நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை
நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 32 (ஆங்கிலம்: Malaysia Federal Route 32; அல்லது Nilai–KLIA Highway); மலாய்: Laluan Persekutuan Malaysia 32 அல்லது Lebuhraya Nilai–KLIA) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு கூட்டரசு சாலை ஆகும்.[1]
மலேசிய கூட்டரசு சாலை 32 Malaysia Federal Route 32 Laluan Persekutuan Malaysia 32 | |
---|---|
நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை Nilai–KLIA Highway Lebuhraya Nilai–KLIA | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 26.0 km (16.2 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | தஞ்சோங் டுவா பெலாஸ் சிலாங்கூர் |
பந்திங்–டெங்கில் புக்கிட் சங்காங் சாலை | |
கிழக்கு முடிவு: | நீலாய் நெகிரி செம்பிலான் |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | பந்திங், டெங்கில், புத்ராஜெயா, சைபர்ஜெயா, சாலாக் திங்கி, பண்டார் பாரு நீலாய் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
முன்பு இந்தச் சாலை சிலாங்கூர் மாநிலச் சாலை B20 என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலச் சாலை N20 என்றும் அறியப்பட்டது. எனினும் தற்போது, மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள மலேசிய பல்லூடகப் பெருவழி பகுதிக்கு ஒரு முக்கிய நெடுஞ்சாலையாகவும் அமைகிறது.[2]
பொது
தொகுநீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை 26.0 கிமீ (16.2 மைல்) நீளம் கொண்டது. இந்தச் சாலை மேற்கில் சிலாங்கூர் மாநிலத்தின் தஞ்சோங் டுவா பெலாஸ் (Tanjung Dua Belas) நகரத்தையும்; கிழக்கில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரத்தையும் இணைக்கிறது.
இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரத்தில் தொடங்குகிறது. 2010-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை மலேசிய கூட்டரசு சாலை 32 என மலேசிய பொதுப்பணித் துறையினால் உறுதி செய்யப்பட்டு மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.
மலேசிய பொதுப்பணித் துறை
தொகுஇந்தச் சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[3]
விளக்கம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
- ↑ "Jalan Labohan Dagang-Nilai FT32" (in மலாய்). Blog Jalan Raya Malaysia. 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
- ↑ "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.