நிக்கோபார் கிளி

நிக்கோபார் கிளி (Nicobar parakeet)(சிட்டாகுலா கேனிசெப்சசு-Psittacula caniceps), பிளைத்தின் கிளி என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியப் பெருங்கடலின் நிக்கோபார் தீவுகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. சிட்டாகுலா பேரினத்தைச் சேர்ந்த ஒரு பெரிய அளவிலான கிளி இதுவாகும். இது 56 முதல் 60 நீளமுடைய இந்த கிளி சுமார் 224 கிராம் எடையுடையது.[2]

நிக்கோபார் கிளி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
சிட்டாசிபார்மிசு
குடும்பம்:
சிட்டாசிடே
பேரினம்:
சிட்டாகுலா
இனம்:
P. caniceps
இருசொற் பெயரீடு
Psittacula caniceps
(பிளைத், 1846)

விளக்கம் தொகு

நிக்கோபார் கிளி, மஞ்சள் கலந்த சாம்பல் தலை மற்றும் கருப்பு முக அடையாளங்களுடன் பச்சை நிறத்தில் உள்ளது. இது நெற்றியிலிருந்து கண்கள் வரை ஒரு கருப்பு பட்டையுடன் கீழ் தாடையிலிருந்து கழுத்தின் பக்கங்களுக்கு நீட்டிக்கப்படும் ஒரு பரந்த கருப்பு பட்டையினையும் கொண்டுள்ளது. ஆண்களில் மேல் தாடை சிவப்பு மற்றும் பெண்களில் கருப்பு நிறத்துடன், அதே சமயம் கீழ் தாடை இரு பாலினத்திலும் கருப்பு நிறத்துடன் காணப்படும்.[2][3]

நிக்கோபார் கிளியானது பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறுத்தலுக்கு அருகில் உள்ள சிற்றினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் சூழலியல் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 BirdLife International (2019). "Psittacula caniceps". IUCN Red List of Threatened Species 2019: e.T22685508A152076509. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22685508A152076509.en. https://www.iucnredlist.org/species/22685508/152076509. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 del Hoyo, Josep; Nigel J., Collar; David A., Christie; Andrew, Elliot; and Lincoln D.C., Fishpool (2014). HBW and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. Vol. 1: Non-passerines. Barcelona: Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8496553941.
  3. Forshaw, Joseph M.; Knight, Frank (2010). Parrots of the World. CSIRO Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0643100572.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோபார்_கிளி&oldid=3783005" இலிருந்து மீள்விக்கப்பட்டது