நாகரிகம்

சிக்கலான மாநில சமூகம்
(நாகரீகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாகரிகம் (civilization) என்பது, சிறிய கிராமக் குடியிருப்புகளில் வாழ்ந்துகொண்டு அல்லது நாடோடிகளாகத் திரிந்துகொண்டு உயிர் வாழ்வதற்காக வேட்டையாடலையோ அல்லது சிறிய நிலங்களில் விவசாயத்தையோ மேற்கொண்ட குலக்குழுக்கள் அல்லது பழங்குடிகள் போலன்றி, பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையிலுள்ள சிக்கலான சமூகங்களைக் குறிக்கும். இதற்கீடான ஆங்கிலச் சொல்லின் மூலமான civis என்னும் லத்தீன் மொழிச் சொல் "பிரஜை" அல்லது "நகரவாசி" என்னும் பொருள்கொண்டது. நவீன தொழிற் சமூகம் ஒரு நாகரிக சமூகத்தின் ஒரு வடிவமாகும்.

தூத்திக்குவான், மெக்சிகோவில் அமைந்துள்ள சந்திரனின் பிரமிட்டு.

நாகரிக வளர்ச்சியின் அளவை, வேளாண்மை முன்னேற்றம், தொலைதூர வணிகம், தொழிற் சிறப்பாக்கம், சிறப்பு ஆளும் வகுப்பினர், நகரியம் என்பவற்றின் வளர்ச்சியைக் கொண்டே அளவிடப்படுகின்றது. இந்த அடிப்படையான கூறுகள் தவிர, நாகரிக வளர்ச்சியைப் பல்வேறு துணைக் கூறுகளின் சேர்மானங்களும் குறிக்கின்றன. இவற்றுள் வளர்ச்சியுற்ற போக்குவரத்து முறைமை, எழுத்து, நியம்படுத்திய அளவை முறை, நாணய முறை, சட்ட முறைமை, சிறப்பியல்பான கலை, கட்டிடக்கலை, கணிதம், மேம்பட்ட அறிவியல் விளக்கம், உலோகவியல், அரசியல் கட்டமைப்பு, ஒழுங்கமைக்கப்பட சமயம் போன்றவை அடங்கும்.

நாகரிகத் தோற்றம் குறித்த கருத்துகள்

தொகு

நாகரிகம் என்பது என்ன என்பதற்குத் தெளிவான அளவுகோல்கள் தேவை என்பது வரலாற்று அறிஞர்களின் வாதமாகும்.வெறும் தத்துவார்த்த விளக்கங்கள் மட்டும் போதாது என்றுகூறி அத்தகையோர் வேறு சில திட்டவட்டமான அளவுகோல்களை முன்வைக்க முனைந்தனர்.

வேட்டையாடுதல்

தொகு

மனிதகுலம் வேட்டையாடத் தொடங்கியபிறகே, மனிதன் கல், வெண்கலம், இரும்பு என வகை வகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். இவற்றின் துணையோடு விவசாய வாழ்க்கையை மேற்கொண்டான். அதன் உபரி உற்பத்தி காரணமாக, மனிதன் பிறரோடு இணைந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்கு முன்னேற்றம் கண்டான். இதனால், ஆட்சி முறை, சட்டத் திட்டங்கள், சமுதாய நெறிகள் ஆகியவை மனித நாகரிகத்தில் தோன்றின.

சமுதாய வாழ்க்கை

தொகு

இதன் ஆதரவாளர்கள், வேட்டையாடத் தொடங்கிய காலம்வரை பின்னோக்கிப் போகும் இந்த அணுகுமுறை சரியன்று என்று நம்பினர். இது கற்காலத்துக்கே கூட்டிகொண்டு போய்விடும் என்றனர்.மனித குலம் தோற்றுவித்த கூட்டு சமுதாய வாழ்க்கையே நாகரிகத்தின் தோற்றுவாயிலாகும். அச்சமுதாய வாழ்க்கையில், மனிதர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவன் வழி நடக்க முற்பட்டனர். இதனால், தொழில் அடிப்படையிலான சமுதாயப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் தொழிலில் கவனத்தைச் செலுத்தினர். விவசாயம், வீடு கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், வணிகம் எனப் பல துறைகளில் மனிதகுலம் வளர்ச்சியும், முன்னேற்றமும் கண்டது.

நகர வாழ்க்கை

தொகு

நகரங்கள் வந்தபிறகுதான் நாகரிகம் வந்தது என்பது இவர்கள் வாதமாகும்.லத்தீன் வார்த்தையான Civilis -ன் அடிப்படையிலானது.

