நாகர் நகரம்
நாகர் (Naggar) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள குல்லு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பழங்கால நகரமாகும். பியாசு ஆற்றின் இடது கரையில் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது. ஒரு காலத்தில் குல்லு இராச்சியத்தின் தலைநகராக நாகர் நகரம் இருந்தது.
நாகர் Naggar | |
---|---|
ஆள்கூறுகள்: 32°07′N 77°10′E / 32.12°N 77.17°E | |
Country | இந்தியா |
State | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | குல்லு |
ஏற்றம் | 1,800 m (5,900 ft) |
Languages | |
• Official | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வாகனப் பதிவு | HP |
Sex ratio | 9:8 ♂/♀ |
புவியியல்
தொகுமாவட்டத்தின் தலைநகரமான குல்லு நகரத்திற்கு வடக்கில் 22 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவிலும், மாநிலத்தின் தலைநகரமான சிம்லாவுக்கு வடக்கில் 230 கிலோமீட்டர் (140 மைல்) தொலைவிலும் நாகர் நகரம் அமைந்துள்ளது.
தெற்கில் குல்லு தாலுக்காவும், கிழக்கில் இசுபிட்டி தாலுக்காவும், வடக்கில் உலாகுல் தாலுக்காவும் நாகர் நகரின் எல்லைகளாக உள்ளன. மணாலி, கீலாங்கு, மண்டி, சுந்தர்நகர் அமிர்பூர் போன்ற நகரங்கள் நாகர் நகருக்கு அருகில் அமைந்துள்ள பிற நகரங்களாகும்.
தட்பவெப்பம்
தொகுநாகர் நகரில் மிதமான காலநிலை நிலவுகிறது. குளிர்காலத்தில், கோடையை விட மழைப்பொழிவு மிகவும் குறைவாகும். சராசரி வெப்பநிலை 16.6. செல்சியசாகவும் ஓர் ஆண்டின் சராசரி மழையளவு 1,730 மி.மீ ஆகவும் இங்கு பதிவாகிறது. [1]
வரலாறு
தொகுசுமார் 1400 ஆண்டுகளாக நாகர் நகரம் முந்தைய குல்லு அரசர்களின் தலைநகராக இருந்தது. அரசர் விசூத் பால் இந்நகரத்தை தலைநகரமாக்கியது முதல் அரசர் ஜகத் சிங் தலைநகரத்தை குல்லுவுக்கு (சுல்தான்பூர்) மாற்றும் வரை மாநில தலைமையகமாக நாகர் இருந்தது.
பல நூற்றாண்டுகளாக மன்னர்களின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக விளங்கிய நாகர் கோட்டை[2] 500 ஆண்டுகளுக்கு முன்பு அரசர் சித் சிங்கால் கட்டப்பட்டது. இராணா போன்சலின் கைவிடப்பட்ட அரண்மனையிலிருந்த (கர்தாக்) கற்களைப் பயன்படுத்தி இவர் கோட்டையைக் கட்டினார் என்று மரபுவழிக் கதை ஒன்று கூறுகிறது. [3] பியாசு ஆற்றின் இடது மற்றும் வலது கரைகளை இணைக்கும் விதமாக ஒரு மனித சங்கிலியை உருவாக்கி கற்களை கைமுறையாக மாற்றி கொண்டு வருமாறு தொழிலாளர்களுக்கு இவர் உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது. 1905 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் பள்ளத்தாக்கிலும் அருகிலுள்ள நகரமான ஜாவாவிலும் பெரும்பாலான வீடுகள் முற்றிலுமாக பாழடைந்த நிலையில் இந்த கோட்டை மட்டும் தப்பிப்பிழைத்துள்ளது. கோட்டையின் பூகம்பத்தைத் தாங்கும் வகையிலான நுட்பங்களைப் பயன்படுத்தியிருப்பது பேரழிவு நிகழ்ந்தபோதிலும் கோட்டையை தக்கவைக்க உதவியதாக கருதப்படுகிறது.
