சோடியம் பெர்குளோரேட்டு
சோடியம் பெர்குளோரேட்டு (Sodium perchlorate) என்பது NaClO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பொதுவாகக் காணப்படும் பெர்குளோரேட்டு உப்புகளில் அதிக கரைதிறன் கொண்ட சேர்மமாக இது கருதப்படுகிறது. வெண்மை நிறப்படிகங்களாகக் காணப்படும் இச்சேர்மம் நீரை உறிஞ்சும் தன்மையுடன் உள்ளது. நீர் மற்றும் ஆல்ககாலில் நன்கு கரைகிறது. பொதுவாக இச்சேர்மம் ஒருநீரேற்று சேர்மமாக சாய்சதுரப் படிகங்களாகக் கிடைக்கிறது[1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடியம் குளோரேட்டு(VII)
சோடியம் ஐபர்குளோரேட்டு பெர்குளோரிக் அமிலம், | |
இனங்காட்டிகள் | |
7601-89-0 | |
ChEMBL | ChEMBL1644700 |
ChemSpider | 22668 |
EC number | 231-511-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 522606 |
வே.ந.வி.ப எண் | SC9800000 |
| |
UN number | 1502 |
பண்புகள் | |
NaClO4 NaClO4.H2O (ஒரு நீரேற்று) | |
வாய்ப்பாட்டு எடை | 122.44 கி/மோல் |
தோற்றம் | வெண்மைநிற படிகத்திடப்பொருள் |
அடர்த்தி | 2.4994 கி/செ.மீ3 2.02 கி/செ.மீ3 (ஒரு நீரேற்று) |
உருகுநிலை | 468 °C (874 °F; 741 K) (சிதைவடையும், நீரிலி) 130 °செ (ஒருநீரேற்று) |
கொதிநிலை | 482 °C (900 °F; 755 K) (சிதைவடையும், ஒருநீரேற்று) |
209.6 கி/100 மி.லி (25 °செ, நீரிலி) 209 கி/100 மி.லி (15 °செ, ஒரு நீரேற்று) | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4617 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0715 |
ஈயூ வகைப்பாடு | ஆக்சிசனேற்றி (O) தீங்கானது (Xn) |
R-சொற்றொடர்கள் | R9, R22 |
S-சொற்றொடர்கள் | (S2), S13, S22, S27 |
தீப்பற்றும் வெப்பநிலை | 400 °C (752 °F; 673 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் குளோரைடு சோடியம் ஐப்போகுளோரைட் சோடியம் குளோரைட் சோடியம் குளோரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் பெர்குளோரேட்டு பொட்டாசியம் பெர்குளோரேட்டு அமோனியம் பெர்குளோரேட்டு சீசியம் பெர் குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் பெர்குளோரேட்டின் உருவாதல் வெப்பம் −382.75 கியூ மோல்−1 ஆகும்[2]
பயன்கள்
தொகுபலவிதமான பெர்குளோரேட்டு உப்புகள் தயாரிப்பில் சோடியம் பெர்குளோரேட்டு முன்னோடியாக விளங்குகிறது. மற்ற பெர்குளோரேட்டுகள் இதனுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு கரைதிறனையே பெற்றிருக்கின்றன. சோடியம் பெர்குளோரேட்டின் கரைதிறன் 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் 209கி/100 மி.லி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சோடியம் பெர்குளோரேட்டுடன் ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் பெர் குளோரிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்.
சோடியம் பெர்குளோரேட்டு நீருறிஞ்சும் சேர்மமாக இருப்பதால் அதை பட்டாசுத் தொழிலில் பயன்படுத்துவதில்லை. அமோனியம் மற்றும் பொட்டாசியம் பெர்குளோரேட்டுகள் பட்டாசுத் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. சோடியம் பெர்குளோரேட்டு மற்றும் பொட்டாசியம் அல்லது அமோனியம் குளோரைடுகளின் கரைசலை இரட்டைச் சிதைவுக்கு உட்படுத்துவதால் இவ்வுப்புகளைத் தயாரிக்கமுடியும்.
ஆய்வகப் பயன்கள்
தொகுஅதிகம் வினைபுரியாத மின்பகுளியாக சோடியம் பெர்குளோரேட்டு ஆய்வகங்களில் பலவழிகளில் பயன்படுகிறது. மூலக்கூற்று உயிரியியலில் டி.என்.ஏவைப் பிழிந்தெடுக்கும் முறைகள் மற்றும் கலப்பினமாகும் வினைகள் இவ்வினைகளுக்கு உதாரணமாகும்.
மருந்துப் பொருளாக
தொகுஅதிதைராயிடு நோய் பாதிப்புடையவர்கள் அயோடின் எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் மருந்தாக சோடியம் பெர்குளோரேட்டு பயனாகிறது[3].
தயாரிப்பு
தொகுபிளாட்டினம் போன்ற செயல்திறனற்ற மின்வாயில் சோடியம் குளோரேட்டை நேர்மின் முனை ஆக்சிசனேற்றம் செய்வதால் சோடியம் பெர்குளோரேட்டைத் தயாரிக்க முடியும்[4]
ClO3−(நீர்த்த) + H2O(நீர்மம்) → ClO4−(நீர்த்த) + H2(வளிமம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Eagleson, Mary (1994). Concise Encyclopedia Chemistry. revised, illustrated. Walter de Gruyter. p. 1000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783110114515. பார்க்கப்பட்ட நாள் March 7, 2013.
- ↑ WebBook page for NaClO4
- ↑ Becker C. [Prophylaxis and treatment of side effects due to iodinated contrast media relevant to radiological practice]. Radiologe. 2007 Sep;47(9):768-73.
- ↑ Helmut Vogt, Jan Balej, John E. Bennett, Peter Wintzer, Saeed Akbar Sheikh, Patrizio Gallone "Chlorine Oxides and Chlorine Oxygen Acids" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH. எஆசு:10.1002/14356007.a06_483