நெவின்ஸ் செல்வதுரை

இலங்கையின் தமிழ் ஆசிரியர்

நெவின்ஸ் செல்வதுரை (Nevins Selvadurai, 15 அக்டோபர் 1863 – 28 ஏப்ரல் 1938) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை உறுப்பினரராகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகவும் இருந்தவர்.

நெவின்ஸ் செல்வதுரை
Nevins Selvadurai
இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை தொகுதி உறுப்பினர்
பதவியில்
1934–1935
பின்வந்தவர் வைத்திலிங்கம் துரைசுவாமி
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 15, 1863(1863-10-15)
இறப்பு 28 ஏப்ரல் 1938(1938-04-28) (அகவை 74)
படித்த கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி
தொழில் ஆசிரியர்
இனம் இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கை தொகு

செல்வதுரை 1863 அக்டோபர் 15 இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] வட்டுக்கோட்டை ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணம் உவெசுலியன் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். 15 வயதில் சென்னை, மாநிலக் கல்லூரியில் சேர்ந்து அறிவியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1]

முத்துசுவாமி வாட்சன் என்பவரின் மகள் மார்கரெட் அன்னி பாப்பம்மா என்பவரை 1889 இல் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்குப் பல பிள்ளைகள் இருந்தனர்.

ஆசிரியப் பணி தொகு

பட்டம் பெற்றுத் திரும்பிய பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார்.[1] 1892 முதல் 1926 வரை இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.[1] பின்னர் சிறிது காலம் கண்டி திரித்துவக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார். 1923 சூன் மாதத்தில் கல்வியில் இவரது சேவைக்காக பிரித்தானிய இராச்சியத்தின் ஆணை விருது (Order of the British Empire) வழங்கப்பட்டது[2]

அரசியலில் தொகு

ஆசிரியப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், கல்வி வாரியன், பல்கலைக்கழகக் கல்லூரிப் பேரவை போன்ற பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.[1]

1934 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைக்கு ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் உறுப்பினரானார்.[1][3][4] 1936 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அருணாசலம் மகாதேவாவிடம் தோற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெவின்ஸ்_செல்வதுரை&oldid=3218974" இருந்து மீள்விக்கப்பட்டது