நியோடிமியம் சேர்மங்கள்
நியோடிமியம் சேர்மங்கள் (Neodymium compounds) இலந்தனைடு உலோகமான நியோடிமியம் (Nd) மூலம் உருவாகும் சேர்மங்களைக் குறிக்கும். இந்த சேர்மங்களில், நியோடிமியம் பொதுவாக NdCl3, Nd2(SO4)3 மற்றும் Nd(CH3COO)3 போன்ற +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. NdCl2 மற்றும் NdI2 போன்ற சேர்மங்களில் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் நியோடிமியம் கொண்ட சேர்மங்கள் அறியப்படுகின்றன. சில நியோடிமியம் சேர்மங்கள் ஒளியூட்டப்படும் வகையின் அடிப்படையில் மாறுபடும் வண்ணங்களைக் கொண்டுள்ளன.[1]
-
ஒளிரும் குழாய் விளக்கில் உள்ள நியோடிமியம் சேர்மங்கள்- இடமிருந்து வலமாக, சல்பேட்டு, நைட்ரேட்டு மற்றும் குளோரைடு
-
அடக்கமான ஒளிரும் விளக்கில் நியோடிமியம் சேர்மங்கள்
-
சாதாரணமான பகல் வெளிச்சத்தில் நியோடிமியம் சேர்மங்கள்
ஆலைடுகள்
தொகுநியோடிமியம் NdX3 வடிவத்தில் நான்கு மூவாலைடுகளை உருவாக்குகிறது. அனைத்து நிலையான ஆலசன்களுடன் தீவிரமாக வினைபுரிகிறது:[2]
- 2Nd (திண்மம்) + 3F2 (வாயு) → 2NdF3 (திண்மம்) [ஊதா நிறம்]
- 2Nd (திண்மம்) + 3Cl2 (வாயு) → 2NdCl3 (திண்மம்) [வெளிர் ஊதா]
- 2Nd (திண்மம்) + 3Br2 (வாயு) → 2NdBr3 (திண்மம்s) [ஊதா நிறம்]
- 2Nd (திண்மம்) + 3I2 (வாயு) → 2NdI3 (திண்மம்) [பச்சை நிறம்]
NdCl2, NdBr2 ஆகிய ஈராலைடுகள் அடர் பச்சை நிற திடப்பொருள்களாகும்.[3] இவை PbCl2 போன்ற அதே படிக அமைப்பைக் கொண்டுள்ளன.[3] NdI2 ஓர் அடர் ஊதா நிறத் திண்மப்பொருளாகும். Nd-NdX3 சேர்மங்களை குறை உருகுநிலை அமைப்பில் பெறலாம்.[4]
NdF4 என்பது அணிச்சட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் மட்டுமே அறியப்படுகிறது.[5] தொடர்புடைய M3[NdF7] (M = K, Rb, Cs) ஈரப்பதம் அல்லது வெப்பத்தின் முன்னிலையில் மிகவும் நிலையற்றதாகும்.[6] இவை உயர் அழுத்த புளோரினேற்றம் மூலமாகவோ அல்லது மந்த வாயு புளோரைடுகளில் இருந்தோ தயாரிக்கப்படுகின்றன.[7]
ஆக்சிசனேற்றமடைந்த உப்புகள்
தொகுநியோடிமியம்(III) ஆக்சைடை கந்தக அமிலத்தில் கரைப்பதன் மூலம் நியோடிமியம்(III) சல்பேட்டை நேரடியாகப் பெறலாம்.[8] இது தண்ணீரில் கரையும். மேலும் இதன் நீரற்ற வடிவம் 20˚செல்சியசு வெப்பநிலையில் 8 கிராம் கரைதிறன் கொண்டுள்ளது.
நைட்ரிக் அமிலத்தில் நியோடிமியம்(III) ஆக்சைடை கரைப்பதன் மூலம் நியோடிமியம்(III) நைட்ரேட்டைப் பெறலாம்.[9] விளைந்த கரைசலை ஆவியாக்குவது நீரேற்ற நியோடிமியம்(III) நைட்ரேட்டை அளிக்கிறது. அறுநீரேற்று வடிவம் உருவாதல் இங்கு மிகவும் பொதுவானதாகும். அறுநீரேற்று வடிவத்தை மேலும் சூடாக்குவது நீரற்ற வடிவத்தைக் கொடுக்கும்.