எழுத்துவடிவ மொழி

தொகு

சுமேரியாவில் கி.மு. 4000ல் க்யூனிபார்ம் என்னும் சித்திர எழுத்து முறை தோன்றியது. அதன்பின், கி.மு. 3500ல் எகிப்திலும், கி.மு. 1600ல் இஸ்ரேல், லெபனான் பகுதிகளிலும் அகரவரிசை எழுத்து மொழியும் நடைமுறைக்கு வந்தன. மனிதன் தன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது எழுத்து வடிவ மொழிதான். எனவே, எழுத்துவடிவ மொழிதான் நாகரிகத் தொடக்கம் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது.

இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் அம்சங்கள் இவைதாம்:

1) நகரக் குடியிருப்புகள்

2) தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்

3) தேவைக்கு அதிகமான உற்பத்தி

4) வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள்

5) அரசாங்க அமைப்பு

6) பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்

7) தொலைதூர வாணிபம்

8) கலைப் பொருட்கள்

9) எழுத்துக்கள், இலக்கியம்

10) கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.[1]

நதிக்கரை நாகரிகங்கள்

தொகு

உலகில் கூடுதலான நாகரிகங்கள் நதிக்கரையிலே ஆரம்பிக்கப்பட்டன. ஏனென்றால், விவசாயத்திற்குத் தேவையான வண்டல் மண்ணும், தேவையான அளவு நீர் கிடைத்ததாலும், காலநிலை சரியாக இருந்தததாலும் மற்றும் போக்குவரத்திற்கு இலகுவாக இருந்ததாலும் அவர்கள் நதிக் கரையோரங்களில் குடியேறினர்.

சில நதிக்கரை நாகரிகங்கள்

தொகு

யூப்பிரதீஸ் தைக்ரீஸ்

தொகு

இது கி.மு. 3500 தொடக்கம் கி.மு. 1500 வரை இருந்த நதிக்கரை நாகரிகமாகும்.இது மொசப்பதேமிய நாகரிகம் என்றும் சுமேரிய நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் ஈராக் நாட்டிற்குச் சொந்தமானது.

நைல் நதி நாகரிகம்

தொகு

இது கி.மு.3100 தொடக்கம் 1070 வரை இருந்த நதிக்கரை நாகரிகமாகும். இது மிஸிர் நாகரிகம் என்றும் எகிப்திய நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் எகிப்து நாட்டிற்குச் சொந்தமானது.

நாகரிகத்தின் பண்புகள்

தொகு

பொதுவாக நாகரிகங்கள் பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன:

  • விலங்கு வலு, சுழற்சிப் பயிர்ச் செய்கை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விவசாயத் தொழில் நுட்பங்களின் உயர்நிலைப் பயன்பாடு. இது விவசாயிகளின் உயிர்வாழ்வுத் தேவைக்கு அதிகமாக மேலதிக உற்பத்திக்கு வழிசமைத்தது.
  • தங்களுடைய உணவைத் தாங்களே உற்பத்தி செய்வதற்காக பெருமளவு நேரத்தைச் செலவு செய்யத் தேவையின்றியிருந்த குறிப்பிடத் தக்க அளவு மக்கட் பிரிவினர். இவர்கள் வேறு தொழில்களிலும், வணிகத்திலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. இது "specialization of labor" எனக் குறிப்பிடப்படுகிறது.
  • நிலையான குடியிருப்புகளில் இவ்வாறான உணவல்லாதன உற்பத்திசெய்வோரின் சேர்க்கை நகரங்கள் எனப்பட்டன.
  • ஒரு சமூகப் படிநிலையமைப்பு. இது ஒரு பிரபுத்துவ குடும்பத்தின் அல்லது ஓர் இனக்குழுவின் தலைவன் (chieftain) மக்களை ஆளும் தலைமைமுறை அரசாகவோ (Chiefdom) அல்லது ஆளும் வர்க்கம் அரசாங்கத்தின் அல்லது அதிகார வர்க்க (bureaucracy) த்தின் ஆதரவுடன் நடத்தும் ஓர் அரச சமூகமாகவோ இருக்கலாம். அரச அதிகாரம் நகரங்களிலே குவிந்திருக்கும்.
  • சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு நேரடியான ஆதாரமாக அமையாத பல்வேறு சிறப்புத் தொழில் துறை (specialized professions ) களின் உருவாக்கம்.
  • குறைந்தளவு மரபார்ந்த பாரம்பரியங்களைக் கொண்ட சமூகங்களைப் போலன்றி, ஒழுங்கமைந்த சமயம் மற்றும் கல்வி போன்ற சிக்கலான, மரபுசார் சமூக நிறுவனங்களின் உருவாக்கம்.
  • சிக்கலான பொருளாதாரப் பரிமாற்ற வடிவங்களின் வளர்ச்சி. இது பணம் மற்றும் சந்தைகளின் உருவாக்கத்துக்கு வழிவிடக்கூடிய வணிகத்தின் விரிவாக்கத்தை உள்ளடக்கும்.
  • எளிய சமூகங்களில் இருப்பதிலும் கூடிய பொருள்சார் உடைமைகளின் திரள்வு.
  • உயிர் வாழ்வுக்காக விவசாயம் செய்யவேண்டிய தேவையில்லாதவர்கள் உருவாக்கும் கலைகளின் உயர் வளர்ச்சி. இது எழுத்துத் துறையையும் உள்ளடக்கும்.

