நுபியன் (/ˈnbiənz, ˈnj-/) என்பவர்கள் தற்போதய சூடான் மற்றும் தெற்கு எகிப்து ஆகிய பகுதிகளில் வாழும் பூர்வீக இனக்குழுக்களான நுபியன் மொழி பேசக்கூடிய ஆபிரிக்கா மக்கள் ஆவர். இவர்கள் மத்திய நைல் நதி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர். இவர்கள் நைல் நாகரிகத்தின் தொட்டில் காலத்திலிருந்து உருவானவர்கள் என நம்பப்படுகிறது.[2]

நுபியன்
மொத்த மக்கள்தொகை
நுபியன் மொழி பேசும் 1.7 மில்லியன் மக்கள் (SILன் படி 1996 ஆம் ஆண்டில்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சூடான்
 எகிப்து
மொழி(கள்)
நுபியன் மொழி ,
அரபு மொழி
சமயங்கள்
பெரும்பாலும் இஸ்லாம் (சன்னி, சுபி)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சூடான் அரேபியர்கள்[1], தமா, நாரா, கிழக்கு சூடான் மக்கள்

தோற்றம்

தொகு

எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் புதிய கற்காலம் பகுதியின் ஆரம்ப காலத்தில் நுபியன் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை வாடி ஹல்பா பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.[3] இப்பகுதி நுபியா என அழைக்கப்படுகிறது. இது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான கீழ் மற்றும் மேல் நுபியா குஷ் இராச்சியத்தின் பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள கர்த்தூம் பகுதியே நுபியா ஆகும்.[4]

எகிப்திய இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் எகிப்து பகுதியில் இருந்து நுபியா விடுபட்டது.[5] போர் வீரர்களான நுபியன் மக்கள் வில், அம்பு செய்வதில் வல்லவர்கள் ஆவர்.[6] நடுக்காலம் பகுதியில் நுபியன்கள் கிருத்துவம் மதத்தைத் தழுவி மூன்று நுபியன் இராச்சியங்களை அமைத்தனர். அவை முறையை வடக்கே நோபாடியா, மத்தியில் மகுரியா மற்றும் தெற்கே அலோடியா ஆகும்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Hale, Sondra (1973). Nubians: A Study in Ethnic Identity. Institute of African and Asian Studies, University of Khartoum. p. 24. பார்க்கப்பட்ட நாள் 14 November 2017.
  2. Charles Keith Maisels (1993). The Near East: Archaeology in the "Cradle of Civilization. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-04742-0.
  3. "Ancient Sudan~ Nubia: Burials: Prehistory". www.ancientsudan.org. Archived from the original on 2017-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-05-01.
  4. "Nubia - ancient region, Africa".
  5. Draper, Robert. "Black Pharaohs". National Geographic.
  6. Brier, Bob; Hobbs, A. Hoyt (2008). Daily Life of the Ancient Egyptians. Greenwood Publishing Group. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-35306-2.
  7. Sesana, Renato Kizito; Borruso, Silvano (2006). I Am a Nuba (in ஆங்கிலம்). Paulines Publications Africa. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789966081797.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூபியர்&oldid=3560981" இலிருந்து மீள்விக்கப்பட்டது