நிக்கல்(II) சிடீயரேட்டு
நிக்கல்(II) சிடீயரேட்டு (Nickel(II) stearate) C36H70NiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பாதரசம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3] உள்ளிழுத்தல், உட்செலுத்துதல் மற்றும் தோல் உறிஞ்சுதல் ஆகியன நேரிட்டால் இச்சேர்மம் மிகவும் நச்சுத்தன்மையுடையது.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நிக்கல் டைசிடீயரேட்டு, நிக்கல் டையாக்டாடெக்கானோயேட்டு, நிக்கல்(2+) ஆக்டாடெக்கானோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
2223-95-2 | |
ChemSpider | 141143 |
EC number | 218-744-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 160624 |
| |
பண்புகள் | |
C 36H 70NiO 4 | |
வாய்ப்பாட்டு எடை | 625.63 |
தோற்றம் | பச்சை நிற தூள் |
அடர்த்தி | 1.13 கி/செ.மீ3 |
உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) |
கொதிநிலை | 359.4 °C (678.9 °F; 632.5 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H334, H350, H360, H372, H317, H341, H410 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 162.4 °C (324.3 °F; 435.5 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநிக்கல்(II) குளோரைடுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது பரிமாற்ற வினையில் நிக்கல்(II) சிடீயரேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுபச்சை நிற தூளாக நிக்கல்(II) சிடீயரேட்டு உருவாகிறது.[5] நீர், மெத்தனால், எத்தனால் அல்லது ஈதரில் நிக்கல்(II) சிடீயரேட்டு கரையாது, கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் பிரிடீனில் கரையும். அசிட்டோனில் சிறிதளவு கரையும்.
பயன்கள்
தொகுநிக்கல்(II) சிடீயரேட்டு மசகு எண்ணெயாக பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nickel(II) stearate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ "Nickel(II) Stearate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ "Nickel(II) stearate | CAS 2223-95-2" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ User guide and indices to the initial inventory, substance name index (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 998. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ "Nickel(II) stearate - Hazardous Agents | Haz-Map". haz-map.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.