நிறம் (திரைப்படம்)

2007 திரைப்படம்

நிறம் (Niram) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். கே. கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் மணி, ஸ்ரீதர், ராஜு, சிந்துரி, ரிஷா, பாயல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், டெல்லி கணேஷ், சந்தான பாரதி, பெரியார்தாசன், சண்முகசுந்தரம், தாடி பாலாஜி முத்துக்காளை ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மலர்விழி ராமச்சந்திரன் தயாரித்த இப்படத்திற்கு சபேஷ் முரளி இசை அமைத்துள்ளனர். படமானது 4 மே 2007 அன்று வெளியானது.[1][2]

நிறம்
இயக்கம்எஸ். கே. கிருஷ்ணா
தயாரிப்புமலர்விழி இராமச்சந்திரன்
கதைஎஸ். கே. கிருஷ்ணா
இசைசபேஷ் முரளி
நடிப்பு
ஒளிப்பதிவுஜி. ஜெயபாலன்
படத்தொகுப்புஏ. ஜோசப்
கலையகம்சிறீ பகவதி அம்மன் மூவிஸ்
வெளியீடுசூன் 2, 2006 (2006-06-02)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிருஷ்ணா (மணி), சௌந்தர் (ஸ்ரீதர்), பாஸ்கி (தாடி பாலாஜி) ஆகியோர் சென்னையில் ஒரு தங்கும் விடுதியில் வசிக்கின்றனர். ஸ்ரீதர் இசை அமைப்பாளராகவும், கிருஷ்ணா திரைப்பட இயக்குனராகவும் விரும்புகிறனர். தூதஞ்சலில் பணிபுரியும் ராஜு (ராஜு) தனது சகோதரியை தன்னால் முடிந்த அளவு நன்கு பார்த்துக் கொள்கிறான். மேலும் அவன் அனாதை இல்லம் ஒன்றுக்கு நிதி உதவியும் செய்கிறான். பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ரத்னசாமியின் ( சந்தான பாரதி ) மகளும், இலண்டனில் ஒளிப்பதிவில் பயிற்சி பெற்ற ஸ்வேதா ( சிந்தூரி ) மூன்று இளைஞர்களையும் வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்திக்கிறாள். அவர்களின் உறுதியால் அவள் ஈர்க்கப்படுகிறாள். அவர்களுடன் ஒரு படத்தை தயாரிக்க ஸ்வேதா முடிவு செய்கிறாள்: படத்தின் நாயகனாக ராஜுவும், கிருஷ்ணா இயக்குநராகவும், ஸ்ரீதர் இசையமைப்பாளராகவும், ஸ்வேதா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிவதென முடிவாகிறது. இருப்பினும், அவளது தந்தை ரத்னசாமி புதுமுகங்களைக் கொண்டு படத்தை தயாரிப்பது ஆபத்தானது என்று கூறி அவர்களின் படத்திற்கு நிதியளிக்க மறுக்கிறார். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, நால்வரும் இறுதியில் திரைப்படத் தயாரிப்பாளர் கலிசிங்கத்தை ( டெல்லி கணேஷ் ) கண்டடைகின்றனர், அவர் அண்மையில் நிறைய தோல்விகளை எதிர்கொண்டவர். மேலும் அவர்கள் குறைந்த செலவில் தாங்கள் படத்தைத் தயாரித்து தருவதாக அவரை சமாதானப்படுத்துகின்றனர்.

சங்கீத வித்வானின் மகனான சௌந்தர் கடந்த காலத்தில் ஒரு இசைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். அப்போது அவரனது பெற்றோர் மகிழுந்து விபத்தில் சிக்கி நிகழ்விடதிலேயே இறந்தனர். கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் சென்னையில் கல்லூரியை விட்டு வெளியேறி இயக்குநராக முடிவு செய்தான். அவனது முடிவில் அதிருப்தி அடைந்த அவனது பெற்றோர் தங்களது மருமகள் கோகிலா (ரிஷா) உடன் அவனுக்கு திருமண ஏற்பாடு செயகின்றனர்: கிருஷ்ணனும் கோகிலாவும் குழந்தை பருவத்திலிருந்தே காதலித்து வந்தவர்கள். திருமணத்திற்கு சற்று முன்பு, கிருஷ்ணனுக்கு ஒரு தயாரிப்பாளரிடமிருந்து வந்த அழைப்பால் அவரைச் சந்திக்கச் சென்றான். இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தயாரிப்பாளர் திரைப்படத் திட்டதிலிருந்து விலகினார். இதன்பிறகு கிருஷ்ணனுக்கு உதவி இயக்குநராக மாறுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது.

