பகுப்பு பேச்சு:த. இ. க. ஊராட்சித் திட்டம்

👍 விருப்பம்_ஸ்ரீதர்
நன்றி, Sengai Podhuvan. நீச்சல்காரன் இல்லையேல் இத்திட்டம் இல்லை. பாராட்டுகள் அனைத்தும் அவரையே சேர வேண்டும்.--இரவி (பேச்சு) 09:09, 12 நவம்பர் 2015 (UTC)Reply

தேடல் தொகு

  • ஏதோ ஒரு நப்பாசையில் என் சொந்த ஊர் செங்காட்டுப்பட்டி என்கிற இ. வரதராஜபுரம் ஊராட்சி மன்றம் பற்றித் தேடிப் பார்த்தேன். கிட்டவில்லை. செங்காட்டுப்பட்டி கட்டுரை உள்ளது. அதன் ஊராட்சி பற்றிய செய்தி அங்கு இல்லை. இயலுமேல் இணைக்க வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 21:35, 11 நவம்பர் 2015 (UTC)Reply
Sengai Podhuvan, ஊராட்சிகள் தொடர்பான கட்டுரைகளைப் பதிவேற்றும், பணி இன்னும் நிறைவடையவில்லை. ஒரே பெயருடைய ஊராட்சி உட்பட இன்னும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக தரவுகளை ஒவ்வொன்றாகச் சரி பார்த்து ஏற்ற வேண்டிய தேவையுள்ளது. நீச்சல்காரன் இது தொடர்பாக பின்னணியில் வேலைகளைச் செய்து வருகிறார்.--இரவி (பேச்சு) 07:57, 12 நவம்பர் 2015 (UTC)Reply
வரதராஜபுரம் ஊராட்சி (திருச்சிராப்பள்ளி) என்று ஒரு கட்டுரை உள்ளது. ராஜசேகர் (பேச்சு) 14:09, 25 ஆகத்து 2022 (UTC)Reply

ஒரே பெயருள்ள பல ஊர்கள் தொகு

  • த. இ. க. ஊராட்சித் திட்டம் கட்டுரைகள் நிறைவடையவில்லை,
  • மொத்தம் 12,618 கிராம ஊராட்சிகள் (Village Panchayats) இங்கு உள்ளன.
  • ஒரே பெயருள்ள பல ஊர்கள் உள்ளன
(எ கா )
ஆம் ஸ்ரீதர், பணி இன்னும் நிறைவடையவில்லை. ஒரே பெயருடைய ஊராட்சி உட்பட இன்னும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக தரவுகளை ஒவ்வொன்றாகச் சரி பார்த்து ஏற்ற வேண்டிய தேவையுள்ளது. நீச்சல்காரன் இது தொடர்பாக பின்னணியில் வேலைகளைச் செய்து வருகிறார்.--இரவி (பேச்சு) 07:56, 12 நவம்பர் 2015 (UTC)Reply

Sign Postஇல் தெரிவித்தல் தொகு

வணக்கம் . இந்தத் திட்டத்தை விக்கி "sign post" இல் ஒரு பதிவாக வெளியிடலாம் என்பது என் கருத்து . அந்த நுட்பம் ஏதே ஒரு மொழியில் , யாரோ ஒருவருக்கு உதவியாக இருக்கும் . மேலும் , பலருக்கு இது வியப்பாகவும் , தொழில்நுட்பத்தில் பங்குபெறவும் உதவியாக இருக்கும் .--Commons sibi (பேச்சு) 07:51, 12 நவம்பர் 2015 (UTC)Reply

Commons sibi - ஆம், பணி நிறைவடைந்த பிறகு விரிவான வலைப்பதிவுக் குறிப்பை எழுதித் தருகிறேன் என்று நீச்சல்காரன் தெரிவித்துள்ளார். விக்கிமீடியா வலைப்பதிவு, Signpost முதலிய இடங்களில் வெளியிடலாம். நுட்பம் மட்டுமல்லாது, பயன்பாடு மிகுந்த தரவுகளைக் கொண்டுள்ள அரசு உள்ளிட்ட நிறுவனங்கள் எப்படி விக்கிப்பீடியாவுடன் இணைந்து செயற்படலாம் என்பதற்கும் நல்ல முன்மாதிரி.--இரவி (பேச்சு) 07:55, 12 நவம்பர் 2015 (UTC)Reply

