தமிழ் நீதி நூல்கள்

(நீதி நூல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு [1] எனக் குறிப்பிடுகிறது. ஆற்றில் வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடும். உயிரினங்களுக்கு உதவிக்கொண்டே ஓடும். அஃது அடித்துக்கொண்டு வந்தவை வண்டலாகப் படியும். அது போல உயிரினங்களுக்கு உதவுவது அறம். ஓடும் மண்ணில் ஊறி ஊற்றுத் தெளிவு போல் வெளிப்பட்டு உதவுவது ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைப் பிற்காலத் தமிழ் நீதி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது.

நீதம் என்னும் வடசொல் வெண்ணெயைக் குறிக்கும். பாலில் வெண்ணெய் எடுப்பது போல வாழ்க்கைப் பாங்கில் திரட்டப்பட்ட நல்லாறு [2] நீதி

மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துகள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், நீதி நூல் என்று கூறுமளவுக்குத் தனியான நூல் எதுவும் கிடைக்கவில்லை. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நூல்களுள் 11 நீதி நூல்களாகக் காணப்படுகின்றன. இவற்றுள் புகழ் பெற்றதும், பரவலாக அறியப்பட்டதும், வெளிநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததுமான நூல் திருக்குறளாகும்.

பட்டியல்

தொகு

சங்க காலம் - பதினெண் கீழ்க்கணக்கு

தொகு
  1. திருக்குறள்
  2. நாலடியார்
  3. நான்மணிக்கடிகை
  4. இன்னா நாற்பது
  5. இனியவை நாற்பது
  6. திரிகடுகம்
  7. ஆசாரக்கோவை
  8. பழமொழி நானூறு
  9. சிறுபஞ்சமூலம்
  10. ஏலாதி
  11. முதுமொழிக்காஞ்சி

இடைக்காலம்

தொகு

ஔவையார்

தொகு

பிற்காலம்

தொகு

சதகங்கள்

தொகு

நீதிக் கதை நூல்கள்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. அறத்தாறு இது என வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (திருக்குறள்)
  2. நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல் எனினும் ஈதலே நன்று (திருக்குறள்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நீதி_நூல்கள்&oldid=3212896" இலிருந்து மீள்விக்கப்பட்டது