நேஹா துபியா

இந்திய நடிகை

நேஹா துபியா (Neha Dhupia) 27 August 1980 ஆகஸ்ட் 27 அன்று பிறந்த இந்திய நடிகை மற்றும் அழகு நிகழ்ச்சிகளில் வென்றவர் ஆவார். இவர் இந்தி, பஞ்சாபி, தெலுகு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் 2002 ஃபெமினா மிஸ் இந்தியா அழகு நிகழ்ச்சியில் வென்றவர். இவரது பாலிவுட் அறிமுகம் "கயாமத்: சிட்டி அன்டர் த்ரட்" என்றத் திரைப்படமாகும்.

நேஹா துபியா
அழகுப் போட்டி வாகையாளர்
நேஹா துபியா at the L'Oréal Femina Women Awards, 2013
பிறப்பு27 ஆகத்து 1980 (1980-08-27) (அகவை 41)[1][2]
கொச்சி, கேரளம், இந்தியா[3]
தொழில்நடிகர், விளம்பர நடிகை
செயல் ஆண்டுகள்2000 முதல் தற்போது வரை
உயரம்1.68 m (5 ft 6 in)[2]
Major
competition(s)
ஃபெமினா மிஸ் இந்தியா 2002
(வெற்றியாளார்)
மிஸ் யுனிவர்ஸ் 2002]]
(10 இறுதிப் போட்டியாளர்கள்)
Spouse
அங்கட் பேடி (தி. 2018)
Childrenமெஹ்ர் துபியா பேடி

இளமைக் காலம்தொகு

துபியா இந்தியவின் கொச்சியில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்துள்ளார்.[3][4] இவரது தந்தை கமாண்டர் பிரதீப் சிங் துபியா இந்தியக் கடற்படையில் பணி புரிந்தவர், மற்றும் இவரது தாயார், மன்பிந்தர் (பப்லி துபியா) ஒரு இல்லத்தரசி ஆவார். அவர் கடற்படையினருக்கான குழந்தைகள் பள்ளியில் பயின்றார், பின்னர் புது தில்லி ,தவுலா குவானில் இருக்கும் இராணுவ பொது பள்ளிக்கு மாற்றப்பட்டார்..[2]புதுதில்லியில் உள்ள தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த இயேசு மற்றும் மேரி கல்லூரியில் வரலாறு பட்டம் பெற்றார்.[5]

தொழில்தொகு

துபியா புது தில்லியில் சுவரெழுத்து என்ற ஒரு நாடகத்தில் அறிமுகமானார். பின்னர் அவர் இன்டிபாப் இசைக்குழுவான யுபோரியாவிற்கான ஒரு இசை வீடியோவில் தோன்றினார் மற்றும் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கும் தோன்றினார். பின்னர் அவர் தொலைக்காட்சி தொடரான "ராஜ்தானி"யில் தோன்றினார். 2002 ஆம் ஆண்டில் அவர் ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார், மேலும் பின்னர் போர்டோ ரீக்கோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2002 பட்டத்திற்கான போட்டியில் 10 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரானார்.

 
13 வது IIFA விருதுகள் பத்திரிகையாளர் மாநாட்டில் துபியா

திரை வாழ்க்கைதொகு

துபியா 1994 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படமான "மின்னராம்" திரைப்படத்தில் மோகன்லால் உடன் நடித்தார். 2003 ஆம் ஆண்டு வெளியான "கயாமத்: சிட்டி அன்ட் த்ரட்" என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானார், இது சுமாரான வசூலையே பெற்றுத் தந்தது.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

துபியா மும்பை மராத்தானுக்கு ஆதரவளித்தார், அது இந்தியாவின் அறக்கட்டளைக்கு 5 லட்சத்திற்கும் மேலாக உயர்த்த உதவியது[6] அவர் 2011 சிக்கிம் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரட்ட உதவினார்.[7] நடிகர்கள் சுனில் ஷெட்டி, விவேக் ஒபரோய், அனில் கபூர் மற்றும் நடிகை பிபாசா பாசு போன்ற பாலிவுட் நடிகர்களுடன் சிறப்பு விருந்தினராக ஹீரு கோல்டன் திரைப்பட விருதுகள் 2014 நிகழ்ச்சியில் பங்கேற்றார் .[8] மே 10, 2018 ஆம் ஆண்டு குருத்வாராவில் நடந்த ஒரு தனி விழாவில் நடிகர் ஆங்கட் பேடியை மணந்தார். 2008 நவம்பர் 18, அன்று, அவர் தனது முதல் குழந்தையான மெஹர் துபியா பேடிக்கு தாயானார்.[9]

குறிப்புகள்தொகு

  1. "Birthday Special: Neha Dhupia's FABULOUS life". Rediff (27 August 2014). பார்த்த நாள் 2016-09-05.
  2. 2.0 2.1 2.2 "Neha Dhupia Biography". Nehadhupia.net. மூல முகவரியிலிருந்து 30 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-09-05.
  3. 3.0 3.1 "Touchdown #kochi #kerela ... ( also my place of birth! )". பார்த்த நாள் 12 April 2013.
  4. "Neha Dhupia - It's all about the Bollywood". allindiansite.com. மூல முகவரியிலிருந்து 2004-12-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-09-05.
  5. "Shah Rukh Khan collects his degree after 28 years: 10 Bollywood stars who graduated from DU" (17 February 2016). பார்த்த நாள் 4 May 2016.
  6. "B-town celeb quotient high at Mumbai Marathon". Times of India. IANS. 16 January 2011. http://timesofindia.indiatimes.com/articleshow/7296846.cms?prtpage=1. பார்த்த நாள்: 7 October 2011. 
  7. Sen, Zinia (2 October 2011). "B'wood going all out to raise money". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Bwood-going-all-out-to-raise-money/articleshow/10204358.cms. பார்த்த நாள்: 7 October 2011. 
  8. "Hiru Golden Film Awards". hirugoldenfilmawards.hirutv.lk. பார்த்த நாள் 2016-09-05.
  9. "Neha Dhupia, Angad Bedi blessed with baby girl - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/neha-dhupia-angad-bedi-blessed-with-baby-girl/articleshow/66676967.cms. 

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Neha Dhupia
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேஹா_துபியா&oldid=3268449" இருந்து மீள்விக்கப்பட்டது