தற்போது நால்வரும் படத்தின் படப்பிடிப்பை முடித்ததோடு, அவர்களின் காதல் படத்திற்கு "நிறம்" என்று பெயரிடுகின்றனர். இதற்கிடையில், ராஜுவும், ஸ்வேதா ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். திரைப்பட விநியோகஸ்தர்கள் புதுமுகங்கள் தயாரித்த படத்தை வாங்க தயாராக இல்லை. இதனால் கலிசிங்கம் தானே படத்தை வெளியிட முடிவு செய்கிறார். மோசமான சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் காரணமாக, ஒரு சிலர் மட்டுமே திரையடங்கில் படத்தைப் பார்க்க வருகிறார்கள். அவர்களின் நண்பர் பாஸ்கி அத் படத்தை காதலர் தினத்தன்று இலவசமாகக் காட்ட பரிந்துரைக்கிறார். இந்த இலவச திரையிடல் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. மேலும் படம் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறை விமர்சனங்களைப் பெறுகிறது, எனவே ரத்னசாமி படத்தை வாங்கவும் அதை தனது சொந்த பதாகையின் கீழ் வெளியிடவும் முடிவு செய்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியாக வெற்றியை ருசிப்பதில் நண்பர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். கிருஷ்ணன் தனது காதலி கோகிலாவுடன் சமரசம் செய்து கொள்வதுடன் படம் முடிகிறது.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

எஸ். கே. கிருஷ்ணா ஸ்ரீ பகவதி அம்மன் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட நிறம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க புதுமுகங்கள் மணி, கோலங்கள் புகழ் ஸ்ரீதர், ராஜு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் சிந்துரி, ரிஷா, பயல் ஆகியோர் முதன்மைப் பெண் பாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். இயக்குனர் கூறுகையில், "ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்பும் இளைஞர்கள் குழுவை நிறம் மையமாகக் கொண்டுள்ளது, மேலும் அவர்களின் இலக்கை அடைய அவர்களுக்கு ஏற்படும் தடைகளை எப்படி தாண்டுகிறார்கள் என்பதைக் காட்டுவதாக உள்ளது.[3][4]

திரைபட பின்னணி, பாடல்களுக்கான இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் சபேஷ்-முரளி மேற்கொண்டனர். இசைப்பதிவில் ஐந்து பாடல்கள் இருந்தன. பாடல்களுக்கான வரிகளை பா விஜய், பிறைசூடன், முத்து விஜயன், கலிமுருகன் ஆகியோர் எழுதினர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பூங்காற்றில் வாசம் வரும்"  பி. உன்னிகிருஷ்ணன் 6:03
2. "கான கோழிக்கு"  மாலதி லட்சுமணன் 4:00
3. "ஒரு எரிமலை"  திப்பு 4:39
4. "நினைவுகளே"  கல்யாணி, மாதங்கி ஜெகதீஷ் 5:17
5. "வளை இதழ்"  பிரசன்னா, கல்யாணி 2:42
மொத்த நீளம்:
22:41

குறிப்புகள்

தொகு
  1. "Jointscene : Tamil Movie Niram". jointscene.com. Archived from the original on 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  2. "Niram (2007)". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  3. "'Niram' Press Meet videos". indiaglitz.com. 9 April 2007. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  4. "Niram ready for release" (in Tamil). filmibeat.com. 3 March 2007. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறம்_(திரைப்படம்)&oldid=4121889" இலிருந்து மீள்விக்கப்பட்டது