நிலா நிலா ஓடி வா
நிலா நிலா ஓடி வா என்பது 2018 ஆம் ஆண்டு வியு என்ற இணையதளத்தில் வெளியான தமிழ் காதல் நகைச்சுவை மற்றும் பரபரப்பூட்டும் வலைத்தொடர் ஆகும். இந்த தொடரை நந்தினி என்பவர் இயக்க, ஓம் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஸ்வின் ககுமனு நடிக்க இவருக்கு ஜோடியாக நிலா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடிக்க,[2][3] இவர்களுடன் சேர்ந்து அனுபமா குமார், மிஷா கோஷல், ஸ்ரீகிருஷ்ணா தயால், அபிஷேக் வினோத், அஸ்வத் சந்திரசேகர், கேப்ரியெல்லா செல்லஸ், ஷிரா கார்க், ஹரிஷ் சி.கே, பவித்ரா,மற்றும் வினோ ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த தொடரை இயக்கிவர் திரு திரு துறு துறு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4]. இந்த தொடர் சூலை 24, 2018[5] முதல் அக்டோபர் 5 வரை மொத்தமாக 13 அத்தியாயங்களுடன் வியு[6][7] என்ற இணையத்தில் வெளியானது.
நிலா நிலா ஓடி வா | |
---|---|
வகை | காதல் நகைச்சுவை பரபரப்பு |
எழுத்து | நந்தினி |
இயக்கம் | நந்தினி |
படைப்பு இயக்குனர் | வெங்கடேஷ் ஹரிநாதன் |
நடிப்பு | |
முகப்பு இசை | அஸ்வந் நாகநாதன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 13 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | சென்னை |
ஒளிப்பதிவு | விஜய் ஆம்ஸ்ட்ராங்[1] |
தொகுப்பு |
|
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | வியு |
ஒளிபரப்பான காலம் | 24 சூலை 2018 5 அக்டோபர் 2018 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
கதை சுருக்கம்
தொகுஇந்த தொடரின் கதை பச்சை குத்தும் கலைஞரான ஓம் தனது தொழிலை சென்னையின் புறநகர் பகுதிதியில் புதிதாக துவங்குகிறார். அந்த தருணம் தனது கல்லூரி காலத்தில் காதலித்த பெண்ணான நிலாவை (சுனைனா) சந்திக்கின்றார் ஆனால் அவருக்கு காட்டேரி தாக்கியதன் மூலம் பழைய நினைவுகளை மறக்குகின்றார். இதற்க்கு பிறகு காட்டேரியான நிலவும் மனிதனுமான ஓமுக்கும் இடையில் காதல் மலர்கின்றது.
அதே தருணம் அலெக்ஸல் காட்டேரியான நிலா மறுபடியும் மனதினாக வர ஆசைப்படுகின்றார். ஸ்லேயர்ஸ் என்ற குழு மிருகங்களிடமிருந்து இரத்தத்தை எடுத்து காட்டேரிக்கு வழங்கிவருகின்றது. அவர்களின் உதவியை நாடும் நிலா, ஓமுக்கு தனது நண்பியான 125 வருட காட்டேரியை அறிமுகப்படுத்த முயல்கின்றார் ஆனால் அவர் ஓம் ஒரு மனித இனம் என்பதால் அவரை நிராகரிக்கிறார். இதற்க்கு பிறகு காட்டேரிக்கும் மனிதனுமான ஓமுக்கும் நடக்கும் யுத்தத்தில் கடைசியில் ஓமுமும் காட்டேரியாக மாறுகிறார்.
நடிகர்கள்
தொகு- அஸ்வின் ககுமனு - ஓம் பிரகாஷ்
- சுனைனா - நிலா
- அனுபமா குமார் - தேவி
- மிஷா கோஷல் - மீரா
- ஸ்ரீகிருஷ்ணா தயால் - ஜமால்
- அபிசேக் வினோத் - அலெக்ஸ்
- அஸ்வத் சந்திரசேகர் - தாமஸ்
- கேப்ரியெல்லா செல்லஸ் - பூங்கொடி
- ஷிரா கார்க் - பாட்ரிசியா
- பிரவீன் குமார் - விக்ரம்
- ஹரிஷ் சி.கே. - ஆனந்
- பவித்ரா - யமுனா
- வினோ
நடிகர்களின் தேர்வு
தொகுஇந்த வலைதொடரில் ஓம் பிரகாஷ் என்ற காதாபாத்திரத்தில் நடுநிசி நாய்கள், மங்காத்தா, ஏழாம் அறிவு, வேதாளம், ஜீரோ போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் அஸ்வின் ககுமனு என்பவர் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிக்க இவருக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன், வம்சம் மற்றும் நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை சுனைனா என்பவர் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் இருவரின் முதல் வலைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் சேர்ந்து வம்சம் (திரைப்படம்), முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) போன்ற திரைபபடங்களில் நடித்த நடிகை அனுபமா குமார் என்பவர் தேவி என்ற கதாபாத்திரத்திலும் நடிகை மிஷா கோஷல் மீரா என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் சன் தொலைக்காட்சி தொகுப்பாளி பவித்ரா யமுனா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
தயாரிப்பு
தொகுஇது 3 வருட இடைவெளியில் குறைந்தது 100 வலைத் தொடர்களை உருவாக்கும் நோக்கத்துடன் வியு நெட்வொர்க் உருவாக்கிய முதல் தமிழ் வலைத் தொடர் இதுவாகும்.[6][7] இந்த தொடரை இயக்குநர் நந்தினி என்பவர் இயக்கியுள்ளார். இது இவரின் முதல் வலைத் தொடர் ஆகும். பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Nalan Kumarasamy’s new series on TN weddings" (in en). Deccan Chronicle. 2018-07-27. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/270718/nalan-kumarasamys-new-series-on-tn-weddings.html.
- ↑ "Sunaina To Play A Vampire In Web Series" (in en-US). Silverscreen.in. 2018-07-20. https://silverscreen.in/tamil/news/sunaina-to-play-a-vampire-in-web-series/.
- ↑ "Anupama Kumar On Nila Nila Odi Vaa: It's A Fierce Character That I Have Tried To Play With Empathy" (in en). filmibeat. 2018-09-22. https://www.filmibeat.com/tamil/news/2018/anupama-kumar-on-nila-nila-odi-vaa-it-s-fierce-character-with-empathy-277656.html.
- ↑ tabloid!, Mythily Ramachandran, Special to (2018-07-18). "Nandhini JS directs Tamil vampire rom-com". GulfNews. https://gulfnews.com/tabloid/celebrity/nandhini-js-directs-tamil-vampire-rom-com-1.2253214.
- ↑ "Ashwin and Sunainaa’s web series, Nila Nila Odi Vaa, to be about vampires". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/jul/19/ashwin-and-sunainaas-web-series-nila-nila-odi-vaa-to-be-about-vampires-1845280.html.
- ↑ 6.0 6.1 "VIU launches in Tamil market with millennial-focused fresh content" (in en-US). Indian Advertising Media & Marketing News – exchange4media. https://www.exchange4media.com/marketing/viu-launches-in-tamil-market-with-millennial-focused-fresh-content_91242.html.
- ↑ 7.0 7.1 "Viu aims to produce at least 100 Tamil original series within three years". The New Indian Express. http://www.cinemaexpress.com/stories/news/2018/jul/25/viu-aims-to-produce-at-least-100-tamil-original-series-within-three-years-7143.html.