பகுப்பு பேச்சு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்

அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்களைச் சீராக்கும் முறை:

  • அறுபட்டுள்ள கோப்புக்கு இணையாக வேறு படிமம் காமன்சில் இருந்தால் புதிய கோப்புக்கான இணைப்பை இட வேண்டும்.
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் மட்டுமே உள்ள கிரியேட்டிவ் காமன்சு உரிமம் இல்லாத படிமங்களை இங்கு பதிவேற்றுவதைத் தவிர்க்கலாம்.
  • தகுந்த படிமம் கோப்பு கிடைக்காத போது, படிமத்தையும் அதற்கான குறிப்பையும் முற்றிலும் நீக்கலாம்.
  • இவ்வாறான தொகுப்புகளைச் சிறு தொகுப்பாக குறிப்பதன் மூலம், அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசலைத் தவிர்க்கலாம்.
  • படிமத்தைச் சீராக்குவதோடு பக்கத்தையும் ஒரு முறை உரை திருத்த முனையலாம்.--இரவி (பேச்சு) 09:19, 14 சூலை 2012 (UTC)Reply
//* ஆங்கில விக்கிப்பீடியாவில் மட்டுமே உள்ள கிரியேட்டிவ் காமன்சு உரிமம் இல்லாத படிமங்களை இங்கு பதிவேற்றுவதைத் தவிர்க்கலாம்.// logo, symbol, currency போன்றவற்றை பதிவேற்றுவது தானே வழக்கம்.--சண்முகம்ப7 (பேச்சு) 09:43, 16 சூலை 2012 (UTC)Reply

இத்தகைய படிமங்கள் காமன்சில் கிடைப்பதில்லையா இல்லை அங்கே பதிவேற்றுவதில் காப்புரிமைச் சிக்கல் வருமா? பொதுவாக, தமிழ் விக்கிப்பீடியாவில் தனித்துப் பதிவேற்றுவதைத் தவிர்த்து காமன்சு பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற முறையிலேயே அவ்வாறு குறிப்பிட்டேன். --இரவி (பேச்சு) 13:17, 16 சூலை 2012 (UTC)Reply

காப்புரிமை சிக்கல்தான் இரவி. non free content எதையுமே காமன்சில் பதிவேற்ற இயலாது. கிரியேட்டிவ் காமன்சு உரிமம் இல்லாத படிமங்களை இங்குதான் பதிவேற்றியாக வேண்டும் :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:21, 16 சூலை 2012 (UTC)Reply

சரி. logo, symbol, currency போல காமன்சில் பதிவேற்றவே முடியாத சில வகைப் படிமங்களை மட்டும் இங்கு பதிவேற்றுவது தகுமே. இது போல் இன்னும் வேறு என்னென்ன வகைப்படிமங்கள் உள்ளன என்பதையும் அறியத்தரலாம்--இரவி (பேச்சு) 18:47, 16 சூலை 2012 (UTC)Reply

இங்கு குறிப்பிட்ட கட்டுரைகளில் பயன்படுத்தக்கூடிய நியாயமான பயன்பாட்டுப் படிமங்களை மட்டுமே தரவேற்றலாம். தரவேற்றுபவர் அதன் நியாயப் பயன்பாடு பற்றிய சுருக்கமான விளக்கமும் எங்கிருந்து பெற்றார் என்ற விபரத்தையும் தரவேண்டும். ஆங்கில விக்கியில் காமன்சுக்கு மாற்றக்கூடிய படிமங்கள் பல உள்ளன. அவற்றையும் இங்கு தரவேற்றுவதில் சிக்கலில்லை. உரிய வார்ப்புரு தெரிவு செய்யப்பட வேண்டும். அங்கு ஒருவர் {{pd-self}} வார்ப்புருவுடன் தரவேற்றினால், அதே வார்ப்புருவை நாம் இங்கு போடமுடியாது.--Kanags \உரையாடுக 21:17, 16 சூலை 2012 (UTC)Reply

தானியங்கித் துப்புரவு தொகு

ஆலமரத்தடியில் உரையாடலுக்கு ஏற்ப தானியங்கி தயாராகிவிட்டது. கொஞ்சம் சோதித்துப் பார்த்ததிலும் நிறைவாகவுள்ளது. பயனர் வெளி மற்றும் அனைத்துப் பேச்சு வெளியிலும் தேவையில்லை. முதன்மை வெளி, வார்ப்புருவெளி, வலைவாசல்வெளி ஆகியவை கண்காணிக்கத் தேவையென்று எண்ணுகிறேன். எந்தெந்த வெளிகளில் இதை ஏவவேண்டும் என்று இறுதியாகக் கூறினால் அவ்வாறு முடுக்கிவிடுகிறேன். இத்தானியங்கி 24 மணிக்கு ஒருமுறை இப்பகுப்பில் உள்ள கட்டுரைகளை ஆய்வு செய்து, அறுபட்ட கோப்புள்ள படிமத்தை நீக்கும். வேறு திருத்தமோ, காமன்சில் மாற்றமோ செய்யாது.-நீச்சல்காரன் (பேச்சு) 03:31, 14 அக்டோபர் 2015 (UTC)Reply

