நா. ரா. பிள்ளை

இந்திய அரசு ஊழியர்

சர் நாராயணன் ராகவன் பிள்ளை (Sir Narayanan Raghavan Pillai) [1](1898 சூலை 24 - 1992 மார்ச் 31) பிரபலமாக ராக் என அழைக்கப்படும் இவர், ஒரு இந்திய அரசு ஊழியர் ஆவார். இவர் வெளியுறவுத் துறையின் இரண்டாவது பொதுச் செயலாளராகவும், சுதந்திர இந்தியாவில் முதல் அமைச்சரவை செயலாளராகவும் இருந்தார். இவர், 1950 பிப்ரவரி 6 முதல் 1953 மே 13 வரை அப்பணியிலிருந்தார். மேலும், பிரான்சுக்கான இந்தியாவின் தூதராகவும் பணியாற்றினார்.

நா. ரா. பிள்ளை
முதல் இந்திய அமைச்சரவைச் செயலாளர்
பதவியில்
1950–1953
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்ஒய். என். சுக்தாங்கர்
பிரான்சுக்கான 5வது இந்தியத் தூதர்
பதவியில்
சூன் 1959 - 1961
முன்னையவர்கே. எம் . பணிக்கர்
பின்னவர்அலி யவர் ஜங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எலங்கத் நாராயணன் ராகவன் பிள்ளை

(1898-07-24)24 சூலை 1898
திருவனந்தபுரம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய கேரளம், இந்தியா)
இறப்பு31 மார்ச்சு 1992(1992-03-31) (அகவை 93)
கென்சிங்டன், இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம் இந்தியா

தொழில்

தொகு

பிள்ளை 1898 சூலை 24 அன்று திருவிதாங்கூர் மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் தென் திருவிதாங்கூரில் உள்ள எலங்கத்தின் புகழ்பெற்ற நாயர் குடும்பத்தில் பிறந்தார். இவர் திவான் நாணூ பிள்ளையின் உறவினராவார். [2] 1918 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (ஆங்கிலம்) பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிச்சின் டிரினிட்டி ஹாலில் படிக்க அரசு உதவித்தொகை பெற்றார். அங்கு, இவர் 1921இல் இயற்கை அறிவியலையும், 1922 ஆம் ஆண்டில் சட்டமும் பயின்றார் .

பணிகள்

தொகு

1922 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மத்திய மாகாணங்களில் உதவி ஆணையராகவும், 1927 மார்ச்-நவம்பர் 1927 முதல் துணை துணை ஆணையராகவும் பணியாற்றினார். [3] இந்தியக் குடிமைப் பணியுடனான தனது தொழில் வாழ்க்கையில், அப்போதைய ஐக்கிய மாகாணங்களில் பல்வேறு செயலக பதவிகளுக்கு இவர் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து சென்னையில் சுங்க உதவி சேகரிப்பாளராகவும் (1927 திசம்பர் - 1929 மே) கொல்கத்தாவில் வணிக நுண்ணறிவு துணை இயக்குநராகவும் பணியாற்றினார் (மே 1929 - மார்ச் 1932). இவர் 1932 மார்ச்சில் துணை செயலாளராக பதவி உயர்வு பெற்று, வணிகத் துறையில் சேர்ந்தார். அங்கு இவர் தற்காலிக கூட்டுச் செயலாளராகவும் (சூன் 1934) பிப்ரவரி 1936 இல் இணைச் செயலாளராகவும் (அதிகாரப்பூர்வமாக) முன்னேறினார், ஏப்ரல் 1936 இல் கராச்சியில் ஆட்சியரா நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 1937 முதல், வணிகத் துறையில் அதிகாரியாக இருந்த இவர், சூலை மாதம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 1938இல் வணிகத் துறையில் இணைச் செயலாளராகவும், பிப்ரவரி 1941இல் கூடுதல் செயலாளராகவும், இறுதியாக அக்டோபர் 1942இல் முழு செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

குடும்பம்

தொகு

இவரது மகனான கே. எஸ். பிள்ளை, இந்திய ரிசர்வ் வங்கியில் பணி புரிந்தார். முன்னாள் பிபிசி தொகுப்பாளரான நிஷா பிள்ளை இவரது பேரக்குழந்தைகளில் ஒருவர். [4]

குறிப்புகள்

தொகு
  1. Dewan Nanoo Pillai by K. R. Elenkath, Trivandrum, 1982 see chapter titles family members
  2. See K. R. Elenkath, supra
  3. The India Office and Burma Office List: 1945. Harrison & Sons, Ltd. 1945. p. 301.
  4. Pillai, Nisha. "Tandoored Legs". Outlook Magazine. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._ரா._பிள்ளை&oldid=3370194" இலிருந்து மீள்விக்கப்பட்டது