நித்தி கனகரத்தினம்

நித்தி கனகரத்தினம் இலங்கையைச் சேர்ந்த உழவியல் அறிஞரும், பொப்பிசைப் பாடகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமைவாய்ந்தவர். பொப்பிசைப் பிதா என அழைக்கப்படுபவர். 70களில் இவர் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

நித்தி கனகரத்தினம் யாழ்ப்பாணம் உரும்பராயில் கனகரத்தினம், ஆச்சிமுத்து ஆகியோருக்குப் பிறந்தார்.[1] ஆரம்பக் கல்வியை யாழ் வேம்படி ஆரம்பப் பாடசாலையிலும் பின்னர் யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் இந்தியாவில் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.[1] நித்தி 1986 வரை கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தின் தலைவராக இருந்தவர். பின்னர் புலம் பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.[1]

பொப்பிசைப் பாடகர்

தொகு

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்ட நித்தி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.[1]

சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே.. என்ற பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கள்ளுக்கடைப் பக்கம் போகாதே, சோளஞ் சோறு பொங்கட்டுமா முதலான பல பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார்.[1][2]

சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார். பல இந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் இவரின் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 சிறீகாந்தன், மணி (19 செப்டம்பர் 2010). "ஞாபக வீதியில்". கொழும்பு: தினகரன் வாரமஞ்சரி. Archived from the original on 2011-04-19. பார்க்கப்பட்ட நாள் 19-10-2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  2. 2.0 2.1 2.2 To the Baila beat, த இந்து, ஏப்ரல் 19, 2010

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தி_கனகரத்தினம்&oldid=4043591" இலிருந்து மீள்விக்கப்பட்டது