நியோடிமியம்(III) குளோரைடுடன் மற்றும் சோடியம் ஆர்சனேட்டு கரைசல் சேர்த்து வினைபுரியச் செய்வதால் நியோடிமியம்(III) ஆர்சனேட்டு உருவாகிறது.[10] தண்ணீரில் இது கரையாது. இளஞ்சிவப்பு நிறத்தில் தூளாக இருக்கும். நல்ல வெப்ப நிலைப்புத்தன்மையைக் கொண்டிருக்கும். மேலும் இதன் கரைதிறன் பெருக்கம் pKsp,c 21.86±0.11 ஆகும்.[11]
நியோடிமியம்(III) ஆக்சலேட்டு என்பது ஒரு ரோசா நிறப் படிகமாகும். இது வெப்பமடையும் போது இதன் பன்னிருநீரேற்றிலிருந்து நீரற்ற வடிவத்திற்கு சிதைகிறது.[12] இதை மேலும் சூடுபடுத்தும்போது, Nd2O2C2O4 ஆகச் சிதைந்து, பின்னர் இறுதியாக நியோடிமியம்(III) ஆக்சைடைக் கொடுக்கிறது.[13]
நியோடிமியம்(III) கார்பனேட்டு என்பது நியோடிமியத்தின் கார்பனேட்டு உப்பாகும். இங்கு நியோடிமியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. நியோடிமியம்(III) குளோரைடை நீரில் கரைத்த அம்மோனியம் பைகார்பனேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் அல்லது நியோடிமியம்(III) குளோரோ அசெட்டேட்டை நீராற்பகுப்புக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.::[14]
- 2Nd(C2Cl3O2)3 + 3H2O → Nd2(CO3)3 + 6CHCl3 + 3CO2
நியோடிமியம்(III) அசிடேட்டு ஓர் ஊதா நிறத் திடப்பொருளாகும்.[15] நீரில் இது கரையும்.[16][17] சோடியம் அசிடேட்டு சேர்க்கப்படும் போது சேர்மத்தின் கரைதிறன் அதிகரிக்கிறது.[18] ஒரு நீல நிற அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது. நியோடிமியம்(III) குளோரைடு மற்றும் சோடியம் அசிடேட்டு ஆகியவற்றின் வினை மூலம் இதைப் பெறலாம்:[19]
- NdCl3 + 3Na(CH3COO) → Nd(CH3COO)3 + 3NaCl
கரிமநியோடிமியம் சேர்மங்கள்
தொகுநியோடிமியம்-கார்பன் பிணைப்பைக் கொண்ட சேர்மங்கள் கரிமநியோடிமியம் சேர்மங்களாகும். இந்த சேர்மங்கள் மற்ற இலந்தனைடுகளைப் போலவே இருக்கின்றன. π பின்னிணைப்புக்கு உட்படுத்த இயலா சேர்மங்களாக இவை வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் இவை பெரும்பாலும் அயனி வளைய பெண்டாடையீனைடுகள் (இலந்தனத்துடன் சமகட்டமைப்பு), σ-பிணைக்கப்பட்ட எளிய ஆல்கைல்கள் மற்றும் அரைல்கள் ஆகியவற்றுடன் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில பல்லுருவ அமைப்பிலும் இருக்கும்.[20]
பயன்பாடுகள்
தொகுநியோடிமியம்(III) குளோரைடு வலுவான ஒளிர்வைக் கொண்டிருக்கவில்லை.[21] இருப்பினும் இது பல்வேறு ஒளி உமிழும் பொருட்களுக்கு Nd3+ அயனிகளின் ஆதாரமாக செயல்படுகிறது. பிந்தையவற்றில் Nd-YAG சீரொளிகள் மற்றும் Nd-மாசிடப்பட்ட ஒளியியல் இழைப் பெருக்கிகள் ஆகியவை அடங்கும். இவை மற்ற சீரொளிகளால் உமிழப்படும் ஒளியைப் பெருக்கும். Nd-YAG சீரொளி 1.064 மைக்ரோமீட்டர்களில் அகச்சிவப்பு ஒளியை வெளியிடுகிறது. இது மிகவும் பிரபலமான திட-நிலை சீரொளி, அதாவது ஒரு திட ஊடகத்தை அடிப்படையாகக் கொண்ட சீரொளி ஆகும்.
நியோடிமியம் கண்ணாடி (Nd:கண்ணாடி) கண்ணாடி உருகலில் நியோடிமியம்(III) ஆக்சைடு (Nd2O3) சேர்ப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக பகல் அல்லது ஒளிரும் ஒளியில் நியோடிமியம் கண்ணாடி இளஞ்சிவப்பு நிறம் தோன்றுகிறது. ஆனால் அது ஒளிரும் விளக்குகளின் கீழ் வெளிர் நீல நிறத்தில் தோன்றுகிறது. நியோடிமியம் தூய ஊதா நிறத்தில் இருந்து மதுச்-சிவப்பு மற்றும் இலேசான சாம்பல் வரையிலான நிழல்களில் கண்ணாடியை வண்ணமயமாக்க பயன்படுத்தப்படலாம்.[22]
நியோடிமியம்(III) அசிடேட்டை யுரேனைல் அசிட்டேட்டுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம். இது எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படுத்தப்படுகிறது.[23] which is used in electron microscopy.<ref
மேற்கோள்கள்
தொகு- ↑ Burke M.W. (1996) Lighting II: Sources. In: Image Acquisition. Springer, Dordrecht. எஆசு:10.1007/978-94-009-0069-1_2
- ↑ Neodymium: reactions of elements பரணிடப்பட்டது 2022-11-12 at the வந்தவழி இயந்திரம். WebElements. [2017-4-10]
- ↑ 3.0 3.1 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 1081.
