நேபாள மல்லி

நேபாள மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum nepalense) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், யாசுமினம் நேபாளன்சு என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. 1825 ஆம் ஆண்டு இதனைக் குறித்த பதிவேடு முதன்முதலாக உருவானது.[4] பின்பு 1827 ஆம் ஆண்டு இதன் பெயர் Jasminum nepalense என ஏற்றுக் கொள்ளப்பட்டது.[5] இதன் தாயகம் நேபாள நாடாக கருதுப்படுகிறது. இருப்பினும் இமாலய மலைத்தொடர் முதல் வடக்கு மியான்மர் வரையும் இருக்கலாம்.

நேபாள மல்லி
நேபாள மல்லி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. nepalense
இருசொற் பெயரீடு
Jasminum nepalense
Spreng.
வேறு பெயர்கள் [1]
  • Jasminum dichotomumD.Don
  • Jasminum brevipes Baker
  • Jasminum bukobense Gilg in H.G.A.Engler
  • Jasminum dichotomum var. brevitubum De Wild.
  • Jasminum gardeniodorum Gilg in D.Oliver
  • Jasminum gossweileri Gilg & G.Schellenb.
  • Jasminum guineense G.Don
  • Jasminum mathildae Chiov.
  • Jasminum noctiflorum Afzel.
  • Jasminum ternifolium Baker
  • Jasminum ternum Knobl.
  • Mogorium dichotomum (Vahl) Poir. in J.B.A.M.de Lamarck

பேரினச்சொல்லின் தோற்றம்

தொகு

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [6] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [7]

வாழிடம்

தொகு

பிறப்பிடம்: அசாம், கிழக்கு இமயமலைத் தொடர், மியான்மர், நேபாளம், மேற்கு இமயமலைத் தொடர் ஆகிய இடங்களை, இத்தாவரயினத்தின் பிறப்பிடங்களாக பன்னாட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.[8]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jasminum nepalense". Plants of the World Online (POWO) (in பிரித்தானிய ஆங்கிலத்திலுள்ள இணையப்பக்கம்). Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/boj.12385
  3. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  4. POWO-Jasminum dichotomum
  5. POWO-Jasminum nepalense
  6. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  7. etymonline
  8. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:609650-1#distributions
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மல்லி&oldid=3845340" இலிருந்து மீள்விக்கப்பட்டது