பசில் யோசப்

இந்தியத் திரைப்பட இயக்குனர்

பசில் யோசப் (Basil Joseph) (பிறப்பு 28 ஏப்ரல் 1990) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகரும் ஆவார், இவர் குறிப்பாக மலையாளத் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.[1]

பாசில் யோசப்
ஒரு நிகழ்ச்சியில் பாசில்
பிறப்பு28 ஏப்ரல் 1990 (1990-04-28) (அகவை 34)
சுல்தான் பத்தேரி, வயனாடு, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி
பணி
செயற்பாட்டுக்
காலம்
2013 –தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
எலிசபெத் சாமுவேல் (தி. 2017)

தொழில்

தொகு

பசில், 2012 இல் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்த காலத்தில் சிஇடி லைப் என்ற குறும்படத்தில் ஒரு நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். திருவனந்தபுரத்தில் உள்ள இன்ஃபோசிஸில் பணிபுரிந்த போது ஒரு துண்டு படம், பிரியம்வத கதராயனோ ஆகிய குறும்படங்களையும் இவர் எழுதி இயக்கியுள்ளார்[2].

பசில் மலையாளத் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வினீத் சீனிவாசனின் மூன்றாவது இயக்கமான திர என்ற படத்தில் 2013இல் அவருக்கு உதவி இயக்குனராக இருந்தார். மலையாளத் திரைப்பட சகோதரர்கள் வினீத் சீனிவாசன் , தயான் சீனிவாசன் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்த குஞ்சிராமயாணம் (2015) மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் 'தேசம்' என்றழைக்கப்படும் கற்பனை கிராமத்தைச் சேர்ந்த மக்களின் கதைகளை விவரித்தது. அங்கு புராணங்கள், புராணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த படம் 2015 மலையாளத் திரைப்பட ஓணம் வெளியீடுகளில் திரையரங்க வசூலில் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. பசில் ஜோசப்பின் இரண்டாவது இயக்க முயற்சியான கோதா, மல்யுத்தத்தை மையமாகக் கொண்ட ஒரு விளையாட்டு நகைச்சுவைத் திரைப்படமாகும். இது 2017 இல் வெளியான பஞ்சாபி நடிகை வாமிகா கப்பி என்பவரின் மலையாள அறிமுகமாகும். இவரது மின்னல் முரளி என்ற இவரது மூன்றாவது படத்தில் டோவினோ தாமசு அமானுட சக்திகளைக் கொண்ட நாயகனாக நடிக்கிறார். 2020இல் அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது படபிடிப்பிற்கு பிந்தைய பணிகளில் உள்ளது, மலையாளத் திரையுலகின் முதல் அதி நாயகன் படமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

இவர் 2013 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான அப் & டவுன்: முகலில் ஒரலுண்டு என்ற படத்தில் அறிமுகமானார். இன்றுவரை 18 மலையாளத் திரைப்படங்களில் பல்வேறு துணை நடிகர் வேடங்களில் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

தொகு

ஏழு வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்த[3][4] பின்னர் 17 ஆகஸ்ட் 2017 அன்று, எலிசபெத் சாமுவேல் என்பவரை மணந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Basil Joseph is an actor as well? - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  2. "It's a techie life: Password to reel adventures". The Hindu.
  3. "Godha director Basil Joseph to enter wedlock..."
  4. "Godha director Basil Joseph to tie the knot with his longtime girlfriend on August 17 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  5. "Basil Joseph hits the 30 milestone - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசில்_யோசப்&oldid=4171933" இலிருந்து மீள்விக்கப்பட்டது