1978 ஆம் ஆண்டில் இக்கோட்டையை இமாச்சல பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் கையகப்படுத்தி அப்போது முதல் ஒரு பாரம்பரிய தங்கும் விடுதியாக பராமரித்து இயக்கி வருகிறது. [4][5] உருசிய நாட்டின் ஓவியரும் ஆய்வாளருமான நிக்கோலசு உரோரிச் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாகர் நகரில் குடியேறினார். இவருடைய இரண்டு மாடி வீடான உரோரிச்சு தோட்டம் இப்போது அவரது பிரபலமான ஓவியங்களின் தொகுப்பைக் கொண்ட நகரத்தின் ஓர் அருங்காட்சியகமாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. [6]
போக்குவரத்து
தொகுபுது தில்லியிலிருந்து 589 கிலோமீட்டர் தொலைவிலும், சிம்லா நகரிலிருந்து 246 கிலோமீட்டர் தொலைவிலும், பிரதான குல்லு நகரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், மணாலியிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் நாகர் நகரம் உள்ளது.
விமானம்
தொகுகுல்லுவிலுள்ள புந்தார் விமான நிலையம் நாகர் நகருக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும் இது நாகர் நகரிலிருந்து 40..2 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள புந்தார் நகரில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் குல்லுவுக்கு தெற்கே 10 கிமீ (6 மைல்) தொலைவிலும், மணாலிக்கு தெற்கே 50 கிமீ (31 மைல்) தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை எண் 21 இல் அமைந்துள்ளது. குலு-மணாலி விமான நிலையம் என்ற பெயராலும் இவ்விமான நிலையம் அழைக்கப்படுகிறது. புந்தார் விமான நிலையத்தின் ஓடுபாதை ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஓடுபாதையாகும். ஏர் இந்தியா நிறுவனம் புதுதில்லியில் இருந்து விமானங்களை தொடர்ச்சியாக இந்நிலையத்திற்கு இயக்கிவருகிறது.
தொடருந்து
தொகுஅருகிலுள்ள குறுகிய பாதை தொடருந்து நிலையம் ஜோகிந்தர் நகர் நிலையமாகும். பதான்கோட் சந்திப்பு வழியாக இந்த இரயில் நிலையத்திற்கு செல்லலாம். மேலும் அங்கிருந்து ஒரு வாடகை வாகனத்தில் நாகர் நகரம் செல்லலாம்.
சாலை
தொகுஇமாச்சலப் பிரதேச போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகள் வழியாக நாகரை எளிதில் அணுக முடியும். இந்த பேருந்துகள் மணாலியில் இருந்து காக்னல் வழியாக நாகருக்குச் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை எண் 3 வழியாக நாகர் செல்லும் சாலை மனாலியிலிருந்து 22 கிமீ தொலைவும் (13.6 மைல்), காக்னலிலிருந்து 21 கிமீ (13 மைல்) தொலைவும் கொண்டுள்ளது.
முக்கிய சுற்றுலா இடங்கள்
தொகு- நிக்கோலசு உரோரிச்சு கலைக் கூடம்
- கௌரிசங்கர் கோயில்
- திரிபுரசுந்தரி கோயில்[7]
- வாசுகி நாக் கோயில்
- நாகர் கோட்டை
- கிருட்டிணர் கோயில் [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Climate Naggar: Temperature, Climate graph, Climate table for Naggar - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.
- ↑ "The Sunday Tribune – Spectrum". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2017-09-22.
- ↑ "The Castle, Naggar". hptdc.in. Archived from the original on 2018-06-19. பார்க்கப்பட்ட நாள் 2018-06-19.
- ↑ "Tourism in Naggar". tourism-of-india.com. Archived from the original on 2018-06-19. பார்க்கப்பட்ட நாள் 2018-06-19.
- ↑ Kamalakaran, Ajay (2012-05-02). "Nicholas Roerich's legacy lives on in Himalayan Hamlet" (in en-US). https://www.rbth.com/articles/2012/05/02/nicholas_roerichs_legacy_lives_on_in_himalayan_hamlet_15652.
- ↑ "Himachal Tourism". Himachal Tourism Department. Archived from the original on 24 March 2010. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.