பஜாஜ் குழுமம்
பஜாஜ் குழுமம் (Bajaj Group) என்பது ஓர் இந்திய பன்னாட்டு நிறுவனமாகும் . இது ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் மும்பையில் 1926இல் நிறுவப்பட்டது. [2] இது மகாராட்டிராவின் மும்பையை தளமாகக் கொண்ட மிகப் பழமையான மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். [3] இந்தக் குழுமம் 34 நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அதன் முதன்மை நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் நான்காவது பெரிய இரு மற்றும் முச்சக்கர வண்டி உற்பத்தியாளராக தரப்படுத்தப்பட்டுள்ளது. [4] பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பஜாஜ் பின்சர்வ் நிறுவனம், ஹெர்குலஸ் ஹோயிஸ்ட்ஸ் நிறுவனம், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ், முகந்த் நிறுவனம், பஜாஜ் இந்துஸ்தான் நிறுவனம் மற்றும் பஜாஜ் ஹோல்டிங் & இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ஆகியவை குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும். [5] ஆட்டோமொபைல்கள் (2- மற்றும் 3 சக்கர வாகனங்கள்), வீட்டு உபகரணங்கள், விளக்குகள், இரும்பு மற்றும் எஃகு, காப்பீடு, பயண மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இக்குழுமம் ஈடுபட்டுள்ளது.
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1926 |
நிறுவனர்(கள்) | ஜம்னாலால் பஜாஜ் |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம்[1], இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுதும் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | குழுமம் |
உற்பத்திகள் | |
வருமானம் | ▲₹425.540 பில்லியன் (US$5.3 பில்லியன்) |
பணியாளர் | 45,000 |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
|
இணையத்தளம் | bajajgroup |
வரலாறு
தொகுபஜாஜ் குழும நிறுவனங்கள் ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் நிறுவப்பட்டது.
கமல்நயன் பஜாஜ் (1915-1972)
தொகுஜம்னாலா பஜாஜின் மூத்த மகனான கமல்நயன் பஜாஜ், இங்கிலாந்தின் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த பிறகு வியாபாரத்திலும்,சமூக சேவையிலும் தனது தந்தைக்கு உதவ இந்தியா திரும்பினார். இருசக்கரவண்டி, முச்சக்கர வண்டி, சீமைக்காரை, அலாய் காஸ்டிங், மின்சார சாதனங்கள் போன்றத் தயாரிப்பில் கிளைத்து வணிகத்தை விரிவுபடுத்தினார். 1954 ஆம் ஆண்டில், பஜாஜ் குழும நிறுவனங்களின் நிர்வாகத்தை கமல்நயன் ஏற்றுக்கொண்டார்.
இராம்கிருட்டிண பஜாஜ் (1924-1994)
தொகுஜம்னலாலின் இளைய மகன் இராம்கிருட்டிண பஜாஜ் 1972 இல் தனது மூத்த சகோதரர் கமல்நயன் பஜாஜின் மரணத்திற்குப் பிறகு பொறுப்பேற்றார். வணிகப் பொறுப்புகளைத் தாங்குவதோடு மட்டுமல்லாமல், இராமகிருட்ணாவின் ஆற்றல்கள் பெரும்பாலும் பஜாஜ் குழுமத்தின் சமூக சேவை மற்றும் சமூக நலத் திட்டங்களை நோக்கி இயக்கப்பட்டன. அவர் 1961 இல் உலக இளைஞர்களுக்கான (இந்தியா) சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டில் இளைஞர் மேம்பாட்டு அமைப்பான விசுவ யுவக் கேந்திரத்தை உருவாக்கி உருவாக்கிய இந்திய இளைஞர் மைய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பதவியையும் வகித்தார். [6]
ராகுல் பஜாஜ்
தொகுபஜாஜ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராகுல் பஜாஜ் ஜம்னாலால் பஜாஜின் பேரன் ஆவார். மும்பையில் உள்ள கதீட்ரல் என்ற பள்ளியிலிருந்து பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, மும்பை அரசு சட்டக் கல்லூரி, அமெரிக்காவின் ஆர்வடு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து தனது படிப்பைத் தொடர்ந்தார். இவர் 1965 இல் பஜாஜ் குழுமத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இத நிறுவினார். [7] இந்தியக் குடியரசுத்தலைவர் 2017 ஏப்ரல் 27அன்று திரு. ராகுல் பஜாஜுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான சிஐஐ குடியரசுத்தலைவர் விருதை வழங்கினார். [8]
பிற குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்
தொகுஇந்த குடும்பத்தின் குறிப்பிடத்தக்க சில உறுப்பினர்கள் பின்வருமாறு:
- ஆனந்த் பஜாஜ் : நிர்வாக இயக்குநர், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம்.
- சேகர் பஜாஜ்: தலைவர், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம்.
