நிரஞ்சனி அகத்தியன்
நிரஞ்சனி அகத்தியன் (Niranjani Ahathian பிறப்பு: சூன் 8, 1986) ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், ஆடைகலன் வடிவமைப்பாளரும், அழகுக்கலை ஒப்பனையாளரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணிபுரிகிறார் . இவர் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். மஞ்சள் என்ற பிரத்தியேகமாக பெண்களுக்கான நவநாகரீக இணைய வழி ஆடையகத்தை நடத்தி வருகிறார்.[1][2] கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை இவர் திருமணம் செய்து கொண்டார்.
நிரஞ்சனி அகத்தியன் | |
---|---|
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட விழாவில் நிரஞ்சனி, 2020 | |
பிறப்பு | 8 சூன் 1986 சென்னை, இந்தியா |
பணி | நடிகை, ஆடைகலன் வடிவமைப்பாளர், அழகுக்கலை நிபுணர் |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது வரை |
பெற்றோர் | அகத்தியன் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | தேசிங்கு பெரியசாமி (2021) |
உறவினர்கள் | விஜயலட்சுமி (சகோதரி) திரு (மைத்துனர்) கனி திரு (சகோதரி) |
தொழில்
தொகுஇவர் முதலில் தமிழ், தெலுங்கு திரையுலகில் மிகவும் விரும்பப்பட்ட ஆடை வடிவமைப்பாளரான நளினி ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றினார். ஸ்ரீராமுடன் பணிபுரிந்து அனுபவத்தைப் பெற்ற பிறகு, நிரஞ்சனி அகத்தியன் தனது திறமையை முயற்சித்தார். இவர் சிகரம் தொடு (2014), காவிய தலைவன், கபாலி (2016) போன்ற முக்கிய படங்களில் பணியாற்றினார்.[3]
திரைப்படவரிசை
தொகுஆடை வடிவமைப்பாளராக
தொகு- வாயை மூடி பேசவும் (2014)
- சிகரம் தொடு (2014)
- காவிய தலைவன் (2014)
- திரிஷா இல்லனா நயன்தாரா (2015)
- கதகளி (2016)
- பென்சில் (2016)
- கபாலி (2016)
- எனக்கு வாய்த்த அடிமைகள் (2017)
- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (2020)
திரைப்படம்
தொகு- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (2020) சிரேயா/வர்ஷா/தேன்மொழி
விருதுகள்
தொகு- காவிய தலைவனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி விருது
- காவிய தலைவனுக்கான விஜய் விருதுகள் [4]
- கபாலிக்கு ஆனந்த விகடன் விருது[5]
சான்றுகள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 15 April 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-15.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Niranjani Ahathian to act in Kannum Kannum Kollaiyadithaal". Behindwoods. 2018-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
- ↑ "siddharth has 25 looks in kaaviya thalaivan". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
- ↑ "vijay awards 2015 winners list". Ibtimes.co.in. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
- ↑ "ananda vikatan cinema awards 2016". Vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.