இந்த வரைவிலக்கணத்தின்படி, சீனா போன்ற சில சமூகங்கள் நாகரிக சமூகங்கள் என்பது தெளிவு, அதுபோல புஷ்மென் போன்ற வேறு சமுதாயங்கள் அவ்வாறில்லை என்பதும் வெளிப்படையாகும். எனினும் இந்த வித்தியாசம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, பசிபிக் வடமேற்கில் பெருவளவு மீன்கள் கிடைப்பது, விவசாயம் இன்றியே மேலதிக உணவு வழங்கலை உறுதிசெய்தது. இங்கு வாழும் மக்கள் நிலையான குடியிருப்புக்களையும், சமூகப் படிமுறையையும், பொருட் செல்வத்தையும், உயர் நிலையிலான கலைகளையும் (அதிக புகழுடையதாக குலக்குறிக் கம்பங்கள்) தீவிர விவசாய வளர்ச்சி இல்லாமலேயே உருவாக்கினார்கள். அதே சமயம் தென்மேற்கு வட அமெரிக்காவின் புவேப்லோ (Pueblo) பண்பாட்டினர் உயர்நிலை விவசாயம், நீப்பாசனம், மற்றும் தாவோஸ் போன்ற நிலையான சமுதாயக் குடியிருப்புகளை உருவாக்கியிருந்தும், நாகரிகத்தோடு சம்பந்தப்பட்ட சிக்கலான நிறுவனங்கள் எதையும் உருவாக்கவில்லை. இன்று பல இனக்குழுச் சமூகங்கள் அரசுகளுக்குக் கீழ் அவ்வரசுகளின் சட்டங்களின் அடிப்படையில் வாழுகிறார்கள். நாகரிகத்தின் அரசியல் அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறையின் மேல் திணிக்கப்பட்டுள்ளது, எனவே அவர்களும் நாகரிக மற்றும் இனக்குழுச் சமூக அமைப்புகளுக்கு மத்தியிலான இடைநிலையினராகத்தான் இருக்கிறார்கள்.

எனவே மேலும் அச்சொட்டான, வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணம் தேவையாகலாம். நாகரிகத்தின் விளைவுகளை நாகரிகம் என்ற கருத்துருவுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. நாகரிகம் என்பது, சட்டம் மற்றும் சொத்துரிமைகளின் அடிப்படையிலமைந்த மக்களிடையேயான அமைதிவழி ஊடாடல் (interaction) ஆகும்.

முதலில் உருவான நாகரிகம் சுமேரியர்களுடையதாகும். இவர்கள் கி.மு 3500 அளவில் நகரச் சமூகமாக உருவானார்கள்.

மனிதவரலாற்றின் சில நாகரீகங்கள்

தொகு
 
ஓர் எகிப்திய விவசாயி பழக்கப்பட்ட விலங்கினால் இழுக்கப்படும் கலப்பையைப் பயன்படுத்தி உழுகிறான். இவையிரண்டும் முதல் நாகரிகத்துக்கு வழிசமைத்த இரு விவசாயம் சம்பந்தப்பட்ட வளர்ச்சிகளாகும்.

ஆரம்ப கால நாகரிகங்கள்

தொகு

கற்கால நாகரிகம்

தொகு

தென்மேற்கு ஆசியாவின் லேவண்ட் பகுதியில் கி.மு.12000 உருவானதாக கருதப்படுகிறது.கி.மு. 8,000 முதல் 5,000 வரையிலான காலகட்டதில் நடந்த விவசாய புரட்சி காரணமாக தென்மேற்கு,தெற்கு ஆசியா, வடக்கு,மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா பகுதிகளில் நாகரிகங்கள் வளர்சியடைந்தது.