பஜாஜ் குழு நிறுவனங்கள்
தொகுபெருநிறுவன சமூக பொறுப்பு
தொகுபஜாஜ் குழுமம் பல்வேறு வகையான சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அவை அதன் நிறுவனங்களுடனும், அறக்கட்டளைகளின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்படுகின்றன. பஜாஜ் குழுமத்தின் சமூக, பொதுநல நோக்கங்கள் பல அறக்கட்டளைகள் மூலமும், தொண்டு நிறுவனங்கள் மூலமும் நிறைவேற்றுகிறது. இது ஆண்டுதோறும் ₹100 மில்லியன் (US$1.3 மில்லியன்) வரை செலவிடுகிறாது. [9]
கல்வி
தொகுஇந்திய இளைஞர்களுக்கு கல்வி கற்பதற்காக சிம்சா மண்டல் வர்தா என்ற அமைப்பு 1914 ஆம் ஆண்டில் ஜம்னாலால் பஜாஜால் நிறுவப்பட்டது. [10] இந்த மண்டலி தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி உட்பட பல தேசிய தலைவர்களின் ஆதரவைப் பெற்றது. பட்டப்படிப்பு மட்டத்தில் இந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பாடப்புத்தகங்களைத் தயாரித்து தேர்வுகளை நடத்திய இந்தியாவின் முதல் நிறுவனம் இதுவாகும். தற்போது, அமைப்பு இரண்டு வணிகக் கல்லூரிகளை ( வர்தாவிலும், நாக்பூலும்), ஒரு அறிவியல் கல்லூரி ஒரு வேளாண் கல்லூ, கிராமப்புற நிறுவனம், வர்தாவில் ஒரு பாலிடெக்னிக் ஆகியவற்றை நடத்தி வருகிறது. மேலும் 2017 ஆம் ஆண்டில் அதன் முதல் பொறியியல் நிறுவனமான வர்தா பஜாஜ் தொழில்நுட்ப நிறுவனத்தை [11] தொடங்கியது. அதன் பட்டியலில் கிட்டத்தட்ட 10,000 மாணவர்கள் உள்ளனர். அதன் அறிவியல் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் சிறந்து விளங்கும் கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வேளாண் கல்லூரி அதன் இணை பல்கலைக்கழகத்தால் 'ஏ' தரம் என மதிப்பிடப்பட்டுள்ளது .
சிஞ்ச்வட்டில் உள்ள கமல்நயன் பஜாஜ் பள்ளி 1976 இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், இது மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி வழங்கும் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் இது ஒரு கல்லூரியையும் நடத்தத் தொடங்கியது.
தியானேசுவர் வித்யாபீடத்தின் தன்னாட்சி பொறியியல் பள்ளியை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் துணைத் தலைவரான மதுர் பஜாஜ் ஆதரித்தார் [12] இது பல்வேறு பொறியியல் தொழில்முறை படிப்புகளை வழங்குகிறது.
ஜானகி தேவி பஜாஜ் மேலாண்மை ஆய்வுகள் நிறுவனம் ஆகத்து 1997 இல் நிறுவப்பட்டது. இது மேலாண்மை ஆய்வுகள் மற்றும் எஸ்.என்.டி.டி மகளிர் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை கல்வி முதுகலை துறை ஆகும். இது முதுநிலை மட்டத்தில் பல்வேறு வகையான முழுநேர மற்றும் பகுதிநேர தொழில்முறை படிப்புகளையும், குறிப்பாக பெண்களுக்கு நிர்வாகத்தில் சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bajaj Offices". Bajajelectricals.com. பார்க்கப்பட்ட நாள் 2011-01-28.
- ↑ "Bajaj Group targets banking space". Financialexpress.com. 22 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-01-28.
- ↑ "Bajaj Electricals Bajaj Group". Bajajelectricals.com. பார்க்கப்பட்ட நாள் 2011-01-28.
- ↑ "Bajaj Group India – Bajaj Group of Companies – Profile of Bajaj Group of Companies – Bajaj Group History". Iloveindia.com. 21 July 2007. Archived from the original on 1 January 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-01-28.
- ↑ "Business Line : Today's Paper News : Bajaj group dispute resolved amicably". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 2011-01-28.
- ↑ "Vishwa Yuvak Kendra". www.vykonline.org. Archived from the original on 2020-05-31. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
- ↑ "WHO IS RAHUL BAJAJ". https://www.business-standard.com/about/who-is-rahul-bajaj.
- ↑ "Rahul Bajaj bagged CII President's Award for Lifetime Achievement".
- ↑ "Beyond Profits". Bajaj Electricals.
- ↑ "Shiksha Mandal, Wardha" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
- ↑ http://bit.shikshamandal.org/ பரணிடப்பட்டது 2020-08-15 at the வந்தவழி இயந்திரம் http: // bit shikshamandal.org/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-11.