- ↑ Leonard F. Druding, John D. Corbett (October 1959). "Rare Earth Metal-Metal Halide Systems. The Preparation of Neodymium(Ii) Halides" (in en). Journal of the American Chemical Society 81 (20): 5512. doi:10.1021/ja01529a067. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01529a067. பார்த்த நாள்: 2022-07-19.
- ↑ Vent-Schmidt, Thomas; Fang, Zongtang; Lee, Zachary; Dixon, David; Riedel, Sebastian (2016-01-20). "Extending the Row of Lanthanide Tetrafluorides: A Combined Matrix-Isolation and Quantum-Chemical Study". Chemistry - A European Journal (Wiley) 22 (7): 2406–2416. doi:10.1002/chem.201504182. பன்னாட்டுத் தர தொடர் எண்:0947-6539. பப்மெட்:26786900.
- ↑ Meyer, G.; Morss, L.R. (2012-12-06). Synthesis of Lanthanide and Actinide Compounds. Springer Science & Business Media. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-3758-4.
- ↑ Riedel, S. (2013). "High-Valent Fluorides and Fluoro-Oxidizers". Comprehensive Inorganic Chemistry II. Elsevier. pp. 187–221. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-08-097774-4.00208-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080965291.
- ↑ 《无机化合物制备手册》.朱文祥 主编. 化学工业出版社. P701. 【XVI-97】八水硫酸钕(neodymium sulfate octahydrate)
- ↑ 《无机化学丛书》.第七卷 钪 稀土元素. P233. 11.硝酸盐及其复盐
- ↑ Gabisoniya, Ts. D.; Nanobashvili, E. M.. Synthesis of rare earth metal arsenates. Soobshcheniya Akademii Nauk Gruzinskoi SSR (1980), 97(2), 345-8. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3167
- ↑ Firsching, F. Henry. Solubility products of the trivalent rare-earth arsenates. Journal of Chemical and Engineering Data, 1992. 37 (4): 497-499. DOI:10.1021/je00008a028
- ↑ Gunther, Paul L.; Rehaag, Hildegard. The thermal decomposition of oxalates. I. The formation of peroxides by the thermal decomposition of oxalates in a vacuum. Berichte der Deutschen Chemischen Gesellschaft [Abteilung] B: Abhandlungen. 1938. 71B: 1771-1777. ISSN: 0365-9488.
- ↑ Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700.
- ↑ 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 黄春晖 等编.科学出版社. tr. 174, 碳酸盐. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-030574-9
- ↑ Sonia Gomez Torres, Gerd Meyer (2008). "Anhydrous Neodymium(III) Acetate" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 634 (2): 231–233. doi:10.1002/zaac.200700407. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3749.
- ↑ "American elements - Neodymium acetate".
- ↑ Perry, Dale L. (2016). Handbook of Inorganic Compounds (in German). CRC Press. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Holliday, A. K.; Massey, A. G. (2013). Non-Aqueous Solvents in Inorganic Chemistry (in German). Elsevier Science. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5941-6.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Mehrotra, R. C.; Misra, T. N.; Misra, S. N. Organic compounds of lanthanide elements: preparation of carboxylic acid salts of praseodymium and neodymium. Journal of the Indian Chemical Society, 1966. 1: 61-62. பன்னாட்டுத் தர தொடர் எண் 0019-4522
- ↑ Greenwood and Earnshaw, pp. 1248–9
- ↑ Henderson, B.; Bartram, Ralph H. (2000). Crystal field engineering of solid state laser materials. Cambridge University Press. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-59349-2.
- ↑ Kondrukevich, A.A., Vlasov, A.S., Platov, Y.T. et al. Color of porcelain containing neodymium oxide. Glass Ceram 65, 203–207 (2008). எஆசு:10.1007/s10717-008-9039-9
- ↑ Kuipers, Jeroen; Giepmans, Ben N. G. (1 April 2020). "Neodymium as an alternative contrast for uranium in electron microscopy" (in en). Histochemistry and Cell Biology 153 (4): 271–277. doi:10.1007/s00418-020-01846-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-119X. பப்மெட்:32008069.