நாக்சி காந்தா

பூப்பின்னல் கைவினைக் கலை வடிவம்

நாக்சி காந்தா (Nakshi kantha) என்ற பூப்பின்னல் கைவினைக் கலை, வங்காளத்தில் பரவியிருந்த பல நூற்றாண்டுகள் பழமையான கலை பாரம்பரியமாகும். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுரா , ஒடிசா மற்றும் அசாம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.[1][2][3] பழைய புடவைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, கையால் தைத்து மெல்லிய மெத்தை துண்டை உருவாக்குகிறார்கள். இது பொதுவாக படுக்கை மெத்தைகளுக்கு மேலே அல்லது மெத்தைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] [5] நாக்சி காந்தா வங்காளதேசம் முழுவதும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மைமன்சிங், ஜமால்பூர், போக்ரா, ராஜசாகி, பரித்பூர், ஜெஸ்ஸோர் மற்றும் சிட்டகொங் போன்ற பகுதிகள் இந்த கைவினைப்பொருளுக்கு மிகவும் பிரபலமானவை.

Nakshi Kantha
Traditional nakshi kantha
வேறு பெயர்கள்নকশি কাঁথা
குறிப்புவங்காளதேசம், மேற்கு வங்காளம், திரிபுரா பராக் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் காணப்படும் பாரம்பரியப் பூப்பின்னல் கலை வடிவம்
நாடுவங்காளதேசம் மற்றும் இந்தியா
பொருள்துணி, பருத்தி
மலர் உருவத்துடன் சமகால நாக்சி காந்தாவின் காட்சி
தாமரையின் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஓர் காந்தா

பூப்பின்னலால் செய்யப்பட்ட வண்ணமயமான வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளின் விளைவாக "நாக்சி காந்தா" என்ற பெயர் உருவானது, இது பெங்காலி வார்த்தையான "நாக்சா" என்பதிலிருந்து பெறப்பட்டது. இது கலை வடிவங்களைக் குறிக்கிறது.[6][7] ஆரம்பகால கந்தாக்கள் சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை பின்னணியைக் கொண்டிருந்தன. பின்னர் மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் பிற வண்ணங்களும் சேர்க்கப்பட்டன. காந்தா தையல் என்று அழைக்கப்படும் ஓடும் தையல் இதில் பயன்படுத்தப்படுகிறது.[8] பாரம்பரியமாக, குடும்பத்தின் பயன்பாட்டிற்காக காந்தா தயாரிக்கப்பட்டது. இன்று, நாக்சி காந்தா புத்துயிர் பெற்ற பிறகு, அவை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nakshi Kantha-Benhal Craft". Bengal Crafts. Archived from the original on 4 February 2009. பார்க்கப்பட்ட நாள் 10 November 2008.
  2. Zaman, Niaz (2012). "Nakshi Kantha". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம். Archived from the original on 24 November 2015. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
  3. "Quilt (Kantha) Art of Bengal". Jaismuddin.org. Archived from the original on 12 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2 January 2009.
  4. Census of India, 1961: Orissa. Manager of Publications.
  5. Ghuznavi 1981, ப. 23.
  6. Kantha, Sarees. "Kantha Silk Sarees". sareesofbengal.com. Archived from the original on 3 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2 February 2018.
  7. "About Nakshi Kantha". Aarong. Archived from the original on 16 October 2015. பார்க்கப்பட்ட நாள் 9 December 2008.
  8. Ghuznavi 1981, ப. 23–24.
  9. "History, Uses and Current Condition of Nakshi Kantha". Textile Learner. 9 January 2022. Archived from the original on 14 February 2022. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்சி_காந்தா&oldid=4136099" இலிருந்து மீள்விக்கப்பட்டது