நாராயணன் வாகுல்

இந்தியாவின் வங்கியாளார்

நாராயணன் வாகுல் (Narayanan Vaghul) (1936 - 18 மே 2024) இந்தியாவின் முக்கிய வங்கியர்களுள் ஒருவர்.[1] 2010 -ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது பெற்றவர்களுள் ஒருவர். வணிகம், தொழில் பிரிவில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. நிதித்துறையில் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வாகுல், ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக நீண்டநாட்கள் இருந்தவர்; தற்போது பல முன்னணி நிறுவனங்களுக்கு இயக்குநராக உள்ளார் (ஆர்சலார் மிட்டல், விப்ரோ).

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

வாகுல் 1936 இல் அப்போதைய பிரித்தானிய இந்தியாவில் தென்னிந்திய கிராமங்கள் ஒன்றில், ஒரு சராசரி குடும்பத்தில் எட்டு பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்தார்.[2] சென்னை, இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பயின்ற பின்னர் இலயோலாக் கல்லூரியில் 1956-இல் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார்.[2] [3] பின்னர் ஒரு நேர்காணலில், தான் இந்தியக் குடியியல் பணிகளில் சேர விரும்பியபோது, வயது குறைந்ததன் காரணமாக விண்ணப்பத்தை தவறவிட்டதாகக் கூறினார். [1]

தொழில்

தொகு

வாகுல், இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[4] வங்கியில் தான் பணிபுரிந்த காலத்தில், அப்போதைய தலைவர் ஆர். கே. தல்வார் அவர்களால் வழிகாட்டப்பட்டார். பாரத ஸ்டேட் வங்கியில் 19 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனத்திற்குச் சென்றார். 1978 இல் மற்றொரு பொதுத்துறை வங்கியான இந்திய மத்திய வங்கியில் சேருவதற்கு முன்பு அதன் இயக்குநரானார்.[4] 1981 இல், வாகுல் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[1]

1985 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியால் இந்திய தொழில்துறை கடன் மற்றும் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[5] ஐசிஐசிஐ வங்கி என்ற பெயரைப் பெற்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக இந்த நிறுவனம் மாற்றப்படும் போது இவர் தலைமை தாங்கினார். வாகுல் 1996-இல் ஓய்வு பெற்றார். ஆனால் 2009 வரை அதன் நிர்வாகமற்ற தலைவராக இருந்தார்.[4][1] வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஐசிஐசிஐயில் இருந்த காலத்தில் கு. வா. காமத், கல்பனா மோர்பாரியா, சிகா சர்மா மற்றும் நசிகேத் மோர் உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து பணியைக் கற்றுக் கொண்டதில் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். அவர்களில் பலர் பிற பொது மற்றும் தனியார் துறை நிதி நிறுவனங்களை வழிநடத்தி வந்தனர்.

விப்ரோ, மகிந்திரா அண்டு மகிந்திரா, அப்போலோ மருத்துவமனை மற்றும் மிட்டல் ஸ்டீல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் குழுவில் வாகுல் இயக்குநராக பணியாற்றினார்.[6] இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஒன்றாக அமைக்கப்பட்டபோது, சென்னையில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியின் தலைவராகவும், நிதிச் சேவை நிறுவனமான கிரிசிலின் முதல் தலைவராகவும் இருந்தார்.[4]

2010 ஆம் ஆண்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூசண் விருது வகுலுக்கு வழங்கப்பட்டது.[1][7] பிசினஸ் இந்தியா 1991 ஆம் ஆண்டின் பிசினஸ் மேன் மற்றும் தி எகனாமிக் டைம்ஸின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளை வென்றார்.[6] இந்தியாவின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கிவ் இந்தியாவின் தலைவராகவும் இருந்தார்.[6][1]

நாராயணன் தனது தீவிர ஈடுபாடு மற்றும் தொண்டுப் பணிகளுக்காக 2012 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் கேட்டலிஸ்ட்-ஃபோர்ப்ஸ் பரோபகார விருதைப் பெற்றார்.[8] 

சொந்த வாழ்க்கை

தொகு

வாகுல் பத்மா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்-மோகன் என்ற ஒரு மகனும் சுதா என்ற ஒரு மகளும் இருந்தனர்.[4] 

வாகுல் 18 மே 2024 அன்று தனது 88வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Ramesh, M. (2024-05-18). "N Vaghul, doyen of Indian banking, passes away". BusinessLine (in ஆங்கிலம்). Archived from the original on 18 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  2. 2.0 2.1 "Narayanan Vaghul - Creating Emerging Markets - Harvard Business School". www.hbs.edu. Archived from the original on 5 December 2022. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  3. Ramesh, M. (2024-05-18). "N Vaghul, doyen of Indian banking, passes away". BusinessLine (in ஆங்கிலம்). Archived from the original on 18 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Yadav, Krishna (2024-05-18). "N Vaghul, accidental banker and philanthropist, dies at 88". mint (in ஆங்கிலம்). Archived from the original on 18 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  5. "Narayanan Vaghul — Forbes". People.forbes.com. 2012-04-18. Archived from the original on 6 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  6. 6.0 6.1 6.2 "Narayanan Vaghul". Bloomberg. Archived from the original on 19 December 2014. பார்க்கப்பட்ட நாள் 19 Dec 2014.
  7. "Press Information Bureau English Releases". Pib.nic.in. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  8. "Narayanan Vaghul: The Corporate Philanthropy Catalyst". Forbes. Archived from the original on 19 December 2014. பார்க்கப்பட்ட நாள் 19 Dec 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணன்_வாகுல்&oldid=3969852" இலிருந்து மீள்விக்கப்பட்டது