புத்ரா ஜெயா-சைபர் ஜெயா விரைவுச்சாலை

மலேசிய கூட்டரசு சாலை 29

புத்ராஜெயா-சைபர்ஜெயா விரைவுச்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 29 (ஆங்கிலம்: Malaysia Federal Route 29; அல்லது Putrajaya–Cyberjaya Expressway); மலாய்: Laluan Persekutuan Malaysia 29 அல்லது Lebuhraya Putrajaya-Cyberjaya) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலம்; கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு முக்கியமான சாலை ஆகும்.

மலேசிய கூட்டரசு சாலை 29
Malaysia Federal Route 29
Laluan Persekutuan Malaysia 29

புத்ராஜெயா-சைபர்ஜெயா விரைவுச்சாலை
Putrajaya–Cyberjaya Expressway
Lebuhraya Putrajaya-Cyberjaya
வழித்தடத் தகவல்கள்
நீளம்:21.2 km (13.2 mi)
பயன்பாட்டு
காலம்:
1997 –
வரலாறு:கட்டுமானம் 2009
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:செர்டாங் மாற்றுச் சாலை
 

E11 டாமன்சாரா-பூச்சோங்

E26 தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு

E6 வடக்கு-தெற்கு மத்திய இணைப்பு

214 புத்ராஜெயா–டெங்கில் சாலை
31 பந்திங் சாலை–டெங்கில்
32 லாபோகான் டாகாங்–நீலாய்
27 கேஎல்ஐஏ வெளி வட்டச் சாலை

26 கேஎல்ஐஏ விரைவுச்சாலை
தெற்கு முடிவு: கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
புத்ராஜெயா; சைபர்ஜெயா; டெங்கில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
நெடுஞ்சாலை அமைப்பு

21.2 கிமீ (13.2 மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் உள்ள செர்டாங் மாற்றுச் சாலை வழியாக, சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் (KLIA) இணைகிறது.[1]

பொது

தொகு

புத்ராஜெயா-சைபர்ஜெயா விரைவுச்சாலைக்கான கிலோமீட்டர் 0 குறிப்பானது;   டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் தொடர்ச்சியாகும்.

எனவே,  புத்ராஜெயா-சைபர்ஜெயா விரைவுச்சாலையானது டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் அதே கிலோமீட்டர் 0 என்பதைப் பகிர்ந்து கொள்கிறது.

வரலாறு

தொகு

இந்தச் சாலை முன்பு பூச்சோங்கில் இருந்து டெங்கில் வரையிலான 15-ஆவது சிலாங்கூர் மாநிலச் சாலையாக அறியப்பட்டது. புதிய சாலைக்கான கட்டுமானம் 1997-இல் தொடங்கியது; மற்றும் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

சிப்பாங் நகரம்

தொகு

முதல் கட்டம் 1999-ஆம் ஆண்டில் முடிவடைந்தது; இரண்டாவது கட்டம் 2001-ஆம் ஆண்டில் முடிவடைந்தது; மற்றும் மூன்றாவது கட்டம் 2006-ஆம் ஆண்டில் முடிவடைந்தது.

சிப்பாங் நகரத்தை கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கும் நான்காவது கட்டம் 2009-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.

விளக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

வெளி இணைப்புகள்

தொகு