பஜாஜ் குயூட்
பஜாஜ் குயூட் முன்பு பஜாஜ் ஆர்ஈ60 என அழைக்கப்பட்டது (Bajaj Qute, earlier called Bajaj RE60) என்பது நான்குபேர் பயணிக்கும் பின்புற எஞ்சின் கொண்ட மலிவு விலை மகிழுந்து ஆகும்.[2][3] இதை இந்திய நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியப் போக்குவரத்துச் சந்தையை முதன்மை இலக்காக கொண்டு தயாரித்துள்ளது. இந்த மகிழுந்தானது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்த முதல் நான்கு சக்கர வாகனம் ஆகும். இது 2012 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி வெளிவந்தது.[4] என்றாலும் இந்தியாவில், குவாட்ரி சைக்கிள் எனப்படும் நான்கு சக்கரங்களைக் கொண்ட இந்த சிறிய ரக மகிழுந்துகளுக்கு சட்டபூர்வ அனுமதி இல்லாத காரணத்தால் விற்பனைக்கு இன்னும் வரவில்லை.
உற்பத்தியாளர் | பஜாஜ் ஆட்டோ |
---|---|
வேறு பெயர் | ஆர்ஈ60 |
உற்பத்தி | 2013-தற்போதுவரை |
பொருத்துதல் | 2+2[1] |
முன்பு இருந்தது | இல்லை |
இல்லை | |
வகுப்பு | சிறியரகம் |
உடல் வடிவம் | monocoque |
இயந்திரம் | 200சிசி |
செலுத்தும் சாதனம் | மனிதச்செயல், 4 கியர் |
அகலம் | 1312 மிமீ |
உயரம் | 1650 மிமீ |
குறட்டுக்கல் எடை | 400கிகி |
22 மே 2013 அன்று, இந்திய ஒன்றிய அரசு சட்டபூர்வமாக இந்த மகிழுந்தை குவாட்ரி சைக்கிள் என வகைப்படுத்தியது. இது மணிக்கு 90 கிமீ வேகத்தை எட்ட முடியாத வாகனமாக உள்ளதால், ஆட்டோ ரிக்சாக்களுக்கு பதிலாக வணிக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.[5]
வரலாறு
தொகு2010 இல், பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது ரெனால்ட் மற்றும் நிசான் மோட்டார் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 2,500 அமெரிக்க டாலர் விலையில் மகிழுந்தை உருவாக்குவதாக அறிவித்தது, இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 கிலோமீட்டர்கள் per லிட்டர் (85 mpg‑imp; 71 mpg‑US) (3.3 L/100 km) செல்லத்தக்கதாகவும், மேலும் மற்ற சிறிய ரகக் மகிழுந்துகள் வெளியிடும் புகை அளவை விட மிக மிகக் குறைவானதாகவும் ( 100 g/km) உள்ளது.[6][7]
முதன் முதலில் 2012ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த மகிழுந்தை பஜாஜ் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.[8] பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது குதியுந்து மற்றும் மூன்று சக்கர ஆட்டோ ரிக்சாக்களுக்கு மிகவும் பிரபலமானது, மேலும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளவில் முன்னிலையில் உள்ளது. குயூட் வாகனத்தின் வழியாக நான்கு சக்கர வாகனச் சந்தையில் பஜாஜ் நிறுவனம் முதன்முதலில் நுழைந்துள்ளது. நிறுவனமானது தன் அறிமுகத்தில் இந்த மகிழுந்தானது 35 km/l (99 mpg‑imp; 82 mpg‑US) செல்லக்கூடியது மற்றும் குறைந்த அளவு கார்பண்டை ஆக்சைடை உமிழக்கூடியது என அறிவித்தது.[9]
இது ஏறக்குறைய ஆட்டோ ரிக்சாவை போன்றதுதான், என்றாலும் ஆட்டோ ரிக்சாவை விட இது பாதுகாப்பானது. இதன் அடிப்படை வடிவமைப்பில் வாடகை மீட்டர் பொறுத்தப்பட்டிருக்கும் ஆனால் இதன் உள்புறம் மகிழுந்தின் தோற்றத்தைக் கொண்டதாக இருக்கும். அத்துடன் இதற்கு ஸ்டீரிங் வீலும் இருக்கும். ஓட்டுநர் உள்பட நான்கு பேர் இதில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.[10]
தொழில்நுட்ப குறிப்புகள்
தொகுஇந்தக் காரின் பின்புறத்தில் என்ஜினும் அது 200 சிசி திறன் கொண்டதாகவும், ஒற்றை சிலிண்டர் கொண்ட, நான்கு ஸ்டிரோக் இன்ஜினைக் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ. ஆகும். இந்த என்ஜின் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி-யில் இயங்கும் வகையிலானது. இதில் மோட்டார் சைக்கிள் உள்ளதைப் போன்று 5 கியர்கள் உள்ளன. இது 400 கிலோ எடைகொண்டதாக உள்ளது. பஜாஜின் முதல் நான்கு சக்கர வாகனத்தின் திருப்பு ஆரமானது 3.5 மீட்டர் ஆகும்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "‘RE60 developed in 4 years’". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 January 2012. http://timesofindia.indiatimes.com/business/india-business/RE60-developed-in-4-years/articleshow/11358590.cms. பார்த்த நாள்: 4 January 2012.
- ↑ "How Rajiv Bajaj created a quadricycle and why nobody likes him for it - Business Today". Businesstoday.intoday.in. 2013-09-29. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.
- ↑ "RE 60: Bajaj Auto unveils first four-wheeler; plans to target over 5 mn 3-wheelers". தி எகனாமிக் டைம்ஸ். 4 January 2012. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/auto/automobiles/re-60-bajaj-auto-unveils-first-four-wheeler-plans-to-target-over-5-mn-3-wheelers/articleshow/11359481.cms. பார்த்த நாள்: 4 January 2012.
- ↑ "Bajaj RE60: Target audience of rickshaw drivers offer their review". என்டிடிவி. 4 January 2012 இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120104080704/http://www.ndtv.com/article/india/bajaj-re60-target-audience-of-rickshaw-drivers-offer-their-review-163476. பார்த்த நாள்: 4 January 2012.
- ↑ "Indian government releases draft notification on Quadricycles; Advantage Bajaj RE 60 - Indian Cars Bikes". Indiancarsbikes.in. Archived from the original on 2014-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.
- ↑ "How green is my low-cost car? India revs up debate". ENN. 2008-06-19. பார்க்கப்பட்ட நாள் 2010-11-24.
- ↑ "Bajaj small car may cost Rs 1.1 lakh - News - Zigwheels". Timesofindia.zigwheels.com. Archived from the original on 2010-05-30. பார்க்கப்பட்ட நாள் 2010-11-24.
- ↑ "2012 Auto Expo - Bajaj RE60 unveiled". 3 January 2012. Moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2012.
- ↑ "RE60: Bajaj Auto unveils Tata Nano rival". 3 January 2012. truthdive.com. Archived from the original on 21 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 5 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "A Foothold Market -- In Rickshaws". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 2011-01-13.
- ↑ Staff (2015-10-12). "Upcoming Bajaj RE60 Car in India, Expected Launch Dates, Price". cartrade.com. Archived from the original on 2015-10-03. பார்க்கப்பட்ட நாள் 2018-06-19.
{{cite web}}
: More than one of|author=
and|last=
specified (help)