நைட்ரோசில் பெர்குளோரேட்டு
நைட்ரோசில் பெர்குளோரேட்டு (Nitrosyl perchlorate) என்பது NO(ClO4) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் ஒரு நீருறிஞ்சும் திண்மமாக நைட்ரோசில் பெர்குளோரேட்டு காணப்படுகிறது. நைட்ரசோனியம் நேர்மின் அயனியும் பெர்குளோரேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. ஓர் ஆக்சிசனேற்றியாகவும் ஒரு வலிமையான மின்னணு கவரியாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது. ஆனால் இச்சேர்மத்துடன் நெருங்கிய தொடர்புடைய உப்பான நைட்ரோசோனியம் டெட்ராபுளூரோபோரேட்டு NO (BF4) எளிதாகக் கிடைப்பதால் இது பயன்பாட்டில் இல்லை.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெர்குளோரைல் நைட்ரைட்டு
| |
வேறு பெயர்கள்
நைட்ரோசில் பெர்குளோரேட்டு
பெர்குளோரிக்கு நைட்ரசு நீரிலி | |
இனங்காட்டிகள் | |
15605-28-4 | |
ChemSpider | 154629 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 177613 |
| |
பண்புகள் | |
NOClO4 | |
வாய்ப்பாட்டு எடை | 129.46 கி/மோல் |
தோற்றம் | வெண்மை திண்மம் |
அடர்த்தி | 2.169 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) (சிதைவடையும்) |
வினைபுரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணப் படிகம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-154.0 கிலோயூல்/மோல்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநைட்ரோசில் பெர்குளோரேட்டு முதன் முதலாக 1909 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இருநைட்ரசன் மூவாக்சைடு வாயுவை அடர் பெர்குளோரிக்கு அமிலத்தில் செலுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது.:[1][2]
- N2O3 + 2 HClO4 → 2 NOClO4 + H2O
சோடியம் பெர்குளோரேட்டு மற்றும் கந்தக அமிலத்தின் கலவையில் இருநைட்ரசன் மூவாக்சைடு வாயுவை அனுப்புவதன் மூலமும் இதை தயாரிக்கலாம். நீரற்ற நைட்ரிக்கு அமிலத்துடன் இருகுளோரின் ஏழாக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் மிகவும் தூய்மையான நைட்ரோசில் பெர்குளோரேட்டை தயாரிக்கலாம்.[1]
கட்டமைப்பு
தொகுநைட்ரோசில் பெர்குளோரேட்டின் கட்டமைப்பு எக்சுகதிர் படிகவியல் சோதனைகள் மூலம் தெளிவுபடுத்தப்படவில்லை. இருப்பினும், NOClO4 சேர்மத்தின் இராமன் நிறமாலையியல் ஆய்வு நைட்ரோசில் பெர்குளோரேட்டில் தனித்துவமான NO+ மற்றும் ClO4- அயனிகளைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.[3]
பண்புகள்
தொகுநைட்ரோசில் பெர்குளோரேட்டு 100 °செல்சியசு வெப்பநிலையில் நைட்ரோனியம் பெர்குளோரேட்டாக சிதைகிறது, பின்னர் இது குளோரின் மற்றும் நைட்ரசன் ஆக்சைடுகளாக சிதைகிறது.[4][5]
நைட்ரோசில் பெர்குளோரேட்டு தண்ணீருடன் சேரும்போது நீராற்பகுப்பு வினைக்கு உட்படுகிறது. நைட்ரசு அமிலமும் பெர்குளோரிக்கு அமிலமும் உருவாகின்றன.:[4]
- NOClO4 + H2O → HNO2 + HClO4
சோடியம் ஐதராக்சைடு போன்ற வலிமையான காரத்துடன் வினைபுரிந்து பெர்குளோரேட்டு, நைட்ரைட்டு, நைட்ரேட்டு, நைட்ரிக் ஆக்சைடு மற்றும் தண்ணீரை இது உற்பத்தி செய்கிறது. நைட்ரோசில் பெர்குளோரேட்டின் உருவாதல் வெப்பத்தைக் கணக்கிட இந்த வினை பயன்படுத்தப்பட்டது. ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாக நைட்ரோசில் பெர்குளோரேட்டு, எத்தனால், அசிட்டோன், ஈதர் மற்றும் அனிலின் போன்ற பல்வேறு கரிம சேர்மங்களுடன் வெடிக்கும் வகையில் வினைபுரிகிறது.[2][4]
பயன்கள்
தொகுநைட்ரோசில் பெர்குளோரேட்டு ஒரு பெர்குளோரேட்டிங் முகவராக ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகிறது.[6][7] சாத்தியமான இராக்கெட் உந்துசக்தியாக ஆய்வு செய்யப்பட்டாலும், இது வணிகமயமாக்கப்படவில்லை.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Perchlorates: A Review of their Thermal Decomposition and Combustion, with an Appendix on Perchloric Acid". R.P.E. Technical Report 68 (11). 1968. https://apps.dtic.mil/sti/pdfs/AD0857556.pdf. பார்த்த நாள்: 28 December 2023.
- ↑ 2.0 2.1 K. A. Hofmann; Graf Armin Zedtwitz (1909). "Nitrosyl-perchlorat: das Anhydrid der salpetrigen Säure mit der Überchlorsäure" (in de). Berichte der deutschen chemischen Gesellschaft 42 (2): 2031-2034. doi:10.1002/cber.19090420285.
- ↑ William Rogie Angus; Alan H. Leckie (1935). "Investigations of raman spectra II—The raman spectra of perchloric acid and nitrosyl perchlorate" (in en). Proceedings of the Royal Society of London. Series A - Mathematical and Physical Sciences 150 (871): 615-618. doi:10.1098/rspa.1935.0125.
- ↑ 4.0 4.1 4.2 Markowitz, Meyer M.; Ricci, John E.; Goldman, Richard J.; Winternitz, Paul F. (1 July 1957). "The Chemical Properties of Nitrosyl Perchlorate: The Neutralization Equivalent". J. Am. Chem. Soc. 79 (14): 3659–3661. doi:10.1021/ja01571a013. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01571a013. பார்த்த நாள்: 31 October 2023.
- ↑ Glasner, A.; Pelly, I.; Steinberg, M. (4 February 1969). "Thermal decomposition of nitrosyl perchlorate and nitryl perchlorate—I: Mechanism of decomposition". J. Inorg. Nucl. Chem. 31: 3395–3404. doi:10.1016/0022-1902(69)80322-2. https://dx.doi.org/10.1016/0022-1902%2869%2980322-2. பார்த்த நாள்: 31 October 2023.
- ↑ Thomas J. Wierenga; J. Ivan Legg (1982). "Synthesis and characterization of cobalt(III) nicotinic acid complexes" (in en). Inorganic Chemistry 21 (7): 2881–2885. doi:10.1021/ic00137a071.
- ↑ M.M. Markowitz; J.E. Ricci; R.J. Goldman; P.F. Winternitz (1960). "A new method for the conversion of inorganic salts to the corresponding perchlorates" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 16 (1-2): 159-161. doi:10.1016/0022-1902(60)80104-2.