பச்சா சரீன்
பச்சா சரீன் சான் (Bacha Zareen Jan) ( 1942கள் - 26 சூலை 2012; சில நேரங்களில் பச்சா ஜரின் என்று உச்சரிக்கப்படுகிறார். இவரது புனைப் பெயர் பீபி குல் என்பதாகும். "பஷ்தூன் கசல் இராணி" என்ற கௌரவப் பட்டத்தையும் கொண்டிருந்த [a] ஒரு பஷ்தூ பன்மொழி பாக்கித்தான் கசல் பாடகியும், பாடலாசிரியரும், இசைக்கலைஞரும் ஆவார். பாரசீகம், ஹிந்த்கோ, பஞ்சாபி, சராய்கி, உருது முக்கியமாக பஷ்தூ மொழி உட்பட வெவ்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடினார். .
பச்சா சரீன் | |||||
---|---|---|---|---|---|
இயற்பெயர் | பச்சா சரீன் சான் | ||||
பிற பெயர்கள் | பீபி குல், பஷ்தூ கசலின் இராணி | ||||
பிறப்பு | 1942கள் கல்பனாய், பர் கோதி, மர்தான், கைபர் பக்துன்வா மாகாணம் | ||||
பிறப்பிடம் | கைபர் பக்துன்வா மாகாணம் | ||||
இறப்பு | 26 July 2012 பெசாவர், பாக்கித்தான் | ||||
இசை வடிவங்கள் |
| ||||
தொழில்(கள்) |
| ||||
இசைத்துறையில் | 1948–அறியப்படவில்லை | ||||
இணைந்த செயற்பாடுகள் | வானொலி பாக்கித்தான், அனைத்திந்திய வானொலி | ||||
|
இவர் 1948 இல் பாக்கித்தானின் வானொலியில் "கிலா தா கபலோ கீகி" [b] என்ற பாடலுடன் பாக்கித்தானின் இசைத் துறையில் அறிமுகமானார். இவரது அடுத்த பாடல்கள் "ஜா பானா வளர்ஹா", "ரா ரா பந்தாய்", "ஹலகா பாலை மா நர்ஹவா" போன்ற பாடல்களையும், "அல்லா ஹோ ஷா" என்ற தலைப்பில் ஒரு சூபி பக்தி பாடலும் இருந்தது.[1]
வாழ்க்கையும் பின்னணியும்
தொகுசரீன் 1942 இல் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மர்தானில் பர் கோதி, கல்பனாயில் இசைக்கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு முன்பு, இவருடைய குடும்பம் முதலில் இந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்தது. இந்தியப் பிரிப்புக்குப் பின்பு இந்தியாவிலிருந்து பாக்கித்தானின் பெசாவர் நகரைச் சென்றடைந்தனர். இவருடைய தந்தை, உஸ்தாத் அப்துர் ரகீம் கான் ஒரு இசைக்கலைஞர் ஆவார். இவர் தன் தந்தையைப் பார்த்ததில்லை என்றும் நம்பப்படுகிறது. குஷ்ட பசிர் கான் மற்றும் குலாம் பரீத் கான் போன்ற பஷ்தூ கலைஞர்களிடமிருந்து பஷ்தூ இசையையும், கசல் பாடல்களைக் கற்றுக்கொண்டார். தனது குழந்தை பருவத்தில், இவர் தனது சொந்தப் பகுதியிலும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளிலும் பாடல்களைப் பாடினார்.[2]
தொழில்
தொகுசரீன் 1948 ஆம் ஆண்டில் தனது ஏழு வயதில் ஒரு வானொலி நிலையத்துடன் பஷ்தூ, பஞ்சாபி, ஹிந்த்கோ, உருது, சராய்கி, பாரசீக மொழிகளில் பாடல்களைப் பாடினார். பின்னர், இவருடைய மூத்த சகோதரி இவருக்கு பாடல்களைப் பயிற்றுவிப்பதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்தார். அனைத்திந்திய வானொலியின் இசை நிகழ்ச்சிகளுக்கும் இவர் குரல் கொடுத்தார். சில காலம், 1965 இந்திய-பாக்கித்தான் போருடன் தொடர்புடைய தேசபக்தி பாடல்களைப் பாடுவதிலும் சரீன் ஈடுபட்டிருந்தார்.[3] தனது வாழ்நாளில், இவர் பின்னர் மெஹ்ஃபில்-இ-சமா என்ற மாலை நேர கவிதைக் கூட்டங்களில் பங்கேற்று, சுஃபி பக்திப் பக்தி பாடல்களைப் பாடினார். அங்கு இவர் பஷ்தூ இசையமைப்பாளர் இரபிக் சின்வரியின் "ஆன்மீக மகள்" என்று அங்கீகரிக்கப்பட்டார். இவருடைய இசைப் பயணம் தொடங்குவதற்கு முன்பு, கைம்முரசு இணைக் கலைஞரான இவருடைய தந்தை உஸ்தாத் அப்துர் ரகீம் கான், இவரை பாக்கித்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (பிபிசி) அறிமுகப்படுத்தினார். 1950களின் முற்பகுதியிலிருந்து 1970களின் பிற்பகுதியில் வரை, இவர் ஒரே ஒரு பன்மொழி பஷ்தூ பாடகியாக, நேரடி இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினா. மேலும், ஒரு முக்கிய கசல் பாடகியாகவும், பாக்கித்தானின் முக்கியமாக கைபர் பக்துன்க்வாவில் கிராமிய இசைப்பாடகியாகவும் ஆனார். இவர் உருது, பஷ்தூ மொழியில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பீபி குல் என்ற பெயரில் எழுதினார். 1971 இந்திய-பாக்கித்தான் போரின் போது, தேசத்திற்கு ஆதரவாக இவர் தேசபக்தி பாடல்களைப் பாடினார். அதற்காக அரசுத் தலைவரும் இராணுவ சர்வாதிகாரியுமான அயூப் கான் இவருக்கு வாளையும் கைத்துப்பாக்கியையும் கொடுத்தார்.[4]
இறப்பு
தொகுஇவர் பல உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 26 சூலை 2012 அன்று, சிறுநீரக செயலிழப்பால் பெசாவர் நகரில் இறந்தார்.[5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A legend fades: The Queen of Pashto ghazals passes away". The Express Tribune. July 26, 2012.
- ↑ Report, Bureau (July 26, 2012). "After singing for 50 years, Pashto singer Zareen Jan is dead". DAWN.COM.
- ↑ Report, Bureau (July 26, 2012). "After singing for 50 years, Pashto singer Zareen Jan is dead". DAWN.COM.Report, Bureau (July 26, 2012). "After singing for 50 years, Pashto singer Zareen Jan is dead". DAWN.COM.
- ↑ "Bacha Zarin Jan: A melody queen forgotten". The Express Tribune. August 2, 2012.
- ↑ "Renowned Pashto singer Bacha Zarin Jan passes away". The Nation. July 26, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pashto folk singer dies after protracted illness". www.thenews.com.pk.[தொடர்பிழந்த இணைப்பு]