வெண்கல கால நாகரிகம்

தொகு

வெண்கல காலத்தில் பின்வரும் பகுதிகளில் நாகரிகங்கள் உருவாகின.அவை

இரும்பு கால நாகரிகம்

தொகு

இக்காலத்தில் பொதுவாக இரும்பு அதிகமாக பயன்படுபட்டன இக்காலத்தில் வேறுபட்ட விவசாய நடைமுறைகள், மத நம்பிக்கைகள் மற்றும் கலை பாணிகளை உட்பட பல சமுதாய மாற்றங்கள் உருவானது. ஜெர்மன் வரலாற்று தத்துவவாதியான கார்ல் ஜாஸ்பெர்ஸ் பண்டைய நாகரிகங்கள் கி.மு. 800 முதல் கி.மு.200 வரை சீனா, இந்தியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்த மத குருமார்கள், தீர்க்கதரிசிகள், மத சீர்திருத்தவாதிகள் மூலம் திசை மாறியது என குறிப்பிடார்.இவை பரவிய பகுதிகளாவன

  • மத்தியதரை கடல் நாகரிகங்கள்
  • மத்திய கிழக்கு நாகரிகங்கள்
    • பாரசீக நாகரிகம்
    • இரண்டாவது யூதம் கோயில் நாகரிகம்
    • பண்டைய இந்திய நாகரிகம்
    • பண்டைய சீனா (குயின் வம்சம், ஹான் வம்சம்)
    • பண்டைய நாடோடிகள் (க்சியாங்னு, ஹன் இனத்தவர், கோக் துர்க் பேரரசு

இடைக்கால நாகரிகங்கள்

தொகு
  • கிறித்தவ மக்கள் மற்றும் கிறித்தவ நாடுகள்
    • மேற்கத்திய கிறித்துவம்
    • கிழக்கு கிறித்துவம்
  • இஸ்லாமிய நாகரிகம்
    • இஸ்லாமிய பொற்காலம்
    • கலிபா
    • சோமாலியா
    • அடல் சுல்தான்களின் பேரரசு
    • அஜுரான் பேரரசு
    • வாரசங்லி பேரரசு
    • மங்கோலிய - துருக்கிய (தைமுரிட் பேரரசு)
    • முகலாய இந்தியா
    • ஒட்டோமான் பேரரசு
  • ஆசியா
    • சோழ பேரரசு, தமிழ்நாடு , இந்தியா
    • பாண்டிய பேரரசு, தமிழ்நாடு , இந்தியா
    • சேர பேரரசு, தமிழ்நாடு , இந்தியா
    • பல்லவ அரசு, தமிழ்நாடு , இந்தியா
    • சுய்,சீனா
    • டாங்,சீனா
    • சாங்,சீனா
    • கொரியா
    • மங்கோலிய பேரரசு(யுவான்)
    • மிங்,சீனா
    • நிலப்பிரபுத்துவ ஜப்பான்
    • கன்ஃபூசிய வியட்நாம்
  • தென்கிழக்காசிய நாகரிகம்
    • சம்பா,அங்கூர் கம்போடியா
    • அயுத்தயா இராச்சியம் , இடைகால தாய்லாந்து
    • பேகன்,பர்மா
  • மெசோஅமெரிக்க நாகரிகம்:
    • டோல்டெக்
    • ஆஸ்டெக் நாகரிகம்
    • மாயா நாகரிகம்
  • அண்டியன் நாகரிகம்
    • சிமொர்
    • கஸ்கோ/இன்கா பேரரசின் இராச்சியம்
    • அய்மாரா
  • ஆப்பிரிக்க நாகரிகங்கள்
    • மாலி பேரரசின்
    • சோங்காய் பேரரசு
    • ஆஷாந்தி பேரரசு
    • அபிசினியா பேரரசு
    • பெனின் பேரரசு

தற்கால நாகரிகங்கள்

தொகு
  • மேற்கத்திய உலகம்
    • மேற்கு ஐரோப்பா
    • வட அமெரிக்கா
    • தென் அமெரிக்கா
    • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து
  • மத்திய உலகம்
    • கிழக்கு ஐரோப்பா
    • ஸ்லாவிக்
    • கிரீஸ்
  • மத்திய கிழக்கு
    • அரபு உலகம்
    • ஈரானிய உலகம்
    • இஸ்ரேல்
    • துருக்கிய உலகம்
  • கிழக்கத்திய உலகம்
    • கிழக்கு ஆசியா
    • ஜப்பானிய நாகரிகம்
    • கொரியா
    • தெற்கு ஆசியா
    • தென்கிழக்கு ஆசியா
    • மலாய் உலக
  • சகாரா துணை நாகரிகம்,ஆப்பிரிக்கா

மேற்கோள்கள்

தொகு
  1. "நாகரிகம் என்றால் என்ன?". Archived from the original on 2017-06-15. பார்க்கப்பட்ட நாள் மே 31, 2017.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகரிகம்&oldid=3875132" இலிருந்து மீள்விக்கப்பட்டது