ஊராட்சித் தலைவர்களின் பெயர்கள் தொகு

10000 கட்டுரைகளில் ஊராட்சித் தலைவர் பெயர் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது. இவற்றை தேர்தல் ஆணையம் அல்லது ஆட்சியர்களிடமிருந்து பெற முடியுமா? தஇக வின் உதவியை கோர முயற்சிக்கவும். மாவட்ட வாரியாக பின்னர் வார்ப்புருவில் சேர்த்துவிடலாம். -- Mdmahir (பேச்சு) 10:10, 12 நவம்பர் 2015 (UTC)Reply

தகவல்கள் உள்ளன ஆனால் அவை ஆங்கிலத்தில் உள்ளதால் தவிர்த்துள்ளோம். எதிர்வரும் தேர்தலுக்குப்பிறகு நேரடியாகத் தமிழில் தரவுகளைத் தருவதாக அத்துறையினர் கூறினர். இடையில் சில மற்றுவழிகளில் அதாவது நேரடியாக ஊராட்சி அலுவலர் வழியாக அவற்றைச் சேர்க்க முடியுமா என்றும் பார்க்கிறோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:24, 12 நவம்பர் 2015 (UTC)Reply
தகவலுக்கு நன்றி நீச்சல்காரரே. --Mdmahir (பேச்சு) 12:58, 12 நவம்பர் 2015 (UTC)Reply

வட்டாரத்துக்கு பதில் ஊராட்சி ஒன்றியம் தொகு

வணக்கம் நீச்சல்காரன் ஊராட்சி கட்டுரைகளில் ஒரு ஊராட்சியைக் குறிப்பிட்டு அந்த ஊராட்சி இன்ன மாவட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்டபிறகு எடுத்துகாட்டாக மொரப்பூர் வட்டாரத்தில் (மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்) அமைந்துள்ளது என்பது போன்று சொற்றொடர் அமைந்துள்ளது. அதாவது ஒரு ஊராட்சி ஒன்றியத்தை குறிப்பிடுவதற்கு பதில் அந்த ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகத்தின் பெயரைக் குறிப்பிட்டு வட்டாரத்தில் என்று குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிரவாக அலகில் வட்டாரம் என்ற ஒன்று இல்லை என்றே கருதுகிறேன். இது போன்று அனைத்து கட்டுரைகளிலும் ஊராட்சி ஒன்றியம் என்பதற்கு பதிலாக வட்டாரம் என்ற சொல் கையாளப்பட்டுள்ளதை அண்மையில் கவனித்தேன். எனவே வட்டாரம் என்று குறிப்பிடும் இடத்தில் அதற்கு பதிலாக பதிலாக ஊராட்சி ஒன்றியம் என்ற சொல்லை கருவி வழியாக மாற்றி இடவேண்டும் என பரிந்துரைக்கிறேன். நன்றி--அருளரசன் (பேச்சு) 16:34, 16 சனவரி 2022 (UTC)Reply

இங்கே வட்டாரம் என்பது block. அதன் இணைப்புகள் எல்லாம் பொதுப் பெரயரைச் சுட்டிக் காட்டுவதால் ஒன்றியத்தைக் குறிப்பதாகத் தெரியலாம் ஆனால் அனைத்துக் கட்டுரைகளிலும் அவ்வாறு இருக்காது. உதா:மத்தியம்பட்டி ஊராட்சி எதிர்காலத்தில் ஒவ்வொரு தரவும் விக்கித்தரவில் இவை இணைக்கப்படும் போது இதற்கான சரியான தீர்வுகிடைக்கும். அல்லது தானியக்கவழியில் அனைத்துப் பக்கங்களிலும் மாற்றாமல் பயனரே அந்தந்த ஊராட்சிகளில் ஒன்றியப் பக்கத்தினைக் கூடுதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:41, 17 சனவரி 2022 (UTC)Reply
Return to "த. இ. க. ஊராட்சித் திட்டம்" page.