலை 2011 இல் ஐ. நா சபையின் 65 ஆவது அமர்வு சூலை 30 ஆம் திகதியை சர்வதேச நட்பு நாள் என்று அறிவித்தது.

உலக நட்பு தினத்தின் யோசனை முதன்முதலில் ஜூலை 20, 1958 அன்று டாக்டர் ரமோன் ஆர்ட்டெமியோ பிராச்சோவால் பராகுவேவின் அசுன்சியனுக்கு வடக்கே 200 மைல் தொலைவில் பராகுவே நதியில் உள்ள பியூர்டோ பினாஸ்கோ என்ற நகரத்தில் நண்பர்களுடனான இரவு விருந்தின் போது முன்மொழியப்பட்டது.[6] அப்போதிருந்து, ஜூலை 30 ஆம் திகதி ஒவ்வொரு ஆண்டும் பராகுவேயில் நட்பு தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் இதை பல நாடுகள் ஏற்றுக்கொண்டன.

ஜூலை 30 ஐ உலக நட்பு தினமாக அங்கீகரிக்க உலக நட்புக்கான அமைப்பொன்று பல ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்தியது. இறுதியாக மே 20 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஜூலை 30 ஐ சர்வதேச நட்பு தினமாக நியமிக்க முடிவு செய்தது. கல்வி மற்றும் பொது விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கைகள் உட்பட, உள்ளூர், தேசிய மற்றும் பிராந்திய சமூகங்களின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களின்படி சர்வதேச நட்பு தினத்தை கடைபிடிக்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொண்டது.[7]

உலக நாடுகளில் நட்பு நாள்

தொகு
  • ஆர்ஜன்டினா , பிரேசில் , ஸ்பெயின் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் , நட்பு நாள் (அல்லது நண்பர்கள் தினம்) ஜூலை 20 அன்று கொண்டாடப்படுகிறது. அர்ஜென்டினா , பிரேசில் , ஸ்பெயின் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் , நட்பு நாள் (அல்லது நண்பர்கள் தினம்) ஜூலை 20 அன்று கொண்டாடப்படுகிறது. [8]
  • வங்காளதேசம் , இந்தியா , மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நட்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இளைஞர்கள் வாழ்த்துக்கள் / குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டு நட்பு நாளை கொண்டாடுகிறார்கள்.[9]
  • பொலிவியா நட்பு தினம் ஜூலை 23 அன்று கொண்டாடப்படுகிறது.[8]
  • ஈக்வடொர், வெனிசுலா, பின்லாந்து, எசுடோனியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நட்பு நாள் பெப்ரவரி 14 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. [8]
  • பராகுவேயில், ஜூலை 30 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுக்கு இடையில் பரிசுகளை வழங்கிக் கொள்கிறார்கள். மேலும் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் கேளிக்கை இரவு விடுதிகளில் நடைபெறுகின்றன.
  • 2009 ஆம் ஆண்டு முதல், பெருவில் சூலை முதல் சனிக்கிழமையன்று நட்பு நாள் கொண்டாடுகிறது. இந்த நாளை பீர் பிராண்ட் பில்சன் காலாவ் முன்மொழிந்தார். உண்மையான நட்பை அங்கீகரித்து அதன் கொண்டாட்டத்தை காதலர் தினத்திலிருந்து வேறுபடுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.[8]
  • அமெரிக்கா பிப்ரவரி 15 அன்று நட்பு தினத்தை கொண்டாடுகிறது. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. "United Nations Official Document". www.un.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "Friendship Initiative". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. A band for ties of friendship". The Times of India. New Delhi. 30 June 2009.
  5. "Flavours of friendship". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  6. "ONU aprobó 30 de julio como Día de la Amistad". ultimahora.com (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  7. UN Res.A/65/L.72
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 "Día del amigo: ¿qué países lo celebran el 20 de julio?". www.lanacion.com.ar (in ஸ்பானிஷ்). 2017-07-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  9. "Celebrating International Friendship Day". Celebrating International Friendship Day | theindependentbd.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்பு_நாள்&oldid=3578839" இலிருந்து மீள்விக்கப்பட்டது