கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

(கிழக்குப் பல்கலைக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (Eastern University, Sri Lanka) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும்.[3] 1981இல் பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இது, 1986 இல் முழு பல்கலைக்கழகமாக மாறியது. இதன் ஒரு வளாகம் திருகோணமலையில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி இதன் ஒரு பாகமாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி 2005இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது, தற்போது இதன் வகையாக மட்டக்களப்பு நகரில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் இயங்கி வருகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
Eastern University, Sri Lanka
முந்தைய பெயர்கள்
மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி (1981–1986)
குறிக்கோளுரைPer Ardua Ad Scientiam (இலத்தீன்)
வகைபொது
உருவாக்கம்ஆகஸ்ட் 1, 1981 (பல்கலைக்கழகக் கல்லூரி)
அக்டோபர் 1, 1986 (பல்கலைக்கழகம்)[1]
வேந்தர்மரு. வேல்முருகு விவேகானந்தராஜா
துணை வேந்தர்பேராசிரியர் எப். சி. ராகல்
கல்வி பணியாளர்
கலை கலாச்சார, விஞ்ஞான, வர்த்தக முகாமைத்துவ, விவசாய மற்றும் சௌக்கிய பராமரிப்பு பீடம்
மாணவர்கள்1110 மாணவர்கள் ஒரு வருடத்திற்கு சேர்க்கின்றனர்.(2013) [2]
அமைவிடம்,
7°47′51.40″N 81°34′55.20″E / 7.7976111°N 81.5820000°E / 7.7976111; 81.5820000
வளாகம்இலங்கைப் பல்கலைக்கழகம்
சேர்ப்புபல்கலைக்கழக மானிய ஆணைக்குழு,
பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,
பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்http://www.esn.ac.lk

இப்பல்கலைக் கழகத்தில் ஆங்கில மற்றும் தமிழ் மொழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

வரலாறு

1960களில் ஒரு தொகை நிலப்பரப்பை திருகோணமலை நிலாவெளியில் வாங்கி கிழக்கிலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் முயற்சித்தபோதும் போதுமான நிதியுதவி கிடைக்காமையால் கைவிடப்பட்டது. அமைச்சர் கே. டபிள்யு. தேவநாயகம் உயர்கல்வி அமைச்சிலிருந்த பேராசிரியர் கல்பகேயுடன் சேர்ந்து 1981 இல் பல்கலைக்கழக திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நிதி

இலங்கையில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களைப் போன்று இதுவும் உயர் கல்வி அமைச்சின் பகுதியான இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிதியினைப் பெற்று வருகின்றது.

அமைவிடம்

 
கிழக்குப் பல்கலைக்கழக மூதவைக் கட்டடம்

இப்பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் செங்கலடி நகரத்திற்கு அருகே வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பாசிக்குடாப் பகுதிக்குச் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இதன் ஒரு பாகமான சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி நொச்சிமுனையிலும், சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் மட்டக்களப்பு நகரிலும் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் திருகோணமலை நகரத்திலிருந்து 15.6 கி.மீ தொலைவிலுள்ள நிலாவெளி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. திருகோணமலை வளாகத்திற்கென ஏறக்குறைய 300 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை வளாகத்தின் முதல்வராகக் கலாநிதி செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்

2010 இல் இப்பல்கலைக்கழத்தில் 3,046 மாணவர்களும் 550 பணியாளர்களும் காணப்பட்டனர்.[4] மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இது இலங்கையில் பத்தாவது பல்கலைக்கழகம்.[4] 2009/10 இல் 1,149 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.[5] இப்பல்கலைக்கழகம் 448,212 மில்லியன் இலங்கை ரூபாய்களை நிகழும் வரவு செலவாகவும், மில்லியன் ரூபாய்களை முதல் வரவு செலவாகவும் 2010 இல் கொண்டிருந்தது.[6] இதனுடைய வரவு 2010 இல் 591,903 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இதில் 98% அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகும்.[6]

பீடங்கள்

 
 • கலைப் பீடம்
 • விஞ்ஞான பீடம்
 • விவசாய பீடம்
 • வர்த்தக முகாமைத்துவ பீடம்
 • தொடர்பாடல் வாணிப கற்கைகள் பீடம்

சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்

சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் (Faculty of Health-Care Sciences) இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகக் கல்விப் பீடங்களுள் ஒன்றாகும். 2005 ஆம் ஆண்டிற்கான இலங்கைச் சனனாயகச் சோசலிசக் குடியரசின் வர்த்தமான அறிவித்தலில் இப்பீடத்தின் ஆரம்பம் பற்றி உத்தியோக பூர்வமாக அரசினால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில், மட்டக்களப்பின் நகரில் இது அமைந்துள்ளது. இதற்கான நிரந்தரக் காணி மட்டக்களப்புப் பிள்ளையாரடியில் மட்டக்களப்பு வாவியோரமாக அமைந்துள்ள அழகு நிறைந்த ஓர் இடமாகும்.