நன்றி நீச்சல்காரன். ஆம், நீங்கள் குறிப்பிட்டவாறு முதன்மை வெளி, வார்ப்புருவெளி, வலைவாசல்வெளி ஆகியவற்றுக்கு செயற்படுத்தலாம் என்பது என் கருத்து. குறிப்பு இவ்வாறான தொகுப்பு தவிர்க்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். --AntanO 04:40, 14 அக்டோபர் 2015 (UTC)Reply
நீங்கள் குறிப்பிட்ட வழு, சிக்கலான வார்ப்புரு, காட்சியகம் போன்றவை இன்னும் நிரலாக்கத்தில் தீர்வில்லாமல் நிலுவையில் உள்ளன. சீக்கிரத்தில் கண்டுபிடித்துத் தொடர் இயக்கத்தை அமைக்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 02:40, 20 அக்டோபர் 2015 (UTC)Reply
  விருப்பம்--AntanO 17:56, 22 அக்டோபர் 2015 (UTC)Reply
@Neechalkaran: தானியங்கி இயங்குகிறதா எனப் பாருங்கள். --AntanO 20:02, 13 திசம்பர் 2015 (UTC)Reply
வழு களையப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் இயக்கத்தை அரம்பிக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:07, 17 திசம்பர் 2015 (UTC)Reply
அவ்வழு களையப்பட்டு தொடர் முடுக்கத்தை வாரமொருமுறை என அமைத்துள்ளேன். சிக்கலான சிறிய வார்ப்புருவில் இருக்கும் கோப்புகளைத் தானியங்கி கொண்டு திருத்துவது பாதுகாப்பானதில்லை என்பதாலும், காட்சியகத்தில் அறுபட்ட கோப்பை எளிதாகக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதாலும் இவை தவிர மற்ற இடங்களில் உள்ளவற்றை இத்துப்புரவு நீக்கும்.-நீச்சல்காரன் (பேச்சு) 02:02, 21 திசம்பர் 2015 (UTC)Reply
  விருப்பம் --AntanO 02:04, 21 திசம்பர் 2015 (UTC)Reply
அதிகக் கட்டுரைகள் வருவதால், தினமும் இத்தானியக்கத்தை முடுக்கிவிட்டுள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 08:19, 2 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம் --AntanO 09:32, 2 சனவரி 2016 (UTC)Reply

வார்ப்புரு:FIAV தொகு

வார்ப்புரு பேச்சு:FIAV என்பதில் அமைப்பு மாற்றம் தேவை.--உழவன் (உரை) 02:23, 1 மார்ச் 2017 (UTC)

விக்சனரியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொகு

  • en:Wikipedia:Link rot என்பதன் சில கூறுகளை நாமும் ஏற்கலாம், எடுத்துக்காட்டாக, ஒரு இணைய இணைப்பு முறிந்து இருந்தால், அவற்றை நீக்குதலை விட, உரிய இணைப்புகளைத் தேடி இணைத்தல் சிறப்பு என்பதைக் கூறலாம். அதனை தமிழ் விக்சனரியில் நடைமுறைப் படுத்தவுள்ளேன். உங்களின் குறிப்புகளை, இந்த விக்சனரி பக்கத்தில் தருக --உழவன் (உரை) 09:06, 10 சூலை 2018 (UTC)Reply

தானியங்கி குறித்த இற்றை தொகு

ஒரு சில கட்டுரைகள் காக்கப்பட்டிருந்ததால் தானியங்கியால் திருத்த முடியாமல் பிழை ஏற்பட்டு கடந்த சில மாதங்களாகத் தானியங்கி துப்புரவு சரிவர வேலை செய்யவில்லை. இந்த வழு நீக்கப்பட்டு, அறுபட்டகோப்புகள் உள்ள முதன்மைப் பக்கங்கள் பெரும்பாலும் சீர்செய்யப்பட்டன. முதன்மை வெளி, விக்கிப்பீடியா வெளி, வலைவாசல் வெளி ஆகியவற்றில் தானியக்கம் முடுக்கப்பட்டுள்ளது. ஒருசில பக்கங்களில் படங்களை நீக்குவதற்கான யுக்திகளை இன்னும் மேம்படுத்திவருகிறேன். தானியக்கம் கண்காணிக்காத வார்ப்புரு வெளி, பயனர் வெளி, பேச்சு வெளி ஆகியவற்றில் அதிகமாகப் பக்கங்கள் தேங்கியுள்ளன. அவற்றை யாரேனும் திருத்தலாம். வேறு பின்னூட்டங்கள் இருந்தாலும் அளிக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 03:33, 13 மே 2023 (UTC)Reply

@Neechalkaran://தானியக்கம் கண்காணிக்காத வார்ப்புரு வெளி, பயனர் வெளி, பேச்சு வெளி ஆகியவற்றில் அதிகமாகப் பக்கங்கள் தேங்கியுள்ளன.// எவ்வகையான திருத்தங்கள் தேவைப்படும் என்பது குறித்து கூடுதல் தகவல்கள் தர இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:28, 13 மே 2023 (UTC)Reply
அடிப்படையில் சிவப்பு நிறமாக இருக்கும் அறுபட்ட படக் கோப்பினை நீக்க வேண்டும்.NeechalBOT அண்மைய திருத்தங்களைப் பார்த்தால் புரியலாம். ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வகையில் நீக்க வேண்டிவரலாம். சில இடங்களின் வேறு கோப்பினை இணைக்க வேண்டிவரலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 07:37, 13 மே 2023 (UTC)Reply
Return to "அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்" page.