நிறுவகம்

திருகோணமலை வளாகம்

 • வர்த்தக வாணிப கற்கைகள் பீடம்
 • பிரயோக விஞ்ஞான பீடம்
 • சித்த மருத்துவ பகுதி

உபவேந்தர்கள்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னைய துணைவேந்தர்கள்:[7]

 • பேராசிரியர் அருட்பிரகாசம் (1986–1989)
 • பேராசிரியர் சந்தானம் (1989–1995)
 • பேராசிரியர் இராஜேந்திரம் (1995–1998)
 • முனைவர் தங்கராஜா, acting (1998–2000)
 • பேராசிரியர் மூக்கையா (2000–2004)
 • பேராசிரியர் (முனைவர்) இரவீந்திரநாத் (2004–2006) – (professor by position, non-emeritus status)
 • முனைவர் பத்மனாதன் (2006–2010)
 • முனைவர் பிரேம்குமார் acting (2010 – மார்ச் 2012 )
 • முனைவர் கோபிந்தராஜா (மார்ச் 2012 – மார்ச் 2015 )
 • பேராசிரியர் (முனைவர்) தங்கமுத்து ஜெயசிங்கம் (மார்ச் 2015 – ஜனவரி 2019 ) – (professor by position, non-emeritus status)

இப்பல்கலைக்கழக உபவேந்தராக முனைவர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் முன்னர் பணியாற்றியபோது, 2006, திசம்பர் 15 இல் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இவரது நிலை சரியாகத் தெரியவில்லை[8][9]. இவரைத் தொடர்ந்து முனைவர் நா. பத்மநாதன் உபவேந்தராகப் பணியாற்றினார். இவரும் மார்ச் 2010 இல் மாணவர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து தனது பதவிக்காலம் முடிவடையும் முன்னரே பதவியில் இருந்து விலகினார்[10]. இதனை தொடர்ந்து விவசாய பீடாதிபதி பிரேம்குமார் 2010/11 காலப்பகுதிகளில் பதில் உபவேந்தராக பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்து வந்தார். இக்காலப்பகுதியில் பல்கலைக்கழக மானியங்கள் குழு இப்பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் தொடர்பாக நேரடியாக தலையிட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளர் ஒருவரின் கட்டளையின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழகம் இயங்கி வந்தது. தொடர்ந்தும் பதில் துணைவேந்தராக பிரேமகுமார் பெப்ரவரி 15, 2012 வரையில் இருந்து வந்தார், எனினும் இவருக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. முடிவுகள், தீர்மானங்கள் என்பன பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளரின் கையிலேயே இருந்தன. பெப்ரவரி 15, 2012 முதல் கனேடியப் பிரசையான முனைவர் கிட்ணன் கோபிந்தராசா இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமனம் பெற்றார். பின்னர் பேராசிரியர் (முனைவர்) தங்கமுத்து ஜெயசிங்கம் என்பவர் மார்ச் 2015 முதல் சனவரி 2019 வரை உபவேந்தராக இருந்தார். தற்போது பேராசிரியர் எப். சி. ராகல் என்பவர் சனவரி 2019லிருந்து உபவேந்தராக கடமையாற்றி வருகின்றார்

மேற்கோள்கள்

 1. "About EUSL". Archived from the original on 2013-05-22. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
 2. Student Admission – UCG – Pdf[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "Eastern University, Sri Lanka". இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு. Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
 4. 4.0 4.1 "Chapter – 1 – General Information" (PDF). Sri Lanka University Statistics 2010. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.
 5. "Chapter – 2 – University Admissions" (PDF). Sri Lanka University Statistics 2010. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.
 6. 6.0 6.1 "Chapter – 5 – Finance" (PDF). Sri Lanka University Statistics 2010. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.
 7. "Former Vice Chancellors". Eastern University, Sri Lanka. Archived from the original on 2019-02-19. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 8. கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் தினக்குரல் அணுகப்பட்டது 3 மார்ச், 2007 (தமிழில்)
 9. Gardner, Simon (2007-03-07). "Abductions, disappearances haunt Lankan civil war". Gulf Times. பார்க்கப்பட்ட நாள் 2007-07-23.
 10. கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார், விக்கிசெய்திகள், மார்ச் 11, 2010

வெளியிணைப்புக்கள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eastern University, Sri Lanka
என்பதில் ஊடகங்கள் உள்ளன.